Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"காய் கூய் இந்டியா"
#1
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

காய் காய் காய் இன்டியன்ஸ்!

உங்கள் மனிதாபிமானச் செயல் கேட்டு என்னால் பேசமுடியவில்லை! எழுத முடியவில்லை! சாப்பிட முடியவில்லை! ... ஏன் ஒன்றுமே செய்ய முடியவில்லை! ஐயோ ஐயோ அய்யய்யோ!!!!

"காந்தி, நேரு, புத்தன்" பிறந்த நாட்டிலிருக்கும் உங்களுக்கா உலகம் மனிதாபிமானம் சொல்லித்தர வேண்டும்? முன்பும் சாப்பாட்டுப் பொட்டலங்களைப் போட்டு, பின் இதே நரகாசுரர்களை அனுப்பி, பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரை நரவேட்டையாடி கொண்டு சென்ற உங்கள் மனிதாபிமானத்தை மறக்க முடியுமா? சுனாமியா கொக்கா என்று, சுனாமி என்ற சொல் உங்கள் காதுகளுக்கு விழமுன் நீங்கள் இலங்கை வந்து விட்டீர்களாம்!

அதுவும் உங்களது இந்து சமுத்திரத்திலுள்ள தீவுகளான "அந்தமான்", "நிக்கோபார்" ஏறக்குறைய முற்றாக அழிந்து விட்ட நிலையிலும், இன்று அனர்த்தம் நடந்து மூன்று கிழமைகளாகியும் நிவாரணக்களோ, உதவிகளோ போய்ச் சேராமல், அங்குள்ள மக்கள் இலை, குளைகளைத் தின்று வாழுகின்ற சூழ்நிலையிலும், உங்கள் மக்களாகிய அவர்களையும் காப்பாற்றாமல் இங்கு வந்த மனிதாபிமானத்தை வார்த்தைகளால் கூற இயலாமல் உள்ளேன்! அதுவும் உங்களது அங்குள்ள கடற்படைத்தளம், விமானப்படத்தளம் முற்றாக அழிந்த நிலையிலும், இங்கு யுத்தக் கப்பல்களையும், இராணுவ வீரர்களையும் உடனடியாக அனுப்பிய மனிதாபிமானத்தை எழுதவே எனது கைகள் படபடக்கிண்றன! இங்கு உயிருடன் கடைசி ஈழ மகன் இருக்குமட்டும் உங்கள் அன்பு மாறவே மாறாது என்பது எனது உறுதியான கருத்து!

மற்றும் உங்கள் டமிழ் நாட்டிலேயே ஆகக்கூடுதலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தும்! இல்லை இல்லை சில ஆயிரமானவர்களே இங்கு மாண்டதாக உங்கள் டமிழ் நாட்டரசு அறிவித்து இருப்பது, தனது சொந்த மக்களின் உயிரிழப்புகளையே அரசியல், நிவாரணம் வழங்குதல், நஸ்ட ஈடு வழங்குதல் போன்ற காரணங்களுக்காக மறைத்ததானது, உங்களது மனிதாபிமானங்களுக்கு சிகரம் வைத்த செயலாகிவிட்டது! ஆண்டவா!! இந்திய டமிழ்க் நாட்டுக் கடற்கரையோரங்களின் வாழும் செறிவான மக்கள் தொகையானது யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. சிலவேலை சுனாமியை முன்கூட்டியே அறிந்து (சாஸ்திரக்காரர்கள்மூலம்!) மக்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டீர்களோ? இல்லை! பில்லியனைத் தான்டிவிட்ட உங்களுக்கு, இவ்விழப்புகள் தூசிக்களாக தெரிகிறதா?

