01-22-2005, 01:09 AM
shiyam Wrote:ஓஓ என் பழையவளே
வருடங்கள் எத்தனை போனபின்பும்
உன்நினைவுகளில் நான்
என்நினைவுகளை நீ எத்தனையாவது
பக்கத்தில் பதிந்து வைத்திருக்கறாய்
உன்பெயரை மறக்க நான்உண்ட
தூக்கமாத்திரை கூட தோத்து போனதே
நீ மாறியிருக்கிறாய்
கண்ணருகே கருவளையம்
கருங்கூந்தல் நிறம்மாறி ஆனால்
உதடுகள்மட்டும் அதேசிரிப்பு
இப்போதும் நாம் பேச போவதில்லையா??
பேசமுடிந்தபோது பிரிந்தவர்கள்
பேச முடியாத போது சந்திக்கிறோம்
உன்நினைவுகள் உன்குழந்தையைபோல
உறங்கியிருக்கலாம்
ஆனாலும் ஒரேயொரு கேள்விதான்
நீயும் என்னை காதலித்தாயா??
எந்த வரியினைப் பாராட்ட ? எந்தவரிக்காக அழவது ? வாழ்த்துக்கள் சியாமண்ணா. பழைய ஞாபகங்கள் தோண்டப்படும் போது இப்படியான ஞாபகங்கள் வரத்தான் செய்யும்.
ஆனால் அண்ணியிடம் அடிவாங்காமல் இருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::

