Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அலையில் சிக்கிய இரு சிறுமிகள் அபூர்வமாக தப்பியது எப்படி?
#1
அலையில் சிக்கிய இரு சிறுமிகள்
அபூர்வமாக தப்பியது எப்படி?
அண்மையில் நடந்த சுனாமி அனர்த்த நிகழ்வின் போது அதிசய சம்பவங்கள் இடம்பெற்றதான செய்திகள் பலஅவ்வப் போது வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
இதுவும் அப்படியானதொரு சம்பவம் தான். மணற்காட்டுப் பகுதியில் சுனாமி தாக்கிய வேளையில் இரண்டு சிறுவர் கள் அபூர்வமான முறையில் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர்.
தம்பித்துரை சுகன்யா (வயது 7), தம் பித்துரை சசிரூபன் (வயது 02) ஆகிய இரு சகோதரர்களுமே இவ்வாறு காப் பாற்றப்பட்டவர்கள்.
சம்பவதினம் இவ்விரு சிறுவர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். சுனாமி அலைவந்துகொண்டிருந்த செய்தியறிந்து அவசரத்தில் வீட்டிலிருந்த மற்றவர்கள் வெளியில் ஓடித்தப்பிவிட சிறுவர்கள் இரு வரும் வீட்டினுள் தனியாகச் சிக்கிக்கொண் டனர்.
கடல் வெள்ளம் ஊரையே அடித்துச் சென்ற பின்பு உறவினர்கள் பிள்ளை களைக் காணாத ஏக்கத்துடன் தேடியோடி னர்.
ஆனால், எல்லோரும் ஆச்சரியப்படு மாறு அச்சிறுவர்கள் இருவரும் தமது வீட்டின் இடிபாடுபகளுக்கு மத்தியில் இருந்து அழுதுகொண்டு வெளியே வந்தனர்.
சிறுவர்களைக் கண்டு ஆச்சரியத்து டன் எப்படித் தப்பினீர்கள் என்று கேட்ட னர் ஊரவர்கள், அதற்கு அந்தச் சிறுவர் கள் கூறிய பதிலைக் கேட்டு உறைந்தே போய்விட்டனராம்.
கடல் வெள்ளம் வந்த போது எம்மை ஓர் அம்மா மேலே தூக்கியவாறு இருந் தார். அந்த அம்மா எங்களைக் கீழே இறக்கி விட்டு மறைந்து விட்டார். ஆனால், அவரை நான் ஒருநாளும் கண்டதில்லை... என்று தமது திகில் அனுபவத்தைச் சொன்னாள் சிறுமி த.சுகன்யா.
இந்நிலையில், தமக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் அன்னை வேளாங் கன்னியே இவ்வாறு தமது பிள்ளை களைக் காப்பாற்றினார் என்று அவ்வூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Source: Uthayan
Reply


Messages In This Thread
அலையில் சிக்கிய இரு சிறுமிகள் அபூர்வமாக தப்பியது எப்படி? - by Vaanampaadi - 01-18-2005, 11:56 AM
[No subject] - by tamilini - 01-18-2005, 12:54 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 12:58 PM
[No subject] - by வெண்ணிலா - 01-18-2005, 02:04 PM
[No subject] - by tamilini - 01-18-2005, 02:44 PM
[No subject] - by kuruvikal - 01-18-2005, 03:15 PM
[No subject] - by Danklas - 01-18-2005, 04:08 PM
[No subject] - by Kishaan - 01-18-2005, 05:36 PM
[No subject] - by pepsi - 01-18-2005, 06:29 PM
[No subject] - by pepsi - 01-18-2005, 06:35 PM
[No subject] - by shiyam - 01-18-2005, 06:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)