01-20-2005, 02:34 PM
தமிழ் நிலா தெரியாததை கேட்பதில் தவறில்லை..அதாகப்பட்டது அம்மி மிதிப்பது அகலிகை கதை படித்திருப்பீரகள். இந்திரனால் பாலியல் வன்முறைக்கு உட்பட் அகலிகையை கணவர் கவுதம முனிவர் கல்லாக போகுமாறு சபிக்கிறார் . அதனால்தான் கல்லாக இருக்கும் அம்மியை மிதிப்பதன் மூலம் மணப்பெண்ணை நீயும் கற்பிழந்தால்(இல்லா ஒண்டு)நீயும் கலாகபோவாய் எனவே நீயும் கற்பில் கல்லாய் உறுதியாய் இரு என்பதை அடையாளப்படுத்தவே அம்மி மிதித்தல்.உதாரணத்திற்கு கலியாணத்திற்கு பிறகு அப்பிடி இப்பிடி நடக்கக் கூடாது எண்டு முதலே சத்தியம் வாங்குதல்.கேவலமாக இல்லையா????.அடுத்தது அருந்ததி பார்த்தல் அருந்ததி என்பது வசிட்டரின் மனைவி அதுவும் ஒரு முனிவர்தான்.அவர் கற்புகரசியாய் திகழ்ந்து மும்மூர்த்திகளின் சோதனையையும் வென்றதால் அவரை வானத்தில ஒரு நட்சத்திரமாக வாழ மும்மூர்த்திகளும் அருள் கொடுக்கிறார்கள்.(இந்த கதைகளெல்லாம் ஆணாதிக்க பிராமணிகளால் புனையப்பட்ட வக்கிரங்கள்)அதேபோல் நீயும் கற்புகரசியாக இரு எனபற்காக காட்டுவது அதைவிட அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரணமாக கண்களால் பார்க்க முடியாத ஏழு நட்சத்திர கூட்டத்தில் உள்ளது அதை நடு சாமத்திலேயே வடிவா பார்க்க இயலாது அதை பிராமணி பகலில் காட்டுவார் அதுவும் அய்ரோப்பாவில் கலியாண மண்டபத்திலருந்தே அண்ணாந்து பார்க்க சொல்லுவார்(மேலே உள்ள கூரைதான் தெரியும்)இப்படி ஏன் செய்கிறேம் எதற்கு செய்கிறோம் பிராமணி என்ன சொல்கிறார் எண்டு விளங்காமலேயே காலம் காலமாய் செய்து கொண்டிமுக்கிறார்கள் எம் மக்காள்
; ;

