08-11-2003, 05:31 PM
<b>ஆண் - பெண் - மூளை</b>
<b>எழுத்தாக்கம்: Christine Biegert ©
மொழிபெயர்ப்பு: இளைஞன்</b>
-------------------------------------------------------------------------------------
<img src='http://mitglied.lycos.de/ilaignarkal/men_women_brain/pen1.jpg' border='0' alt='user posted image'>
<b>முன்னுரை</b>
"ஆண்கள் பெண்களைவிட புத்தி கூர்மையானவர்கள்". இநதக் கருத்தானது மனித சமுதாயத்திடை பல
நூற்றாண்டு காலமாக நிலவி வந்தது. ஆயினும் ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னர், இறந்த
மனிதர்களின் மூளையை ஆராய்ந்து அளந்து இக்கருத்திற்கு மேலும் வலுச்சேர்த்தான். இந்த மனித
மூளையானது ஆண்களிடம் பாரமானதாகவும், பெரியதானதாகவும் உள்ளது. அதன் அடிப்படையில்
ஆண்களின் மூளையானது பெண்களின் மூளையைக் காட்டிலும் 10 இலிருந்து 15 வீதம் நிறை
கூடியதாகவே உள்ளது. நிச்சயமாக இந்த ஆய்வின் முடிவானது ஆண் சமுதாயத்தைப் பொறுத்தவரை,
அல்லது ஆணாதிக்க சமுதாயத்தைப் பொறுத்தவரை ஆண்கள் பெண்களிலும் சிறந்தவர்கள் என்று
தம்பட்டம் அடித்துக் கொள்ள ஒரு ஆதாரமாக இருந்திருக்கும். ஆனாலும் இன்றைய புதிய அறிவியல்
உலகில் மனிதனானவன், சமத்துவம் பேணாத அந்தக் கருத்தியல் கற்பனையை முழுவதுமாக உடைத்து
எறியும் வண்ணம், பெண்களின் மூளை குறைந்த நிறையுடையதாயினும் 11 வீதம் அதிக Neurone களை
கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்துவிட்டான்.
ஆணினம் தாம் பெண்களிலும் உயர்ந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்வதற்கான இன்னொரு காரணம்
அவர்கள் சில cognitive இயல்புகளில் (உதாரணம்: பரிமாணப் பொருட்களின் தோற்றங்களை விளங்கிக்
கொள்ளல், கணித அடிப்படையிலான முடிச்சுக்களை அவிட்டு முடிவு காணல், ஒரு குறிநோக்கி
முன்னேறும் இயல்புகள் போன்றன). ஆயினும் பெண்களும் சில இடங்களில் ஆண்களை மிஞ்சுகின்ற
இயல்புடையவர்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதாவது உச்சமான மொழித் தொடர்பாடற்
சிறப்பும், மிக வேகமான அறிதல் - உணர்தல் - உள்வாங்கல் திறனும், நினைவாற்றல் இயல்பும்,
அதனூடாக பொருத்தங்களையும் - தொடர்புகளையும் மையப்படுத்திப் பொருளை அறிந்து கொள்ளும்
தன்மையும், மிகவேகமாக கைத்தொழிற்பாடான நுட்ப வேலைகளை (கலைகள் ?) செய்யும் ஆற்றலும்
உடையவர்கள். இதில் இருந்து எம்மால் விளங்கிக்கொள்ளக் கூடியது என்னவெனின், முன்னர் மனித
சமுதாயம் கருதியது போன்று, ஆண்கள் ஒருபோதும் எந்த நிலையிலும் பெண்களைக்
காட்டிலும் புத்தி கூர்மையானவர்கள் அல்லர் என்பதேயாகும். ஆயினும் பால்சார்ந்து ஒவ்வொருவருக்கும்
தமக்கே உரிய தனித்துவங்களும், இயல்புகளும், பெருமைகளும் உண்டு. ஆனாலும் இந்த வேறுபாடுகள்
எப்படி எங்கிருந்து எப்போது வந்தன? சிலர் கூறுவது போன்று இது படைப்பா? அல்லது உருவாக்கமா?