01-17-2005, 10:13 AM
கண(ன்)னியே
கவிதையொன்று வரைய
பேனாவொன்று கேட்டேன்-உன்
விரல்களே போதுமென்றாய்
(<i>Key Board</i>)
பேதையே உன்
பெயரை எழுதிட
பேப்பரொன்று கேட்டேன்
பேதைஇவள் முகமே போதுமென்றாய்
(<i>Monitor</i>)
இதயமே உன்
இதயத்தை தாவெனக்கேட்டேன்-அது
இரும்புப்பெட்டியுடன் அல்லவா
இணைக்கப்பட்டள்ளது என்கின்றாய்
(<i>Hard Drive</i>)
இருவரும் இணைந்திட
வழியொன்று கேட்டேன்-என்னிடம்
இணையத்தளமே உண்டென
வாய்விட்டல்லவோ சிரிக்கின்றாய்
(<i>Internet</i>)
நிழல் படமொன்றை
தாவெனக்கேட்டேன் -நீயோ
நிஜப்படங்களையும்
தருவேன் என்கின்றாயே
(<i>VGA Card</i>)
முடமாக நீயிருந்தால்-வீட்டில்
முடங்கிக் கிடப்பாய் என
நினைத்தேன்-நீயோ
மோடமாக நானிருந்தால்
மோப்பம் பிடித்திடுவேன்
உலகையே ஒரு நொடிப்
பொழுதில் என்கிறாய்
(<i>Modem</i>)
தாலி கட்டித் தாரமாய் வாவென
நான் உன்னை அழைக்கையில்-நீயோ
தாயும் நானே தாரமும் நானே என
கைதட்டி நகைக்கிறாய்
(<i>Mother Board</i>)
சத்தமில்லாத ஊமை
என்றேன் -நீயோ
நத்தமிட்டு
சவுன்ட் காட்டும் நானல்லவோ
உன சந்கீதம் பாடுகிறாய்
(<i>Sound Card</i>)
ஊமையென உனை
சொன்னது தப்பு
உற்றவளே மறந்துவிடு
என்றேன் -நீயோ
பட்டென மறப்பதற்கு
நினைவுப் பெட்டகமும்
நானே என்கிறாய்
(<i>Memory</i>)
கவிதையொன்று வரைய
பேனாவொன்று கேட்டேன்-உன்
விரல்களே போதுமென்றாய்
(<i>Key Board</i>)
பேதையே உன்
பெயரை எழுதிட
பேப்பரொன்று கேட்டேன்
பேதைஇவள் முகமே போதுமென்றாய்
(<i>Monitor</i>)
இதயமே உன்
இதயத்தை தாவெனக்கேட்டேன்-அது
இரும்புப்பெட்டியுடன் அல்லவா
இணைக்கப்பட்டள்ளது என்கின்றாய்
(<i>Hard Drive</i>)
இருவரும் இணைந்திட
வழியொன்று கேட்டேன்-என்னிடம்
இணையத்தளமே உண்டென
வாய்விட்டல்லவோ சிரிக்கின்றாய்
(<i>Internet</i>)
நிழல் படமொன்றை
தாவெனக்கேட்டேன் -நீயோ
நிஜப்படங்களையும்
தருவேன் என்கின்றாயே
(<i>VGA Card</i>)
முடமாக நீயிருந்தால்-வீட்டில்
முடங்கிக் கிடப்பாய் என
நினைத்தேன்-நீயோ
மோடமாக நானிருந்தால்
மோப்பம் பிடித்திடுவேன்
உலகையே ஒரு நொடிப்
பொழுதில் என்கிறாய்
(<i>Modem</i>)
தாலி கட்டித் தாரமாய் வாவென
நான் உன்னை அழைக்கையில்-நீயோ
தாயும் நானே தாரமும் நானே என
கைதட்டி நகைக்கிறாய்
(<i>Mother Board</i>)
சத்தமில்லாத ஊமை
என்றேன் -நீயோ
நத்தமிட்டு
சவுன்ட் காட்டும் நானல்லவோ
உன சந்கீதம் பாடுகிறாய்
(<i>Sound Card</i>)
ஊமையென உனை
சொன்னது தப்பு
உற்றவளே மறந்துவிடு
என்றேன் -நீயோ
பட்டென மறப்பதற்கு
நினைவுப் பெட்டகமும்
நானே என்கிறாய்
(<i>Memory</i>)
----------


