Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் பகுதிக்கு செல்லும் ஜநா செயலர்
#12
அனான் ஏன் வன்னிக்கு வரவில்லை. - நிலாந்தன்

இலங்கைத்தீவு குறுக்கே இருந்திராது விட்டால் சுனாமியின் தாக்கம் இந்தியக் கரைகளில் மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் இதில் இலங்கை ஒரு முன்தடுப்பாக (பவராக) மாறி சுனாமியால் வரவிருந்த ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவு அழிவில் இருந்து இந்தியாவை காப்பாற்றியது என்றும் ஒரு இந்தியப் பேராசிரியர் கூறியிருந்தார்.

இப்படி இலங்கைத்தீவு சுனாமியிடமிருந்து தனது கரைகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு காப்பாற்றியது குறித்து புதுடில்லி மகிழ்ச்சியடைந்திருக்குமோ இல்லையோ சுனாமியின் விளைவாகத்தோன்றிய சுனாமி அரசியலின் பிரசாரம் இலங்கைத்தீவில் இப்பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள நாடுகள் தமது துருப்புக்களை இறக்கும் ஒருநிலை தோன்றியிருப்பது குறித்து இந்தியா நிச்சயமாக மகிழ்ச்சியடைந்திருக்காது.

வெளிப்படையாக இது குறித்து இந்தியா தனது எரிச்சலை வெளிக் காட்டாவிட்டாலும்கூட இப்பிராந்தியத்தில் இந்தியாவின் ஏகபோக மேலாண்மையை பொறுத்தவரை இது இடறலான ஒரு விசயமே. எனினும் இது விசயத்தில் இந்தியா வெளிப்படையாகத் தனது வெறுப்பை காட்ட முடியாததற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்க முடியும். முதலாவது, மனிதாபிமானக்காரணம், இரண்டாவது, பொருளாதாரக்காரணம்.

முதலாவதின்படி, வருகின்ற எல்லாத் துருப்புகளும் 'மனிதாபிமானம்" என்ற பதாதையின் கீழ் வருகின்றன. உலகில் தற்சமயம் அதிகம் மலினப்படுத்தப்பட்ட அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு சொல் எது என்றால் அது மனிதாபிமானம்தான். அதிலும் குறிப்பாக சுனாமி அரசியலின் மிகவும் அருவருப்பான ஓர் அம்சமே இந்தச் சூதான மனிதாபிமானம்தான்.

1987 இல் இந்தியா ஒப்பரேசன் பூமாலை என்றபெயரில் வடமராட்சியிலும் ஏனைய பகுதிகளிலும் உணவுப் பொதிகளை போட்டபோதும் அதை மனிதாபிமான உதவி என்று சொல்லித்தான் நியாயப்படுத்தியது. இப்பொழுதும் அப்படித்தான். இப்பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள பேரரசுகள் மனிதாபிமானம் என்ற பெயரில் இலங்கைத்தீவிலுள்ள தமது துருப்புக்களை இறக்கியிருக்கின்றனர்.

எனவே மனிதாபிமானம் என்ற போர்வைக்குள் நிகழும் துருப்புக்களை நகர்த்தும் அரசியலை வெளிப்படையாக எதிர்க்கமுடியாத ஒரு நிலையில் இந்தியா உள்ளது. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம் பொருளாதார ரீதியிலானது. பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியா உலகின் விரைந்துவரும் ஆறாவது பெரிய பொருளாதாரமாகக் காணப்படுகிறது. உலகின் கணனி மென்பொருள் துறையில் ஆதிக்கம் பெற்றிருப்பவர்களில் முப்பது விகித்தினர் இந்தியர்களே எனப்படுகிறது. இந்நிலையில் தனது பொருளாதாரத்தை சீனாவுக்கு நிகரானதாக பலப்படுத்தவிரும்பும் இந்தியா மேற்கை அதிகம் பகைக்கவிரும்பவில்லை என்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே மேற்குடன் பொருளாதார ரீதியில் மிகவும் நெருங்கி ஒத்துழைது வரும் இந்தியா இலங்கைத்தீவில் மேற்கின் பிரசன்னம் தனது உறுத்தலான விதத்தில் அதிகரித்துவருவதை மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டும் என்று நம்புவதுதெரிகிறது.

