01-21-2005, 12:02 PM
ragavaa Wrote:tamilini Wrote:ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..??
காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.
அந்த எழுத்தாளரிடம் கேளுங்கள் அன்பு, பாசம், நேசம் இவைகள் எங்கிருந்து கிளம்புதாம் என்று...அதெங்க அவற்ற காலுக்காலையே...!
எல்லோருக்கும் தெரியும் மூளையில் இருந்துதான் உணர்வுகள் பிறக்கின்றன, உணரப்படுகின்றன என்பது...கண் பார்த்தாலும் உணராது மூளைதான் உணர்வது..பார்ப்பதை கடத்துவதும் உணர வைப்பதும் இரசாயனம் தான்.....பார்வைகள் எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபட வாய்ப்பிருக்கோ..அதேபோல் மூளைக்கு மூளை உணரப்படும் உணர்வுகளின் தன்மையிலும் வேறுபாடுகள் இருக்கு அதற்கு சந்தர்ப்பமும் அதிகம்...!
ஆண் பெண் காதல் என்பது பாலீர்ப்பு சம்பந்தப்பட்ட அன்புமிகுந்த காமம் கடந்தும் இருக்கலாம்... இல்லை...அன்பு மிகுந்து காமம் கலந்தும் இருக்கலாம்...காமம் மிகுந்து அன்பு கலந்தும் இருக்கலாம் அது அந்தந்த மூளையில் நிகழும் சிந்தனைக்குரிய இரசாயன மாற்றங்களின் அடிப்படையில் தங்கி இருக்கிறது...! எந்த இடத்திலும் அன்பில்லாமல் காதல் இல்லை...! அன்புக்கு அறிவு...அதாவது புத்தகம் படிக்கிற அறிவு தேவையில்லை...அன்பு மனிதனுக்கு மட்டுமல்ல...மற்ற உயிரிகளிடத்தும் அவற்றிற்கிடையே பரிமாறப்படுவதுதான்...அவற்றிற்கு என்ன புத்தகப் படிப்பா இருக்கு...ஆனா குறிப்பாக தமிழர்களிடத்தில் ஒரு வழக்கம் இருக்கு....படிச்சாத்தான் காதல் என்று...சிலர் பல்கலைக்கழ்கம் நுழைந்த மறுநாளோ...இல்ல பல்கலைக்கழகம் நுழைய வாய்ப்புக் கிடைக்கும் என்றாலோ...காதலிக்கத் துணிந்துவிடுவார்கள்..அது என்ன காதலோ...???!
ஆனா இன்னொரு விசயத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்சுவைக்குரியது....!<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


