01-18-2005, 11:17 AM
ஜனவரி 18, 2005
தோன்றினார் பிரபாகரன்: இலங்கைக்கு மூக்குடைப்பு
கொழும்பு:
வட கிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டார்.
இந்த சுனாமி அலையில் பிரபாகரனும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும் பலியாகிவிட்டதாக இலங்கை அரசு, கடற்படை, வானொலி ஆகியவை கூட்டு சேர்ந்து புரளி கிளப்பி விட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார் பிரபாகரன்.
கிளிநொச்சி பகுதியில் நேற்று ஆய்வு நடத்திய பிரபாகரன் பின்னர் மீட்பு மற்றும் நிவாரணக் குழுவினருடன் ஆலோசனைகள் நடத்தினார்.
பிரபாகரன் பேசுகையில், இந்தப் பேரழிவால் மக்கள் யாரையும் சார்ந்து வாழும் நிலை உருவாகி விடக் கூடாது. போதிய உதவிகள் செய்து அவர்களே தங்கள் எதிர்காலத்தை, மறுவாழ்வை உருவாக்கிக் கொள்ளும் வகையில் கை கொடுக்க வேண்டும் என்றார்.
இதன் மூலம் பிரபாகரன் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்த இலங்கை அரசுக்கு பெரும் மூக்குடைப்பு ஏற்பட்டுள்ளது.
Source: Thatstamil