Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வேயாளர்கள் கிளிநொச்சி செல்வதில் சிறிய தாமதம்
#2
சுனாமியால் பாதிக்கப்பட தமிழர் பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற நோர்வேக்குழுவினரின் பயணம் அரசினால் திட்டமிட்ட முறையில் இழுத்தடிப்பு.

ஜ சனிக்கிழமைஇ 22 சனவரி 2005 ஸ ஜ ஆசிரியர் கொக்கட்டிச்சோலை ஸ
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடச் சென்ற நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் பயணத்தை அரசு திட்டமிட்ட முறையில் இழுத்தடித்து வருவதாகவும் காலநிலையினையும் ää போக்குவரத்தையும் காரணம் காட்டி நோர்வேத் தரப்பினரை வன்னிப் பகுதிக்கு நண்பகல் வரை செல்லவிடாமல் தடுத்து வருவதாகவும் அறியமுடிகிறது. வழமையாக காலை 11 மணிக்கு நோர்வேத் தரப்பினர் வன்னிக்கு வருகைதருவதாக இருந்த போதும் இவர்கள் பிற்பகல் வரைக்கும் வன்னிக்கு வரவில்லையென்று அறியமுடிகிறது. முல்லைத்தீவு மற்றும் செம்பியன்பற்றுப் போன்ற தமிழீழக் கரையோரப் பகுதிகளுக்கான நோர்வே அமைச்சர்களின் பயணங்களைத் தடுக்கும் முகமாக இந்தத் திட்டமிட்ட பயண இழுத்தடிப்பு தென்னிலங்கையரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பல மணிநேரம் இழுத்தடித்து ஏற்றிவரப்பட்ட நோர்வே விசேட குழுவினர் அனுராதபுரத்தில் தற்போது தரையிறக்கப்பட்டுத் தரைவளியாக மிகவும் மெதுவாகவும் சுற்றுப்பாதைகள் மற்றும் நேரத்தை இழுத்தடிக்கும் தூரப்பாதைகள் ஊடாக அழைத்து வரப்படுவதாக அறியமுடிகிறது.

பிற்பகல் 4 மணிக்குப் பிறகு அழிந்து போன பிரதேசங்களை நோர்வேத் தரப்பினர் சென்று பார்வையிட முடியாது. அதேபோன்று வழமையான பேச்சுவார்த்தை 3 மணிநேரம் செல்வதால் இவற்றையெல்லாம் சுருக்கி இன்றய நிகழ்விற்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசு சாதுரியமாக நடந்துள்ளது.

அரசின் அழுத்தங்களின் வரிசையில் கோபி அனான் தடுக்கப்பட்டார்ää உலக நிவாரணங்கள் நிறுத்தப்பட்டதுää பொருளாதாரம் முடக்கப்பட்ட வரிசையில் இன்று நோர்வேத் தரப்பினரின் பயணமும் அரசால் முடக்கப்பட்டுள்ளது.

நோர்வேத் தரப்பில் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீட்டர்சன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் செல்வி கெல்டே பிரதி வெளிவிவகார அமைச்சர் விதாகெல்கிசன் சமாதான விசேட தூதுவர் எரிக்சொல்கைம் ஆகியோருடன் நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் தூதுவரக அதிகாரிகளும் அங்கம் வகிக்கின்றனர்.

உதாரணம் திருமலைக்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ சரக்குக் கப்பலைத் தாக்கியழித்துவிட்டு 3 தினங்களாக நோர்வேத் தரப்பினரைச் சம்பவம் நடந்த இடத்திற்கு இலங்கை அரசு கூட்டிச் செல்லாமல் தவிர்த்து வந்ததும் காலநிலை சீரின்மை என்று காரணம் காட்டியதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

Source: Nitharsanam
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-22-2005, 12:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)