தற்சமயம் இலங்கைத்தீவினுள் இறக்கப்பட்டுள்ள துருப்புக்கள் பிறகொரு நாள் திருப்பி எடுக்கப்படக்கூடும். ஆனால் அவை திருப்பி எடுக்கப்படுமோ இல்லையோ இலங்கைத்தீவினுள் இந்தியாவைத்தவிர வேறு நாடுகளும் துருப்புக்களை இறங்கமுடியும் என்பது இப்பிராந்தியத்தின் படைத்துறை அரங்கில் அண்மை தசாப்தங்களில் ஒரு புதிய தோற்றப்பாடே. இது இதன் பின்னரான சுனாமி அரசியல் நகர்வுகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே ஜ.நா.செயலர் கோபி அனானின் வன்னி விஜயம் தவிர்க்கப்பட்தையும் விளங்கிக் கொள்ளவேண்டும்.

கொபி அனான் வன்னிக்கு வராததிற்கு வெளிப்பiடாயக இலங்கை அரசாங்கத்தின் மீதே குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், இதுவிசயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது ஏதும் வெளிச்சக்திகள் செல்வாக்கை பிரயோகித்திருக்கமுடியுமோ என்பது பற்றியும் சிந்திக்கப்படவேண்டும்.

ஏனெனில் பிராந்தியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளின் படை பிரசன்னம் என்பது இந்தியாவுக்கு விருப்பமில்லாத ஒன்று என்பது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் தெரியும். இது விசயத்தில் எரிச்சலடைந்திருக்கும் இந்தியாவை மேலும் எரிசலுட்டக்கூடாது என்று அவை விரும்பியிருந்தாலும் கொபி அனான் வன்னிக்கு வருவதை ஊக்குவிக்காமல் விட்டிருக்கலாம்.

அதாவது கொபி அனான் வன்னிக்கு வந்திருந்தால் அது புலிகளையும் புலிகளின் காட்டுப்பாட்டுப் பிரதேசத்தையும் ஜ.நா. அங்கீகரித்துவிட்டதாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கும். இப்படி புலிகளை அங்கீகரிக்கும் விதத்தில் ஜ.நா. நடந்துகொண்டால் அதனால் இந்தியா மேலும் சீண்டப்படலாம் என்று ஜ.நாவை பின்னாலிருந்து இயங்கும் நாடுகள் சிந்தித்திருக்கக்கூடும். எனவே அடுத்தடுத்து இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்க்க அவர்கள் விரும்பியிருக்கக்கூடும்.

தவிர இது விசயத்தில் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தங்களை பிரயோகித்திருக்குமா இல்லையா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

எனவே கொபி அனான் வன்னிக்கு வரத்தவறியமை என்பது வெறுமனே கொழும்பு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரமாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. இதில் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புக்களை முற்றாக நிராகரிப்பதற்கில்லை.

எதுவோ, கொபி அனான் வன்னிக்கு வராமலே திரும்பிச்சென்றுவிட்டார். சுனாமி கொண்டு வந்த புதிய நிலைமைகளின் பிரகாரம் தமிழர்களை சமாதானத்தை நோக்கி ஊக்குவித்திருக்கக் கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்;டுவிட்டது என்பதே உண்மை.

கொபி அனான் விஜயம் இலங்கைத்தீவின் இனப்பிளவுகளை பிரதி பலிக்கும் ஒன்றாக முடிந்துவிட்டது.

