01-21-2005, 01:32 PM
![[Image: Two%2520Dogs.jpg]](http://images.google.co.uk/images?q=tbn:WaeVmUu3gdQJ:www.doggiedrawings.com/Images/Two%2520Dogs.jpg)
துயரங்கள் என்னை
துரத்திவர
துணைக்கு நீ உண்டென
துயர் சுமந்து உன்
தூய்மையான அன்பை நாடி
ஓடி நான் வர..
ஈரமில்லா நெஞ்சுடன
ஏளனமாய் என்னை நீ பார்க்க
உன்னை நம்பி வந்த
உள்ளம் சிதறியபின்
தலை குனிந்து செல்கிறேன்..
தலை இடிக்கு மருந்து நீ என
தவிப்புடன் வந்தேன்..
நெஞ்சு வலி நீ கொடுக்க
நிலை தளர்ந்து
தலை குனிந்து செல்கிறேன்..
பிரிவுகள்ள் விரட்டிட.
துயுரங்கள் துரத்திட
தனிமை தாண்டவமாடிட
சுமைகள் நெரிச்சிட
உன்னுடன் பகிர்ந்திட வந்தேன்..
நானே உனக்கு பகிடியான பின்
என் சொந்தம்
நானே என்ற உண்மை
அறிந்து செல்கிறேன்.
இனியொரு முறை உன்னை
நாடுவதில்லை என்ன முடிவுடன்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