இல்லை! நாளைக்கு இந்த உண்மைகள் உந்த டமிழ் நாட்டுத் டமிழனுக்கு தெரிந்தாலும், இரண்டு டமிழ்ப் படத்தை ரிலீஸ் பண்ணியும், நாலு சின்னத்திரை சீரியல்களையும் போட்டால் அரோகராவென்று கற்பூரத்தையும் காட்டிப் போட்டு கடவுளைக் கண்டமாதிரி எல்லாத்தையும் மறந்து குந்தி விடுவார்களென்பது உங்களுக்குத் தெரியாததல்ல? சினிமா எனும் சாக்கடையில் தோன்றும் வேதாளங்களையும் "தலைவா" என்றபடி வேலை வெட்டிகளை விட்டுவிட்டு திரியும் அந்தக் கூட்ட்த்திற்கா விளங்கப்போகுது? மேலும் டமிழ் நாட்டு டமிழர்களுக்கா மனிதாபிமானம் மற்றவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்? அரை குறை ஆடைகளுடன் அன்று குலுக்கித் தழுக்கி ஆட்டம்போட்டு பலகளம் கண்ட வீராங்கனையை அம்மா!? கண்ணகி? மூகாம்பிகை? வேளாங்கன்னி? ... என்னென்ன உண்டோ அதெல்லாமாக்கி அரியணையில் அமர்த்தி, சமூக சீரளிவுகளில் சிக்கியவர்களையும் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் மனிதாபிகளல்லவா! சூ! சூச்சூ! சூ! ..............

ஒன்றை மட்டும் உணருங்கள்! 70களில் "JVP" இன் கிளர்ச்சியை அடக்கவென்று நீங்கள் வந்து செய்த மனிதாபிமானங்களை சிங்களவனும் மறந்திருக்க மாட்டான்! பின்பு 80களில் நீங்கள் வந்து தமிழ்ப் பகுதிகளில் உங்கள் மனிதாபிமானத்தைக் காட்டிய போது "எதிரிக்கு எதிரி நண்பன்" என விட்டு விட்டார்கள்! ஆனால் இம்முறை நீங்கள் வந்து கூடுதலாக இறங்கி அன்பைப் பொழியுமிடங்கள் சிங்கள ஊர்கள், எத்தனை நாளைக்குத் தானென்று பார்ப்போம் இந்த கனிமூன் காலமென்று?

நீங்கள் இலங்கையில் செய்யும் மனிதாபிமானங்களைப் பார்க்கும், கேட்கும் போது எங்கேயோ எனக்கு சிறு வயதில் படித்த பழமொழியொன்று அரை குறையாக ஞாபகத்திற்கு வருகிறது .... "தாய் தெருவோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டு திரியும் போது, மகனோ எங்கேயோ சிதம்பரத்தில் தங்கத் தட்டில் அன்னதானம் கொடுத்துக் கொண்டு திரிந்தானாம்" .. ம்ம்ம்ம்ம்

உங்களுக்காகவே, உங்களின் எச்சிலிலைகளை நக்கித்திரியும் இந்தக் "கோணல்", உங்களின் மனிதாபிமானங்களையும், பெருமைகளையும் பேசித் திரிவதே, நான் என் வாழ்க்கையில் பெறும் பேறாக எண்ணுகின்றேன்! இதற்காகவே உழைக்கவும் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்!

காய் கூய் ஜிந்தாபாத்! ஜெய் கிந் கின்டியா!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Messages In This Thread
"காய் கூய் இந்டியா" - by கறுணா - 01-18-2005, 11:27 PM
[No subject] - by hari - 01-19-2005, 07:15 AM
[No subject] - by Mathuran - 01-19-2005, 09:18 AM
[No subject] - by sinnappu - 01-19-2005, 11:05 AM
[No subject] - by shiyam - 01-19-2005, 12:51 PM
[No subject] - by tsunami - 01-19-2005, 06:10 PM
[No subject] - by shiyam - 01-19-2005, 07:19 PM
[No subject] - by shiyam - 01-20-2005, 02:11 AM
[No subject] - by thamizh.nila - 01-20-2005, 06:20 AM
[No subject] - by cannon - 01-20-2005, 09:50 PM
[No subject] - by cannon - 01-20-2005, 09:56 PM
[No subject] - by Sriramanan - 01-21-2005, 01:11 AM
[No subject] - by shiyam - 01-21-2005, 03:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)