01-21-2005, 07:35 AM
shiyam Wrote:(முதிர் கன்னி)
தன் கன்னிமை
உடைக்க காத்திருந்தாள்
உண்டியல் உடைக்கும்வரை
தமிழரின் பழக்கவழக்கங்கள் எவ்வளவு தூரம் பிற்போக்கானவை, முட்டாள்தனமானவை என்பதனை இந்த கவிதை நறுக்காக எடுத்து கூறுகிறது. முட்டாள்தனமான, பிற்போக்கான மக்களை மற்றவர்கள் ஆதிக்கப்படுத்துவதும், ஆட்டிவைப்பதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே.
மேற்படி கவிதை
<ul>
<li> தமது துணையை வயது வந்தும் தானாகவே தேடிக்கொள்ள வக்கற்ற தமிழ் பெண்களின் பிற்போக்குத்தனத்தையும்
<li> அதை வைத்து வியாபாரம் செய்யும் ஒட்டுமொத்தமான தமிழரின் சுரண்டல் கலாச்சாரத்தையும்
<ul>
சில வரிகளில் வெட்கப்படும்படி காட்டியிருக்கிறது. ஆனால், இப்படி எத்தனையோ கவிதைகள் எழுதியும், அதனிலும் மேலாக வெட்கப்படத்தக்க எத்தனையோ நடந்தும் இந்த வெட்கம் கெட்ட இனம் முன்னேற பின்னிற்பது தான் பரிதாபகரமானது.