மட்டுமல்ல அது சுனாமிக்குப் பிந்திய இலங்கைத்தீவின் அரசியலில் சமாதானத்தைக் குறித்து கற்பனை செய்து கொண்டிருப்பத்தில் அர்த்தமில்லை எனும் ஒரு விரத்தி நிலைக்கு தமிழர்களை இட்டுச்செல்லக்கூடியதாயும் இருக்கிறது.

மேற்கு நாடுகளுக்கும் புலிகளுக்குமிடையே ராஜீய நெருக்கம் எதுவும் புலிகைள வெளிப்படையாக அங்கீகரிப்பதில்தான் அதன் உச்சத்தை அடைய முடியும். ஆனால், இதுவிசயத்தில் ஜரோப்பிய நாடுகள் சற்று நெகிழ்வாகவும் அமெரிக்காபோன்ற நாடுகள் நெகிழ்ச்சிக்குறைவாகவும் நடந்துகொள்ளும் ஒருபோக்கே சுனாமிக்கு முன்பு காணப்பட்டது. சுனாமிக்குப்பின்பும் இந்தப் போக்கில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை என்பதையே கொபி அனான் வன்னிக்கு வரத்தவறியதன்மூலம் உணர்த்தபட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா?

இங்கு ஒன்றைச்சுட்டிக்காட்ட வேண்டும். அமெரிக்கா வேறு ஜரோப்பா வேறு அல்ல. அமெரிக்காவுக்குப் பிடிக்காத ஒன்றை ஜரோப்பா தன்னிச்சையாக முடிவெடுத்துச்செய்கிறது என்பதும் அல்ல. இதில் அமெரிக்கா ஒரு கண்டிப்பான மூத்த அண்ணனைப்போலவும் ஜரோப்பா விட்டுக் கொடுக்கின்ற இளைய அண்ணைனைப்போலவும் நடந்துகொள்கின்றன. என்பதே இங்குள்ள மெய்நிலை.

மூத்த அண்ணன்தான் இறுக்கமாகவும் கண்டிப்பாகவும் இருப்பதுபோல காட்டிக்கொண்டு இளைய அண்ணனுக்கூடாக விவகாரங்களைக் கையாளும் ஒரு அரசியல் இது.

ஆனால், இந்த அரசியலால் சுனாமிக்கு முன்பு காணப்பட்டதைவிடவும் இப்பொழுது சுனாமிக்குப் பின்பு சந்திரிகா அதிகம் பலமடைந்துவருவதாகவே தோன்றுகின்றது.

முன்பு ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக்காலத்தில் சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றைக்காட்டி, பயமுறுத்தி வந்தார். சந்திரிகாவிடம் அப்படியொரு பலமான வலைப்பின்னல் இருக்கவில்லை. ஆட்சிக்குவரும் பொருட்டு அவர் கூட்டுச் சேர்ந்த சக்திகளாலும் பிராந்திய மட்டத்தில் அவர் அதிகம் இந்தியச் சாய்வாகக் காணப்பட்டதாலும் மேலும் அவரிடம் மிலிந்தமொறகொட போன்ற முழுக்கமுழுக்க அமெரிக்க மயப்பட்ட இடைத் தூதர்கள் இல்லாதபடியாலும் அவரால் ரணில் அளவுக்கு மேற்குடன் நெருங்கிவர முடிந்திருக்கவில்லை.

ஆனால், சுனாமி வந்து இந்தக் குறையை நிவர்த்திசெய்திருக்கின்றதோ என்று யோசிக்கத்தோன்றுகின்றது. வந்து குவியும் நிதி மற்றும் வந்துபோகும் ராசதந்திரிகள் போன்றோரின் தொகை மற்றும் பதவிநிலை போன்றவற்றுக்கூடாக கூறுமிடத்து சுனாமிக்கு முன்பு இருந்ததை விடவும் சுனாமிக்குப் பின்பு அரசாங்கத்தின் பேரம்பேசும் சக்தி ஒப்பீட்டளவில் அதிகரித்துவருவது தெரிகிறது.

