01-22-2005, 03:08 PM
எம்தமிழர் சிலர் இன்னும் திருமண அழைப்பிதழை விவாக சுபமுகூரத்த அழைப்பு என்று அச்சடிப்பதை பார்க்க கூடியதாக இருக்கிறது.விவாகம் என்றால் அதன் சரியான தமிழ் விளக்கம் தூக்கி கொள்ளுதல் என்பதே(விளக்கம் தந்தவர் யாழ் பல்கலைகழக வடமெழி பேராசிரியை) தூக்கி கொள்ளுதல் எப்படி (சுபமுகூர்த்தம்) நல்லநேரம் ஆகும். அடுத்தது பேச்சு வழக்கில் அனேகமானேர் கலியாணம் என்றே அழைக்கின்றனர்.கலி என்றால் துன்பம் யாணம் என்றால் தெடர்வது..அதாவதுதொடரும் துன்பம் என்பது பொருள்(சிலருக்கு அப்படியும் இருக்கலாம்) எனவே திருமணம் என்று அழைப்பதோ அல்லது அழைப்பிதழில் அச்சடிப்பதே சிறந்தது.திரு என்பது (அழகு:சிறப்பு:செல்வம்:பொலிவு:மேன்மை)இப்படி மணம்என்றால்(கூட்டம் :மகிழ்ச்சி:சேர்க்கை) இப்படி எல்லாமே மங்கல சொற்கள் எனவே திருமணமே நறுமணம்.
; ;

