Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டாக்டரானார் கமல்...!
#1
<img src='http://thatstamil.com/images26/cinema/kamal-battam450.jpg' border='0' alt='user posted image'>

சென்னையைச் சேர்ந்த சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம், நடிகர் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக் குழு துணைத் தலைவர் வி.என். ராஜசேகரன் பிள்ளை கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்,

இது எனக்கு வழங்கப்பட்ட பட்டமாக நினைக்கவில்லை. திரைத் துறைக்கே வழங்கப்பட்ட கௌரவமாக கருதுகிறேன். திரைத் துறை சார்பாக இந்த பட்டத்தை பெற்றுக் கொள்கிறேன்.

இந்தப் பட்டம் கிடைக்க காரணமாக இருந்த சக நடிகர்கள், நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்களுக்கு எனது நன்றிகள் என்றார்.

இந் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக நிறுவனர் ஜேபியார், இயக்குனர் பாலசந்தர், நடிகர் விஜய்காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்ஸ் தமிழ்.கொம்

---------------------------------

[b]பல ஆண்டுகால திரையுலக வாழ்வில் அன்று குழந்தை நட்சத்திரம் முதலாய் இன்று வசூல் ராஜா வரை...நவரச ராஜ நடை போடும் திரையுலகக் கலைஞனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்ததற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்...! நடிகர் கமலுக்கு வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
டாக்டரானார் கமல்...! - by kuruvikal - 01-19-2005, 03:29 AM
[No subject] - by Mathan - 01-19-2005, 03:37 AM
[No subject] - by kavithan - 01-19-2005, 07:37 AM
[No subject] - by Thaven - 01-19-2005, 09:09 AM
[No subject] - by sinnappu - 01-19-2005, 11:01 AM
[No subject] - by shiyam - 01-19-2005, 01:20 PM
[No subject] - by Kishaan - 01-19-2005, 04:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)