Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அந்தமான், நியூசிலாந்தில் தொடரும் நிலநடுக்கம்
#1
ஜனவரி 21, 2005

அந்தமான், நியூசிலாந்தில் தொடரும் நிலநடுக்கம்

டெல்லி வெலிங்டன்:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும், நியூசிலாந்திலும் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.



லிட்டில் நிக்கோபார் தீவின் மேற்குக் கரையோரத்தில் இன்று அதிகாலை 12.56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.2 ஆக இது பதிவானது. இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

நியூசிலாந்தில்..:

அதேபோல் நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனின் வடக்குப் பகுதியில் இந்திய நேரப்படி அதிகாலை 12.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.5 ஆக பதிவானது.

இதில் உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. கடைகளில் இருந்த பொருட்கள் அலமாரியில் இருந்து கீழே விழுந்தாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை இதே பகுதியில் 10 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஒரு தொடர்விளைவுதான் என்றும் யாரும் பீதியடையத் தேவையில்லை என்றும் நியூசிலாந்து புவியியல் நிபுணர் கெவின் பெனாக்டி கூறினார்.

Source:Thatstamil
Reply


Messages In This Thread
அந்தமான், நியூசிலாந்தில் தொடரும் நிலநடுக்கம் - by Vaanampaadi - 01-21-2005, 11:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)