Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசரகால நிலை அறிவிப்பினால் தமிழ்மக்கள் மனங்களில் போர்ப்பீதி
#1
அவசரகால நிலை அறிவிப்பினால்
தமிழ்மக்கள் மனங்களில் போர்ப்பீதி
அரசு வெளியிட்டுள்ள அவசரகாலநிலை அறிவித்தல் மக்கள் மனங்களில் மீண்டும் போர்ப் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் நுழைவதற்கும் இந்த அவ சரகாலநிலை வழிவகுத்துள்ளது என்று சுட்டிக் காட்டப்படுகின்றது. இதனால் அச்சம் அதிகரித் துள்ளது. அரசின் இந்தச் செயல் சமாதான முன் னெடுப்புகளுக்கும், யுத்தநிறுத்த உடன்படிக் கைக்கும் ஆப்பு வைத்துவிடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவரச கால நிலையைப் பிரகடனப்படுத்தும் அறிவித்தலில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கையய ழுத்திட்டுள்ளார். உத்தியோக ரீதியாக வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்படாத நிலையிலும் இந்த அவசரகாலநிலை ஜனவரி 4ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் அறிவித்துள்ளார். வர்த்தகமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிவிக்கப் படுகிறது.
சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக் கும் வடக்கு - கிழக்கு, தென்மாகாணம், வட மத்திய மாகாணம், மேல் மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களிலும் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் அவசரகாலநிலை நடைமுறைப் படுத்தப்படும். பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், கொள்ளைகளைத் தடுக்கவும், நிவாரணப் பணி களை உறுதிப்படுத்துவதற்காகவுமே அவசரகால நிலை என ஜனாதிபதி கூறுகின்றார்.
இதனால் இராணுவத்தினரும், பொலீஸா ரும் சிவில் நிர்வாகத்தில் தலையிடவும், கூடுத லான தண்டனைகளை வழங்கவும், அவர்க ளுக்கு அeவுக்கு மீறிய அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன.
முன்னறிவித்தல் இல்லாத கைதுகள், கால வரையரையின்றி தடுத்துவைத்தல், திடீர்ச் சோதனைகள், என்பவற்றை மேற்கொள்வதற் கான அதிகாரங்களை இராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் அவசரகால நிலை வழங்கியுள் ளது. குறிப்பாக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்கவும், சொத்துக்ளைப் பறிமுதல் செய்ய வும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகி றது.
அவசரகால நிலையால் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் நேரடியாகத் தாக்கத்துக்குள்ளாகி உள்ளன.
ஏற்கனவே, நிவாரணப் பொருள் விநியோ கம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் நேரடி நிர்வாகப் பொறுப்பு ஜனாதிபதியால் இராணு வத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது சட்டம், ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டவென அவசரகால நிலையை ஜனாதிபதி பயன்படுத்தியுள்ளார். ஜனாதிபதியின் இந்தச் செயல் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்குப் பெரும் பீதியையும், அமைதி யின்மையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரி விக்கப்படுகிறது.
இது நாட்டில் மீண்டும் போர்ப்பீதியையும், மரண பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சோத னைச் சாவடிகளும், திடீர்க் கைதுகளும் அதிக ரிக்கும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். அரசின் இந்தச் செயலை தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது என வும் தீர்மானித்துள்ளன.

Source : Uthayan
Reply


Messages In This Thread
அவசரகால நிலை அறிவிப்பினால் தமிழ்மக்கள் மனங்களில் போர்ப்பீதி - by Vaanampaadi - 01-18-2005, 11:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)