Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெள்ளியன்று வன்னி வருகிறார் பாலா!
#1
வெள்ளியன்று வன்னி வருகிறார் பாலா!
தலைவர் பிரபாகரனின் அழைப்பின் பேரில்


விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் நாளைமறுதினம் வெள்ளிக் கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் சனிக்கிழமை நோர்வே சமாதானக் குழுவினருக்கும், விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்வதற் காக,தலைவர் பிரபாவின் அழைப்பின் பெயரில் அவர் இலங்கை வருகின்றார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பீற்றர்ஸன் தலை மையில் நாளை இலங்கை வரும் அந்த நாட்டு சமாதானத்துக் கான அனுசரணைக் குழுவினர் எதிர்வரும் சனிக்கிழமை கிளி நொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து கலந்துரையாடுவார் கள்.இந்தச் சந்திப்பின்போது மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் உடனிருப்பார்.
நாளை வியாழக்கிழமை இரவு பாலசிங்கம் தமது துணை வியாரோடு லண்டனிலிருந்து புறப்படுகிறார். மறுநாள் வெள்ளிக் கிழமை காலை 9.00 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்குவார்.
அங்கிருந்து விமானப்படை யஹலியில் அவர் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பகல் 11.00 மணியளவில் கிளிநொச்சியைச் சென்றடையும் பாலசிங்கம் அன்றே தலைவர் பிரபாவைச் சந்தித்துக் களநிலைவரம் குறித்து கலந்துரையாடுவார்.
மறுநாள் நடைபெறும் நோர்வே குழு - தலைவர் பிரபா பேச் சிலும் கலந்துகொள்வார் பாலசிங்கம். இம்முறை வன்னியில் இருவாரங்களுக்குத் தங்கியிருப் பார் என்று தெரிகின்றது.
கடந்த முறை நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோன்பீற்றர்ஸன் வன்னிக்கு வந்து தலைவர் பிரபாவைச் சந்தித்தபோதும், பாலசிங் கம் லண்டனிலிருந்து வந்திருந்தார். எனினும், அந்தச் சந்திப்பு இடம்பெற்ற மறுநாளே அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
தடைப்பட்டுப் போயிருந்த சமாதான முயற்சி களை முன்நகர்த்தும் நோக்கோடு ஜனாதிபதி சந்திரிகா அப்போது பீற்றர்ஸனை இலங்கைக்கு வரவழைத்திருந்தார்.ஆனால், பீற்றர்ஸனின் அப்போதைய முயற்சிகள் எந்தவிதப் பயனை யும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Uthayan
Reply


Messages In This Thread
வெள்ளியன்று வன்னி வருகிறார் பாலா! - by Vaanampaadi - 01-19-2005, 12:09 PM
வணக்கம், - by Mathuran - 01-19-2005, 11:47 PM
[No subject] - by kavithan - 01-19-2005, 11:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)