டோக்கியோ நிதி உதவிகள் வரத் தவறிய ஒரு வெற்றிடத்தில் செய்வதறியாத தத்தளித்துக் கொண்டிருந்த அரசாங்கத்தை சுனாமி நிதி உதவிகள் வந்து காப்பாற்றத் தொடங்கிவிட்டன. டோக்கியோ நிதிக்கு கட்டுப்பாடுகள் உண்டு. சமாதானம் செய்யும் நாடுகளால் அது நிர்வகிக்கப்படும். ஆனால் சுனாமி நிதி அவ்வாறல்ல அது நிபந்தனைகள் அற்றது. அதை முகாமைத்துவம் செய்யப்போவது அரசாங்கமே. எனவே கைக்கெட்டாத டோக்கியோ நிதியைவிடவும் எதிர்பாராமல் வந்து குவியும் சுனாமி நிதி அதிகம் நெகிழ்சியானதும் அரசாங்கத்தால் விரும்பியபடி கையாளப்படக்கூடியதுமாகும். இது முதலாவது.

இரண்டாவது யுத்தம் ஒன்று வரலாம் என்ற பீதி பரவிக்கொண்டிருந்த ஒருவேளை சுனாமி வந்து எல்லாவற்றையும் திசைதிருப்பிவிட்டது. இதுவும் சந்திரிகாவுக்கு ஒரு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மூன்றாவதாக ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான எதிர்க்கட்சிகள் எஸ்.பி.திஸநாயக்காவை மீட்பது என்றபெயரில் செய்யத்திட்டமிட்டிருந்த எதிர்ப்பு இயக்கத்தையும் சுனாமி பின்னுக்குத் தள்ளி விட்டிருக்கிறது.

எனவே சுனாமிக்கு முன்பிருந்ததைவிடவும் அரசாங்கம் இப்பொழுது பலமாகிவருகிறது. இதன்படிகூறின் இலங்கைத்தீவின் வலுச்சமநிலை சுனாமிக்கு முன்பு இருந்ததைவிடவும் சுனாமிக்குப் பின்பு படிப்படியாக அரசாங்கத்திற்குச்சாதகமாக மாறக்கூடிய ஏதுநிலைகளே அதிகம் தெரிகின்றன.

இதுநல்லதுக்கல்ல, வலுச்சமநிலை தமக்குப் பாதமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தமிழர்கள் மத்தில் தோன்றும்போதெல்லாம் அவர்கள் சமாதானத்தில் நம்பிக்கையிழந்துபோவதே வழமை.

இப்பொழுது உருவாகிவரும் புதிய நிலைமைகளுக்கு மேற்கு நாடுகளே கூடுதல் பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் திட்டமிட்டோ அல்லது எதிர்பாராத விதமாகவோ வலுச்சமநிலையை மாற்றக் கூடியவிதமாக உதவிகளை வழங்கி வருவது அவர்கள்தான். சுனாமி தாக்கப் போவது தெரிந்தும் அசிரத்தையாக இருந்ததுபோல இந்தவிசயத்திலும் அவர்கள் அசிரத்தையாக இருப்பார்களா அல்லது முன்னெச்சரிக்கையோடு செயற்படுவார்களா?

ஈழநாதம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-05-2005, 03:15 PM
[No subject] - by Mathan - 01-05-2005, 03:19 PM
[No subject] - by anpagam - 01-05-2005, 05:28 PM
[No subject] - by sinnappu - 01-05-2005, 09:46 PM
[No subject] - by sethu - 01-05-2005, 09:58 PM
[No subject] - by தமிழரசன் - 01-06-2005, 07:12 AM
[No subject] - by sinnappu - 01-06-2005, 02:18 PM
[No subject] - by sinnappu - 01-06-2005, 03:33 PM
[No subject] - by Mathan - 01-07-2005, 03:36 AM
[No subject] - by Mathan - 01-17-2005, 04:25 PM
[No subject] - by Mathan - 01-18-2005, 04:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)