Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிபந்தனைகள்
#2
கருத்துக்கள் நாகரீகமாக வைக்கப்படுவது விரும்பப்படுகின்றது. இன்று சில கருத்துக்கள் கள நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தமையால் நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. நல்லது. அதை சரியான முறையில் எழுதுவதன் மூலம் உங்கள் கருத்துக்களுக்கும் ஒரு பலம் இருக்கும். அதை விடுத்து அவசரப்பட்டு நாகரீகத்தன்மையற்ற, வெறுமனே குற்றஞ்சாட்டுகின்ற, குறைகளைக்காண முயற்சிக்கின்ற ஒவ்வொரு கருத்தும் தனது பலத்தை இழந்தே காணப்படும். எழுதப்படும் கருத்துக்களால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக இருக்குமா என்பதைக்கூட யோசிக்கலாம்.

இங்கு ஒவ்வொருவரும் இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கை வாழ்கின்றார்கள். கிடைக்கும் சிறிய நேரத்தில் ஏதாவது நல்ல விடயங்களை பார்க்கலாமா எனக் களம் வருபவர்களுக்கு வெறுமனே எண்ணிக்கைக்காக கருத்தாளம் இல்லாத கருத்துக்கள் காலப்போக்கில் இக்கருத்துக்களம் மீது ஓர் சலிப்பையும், வெறுமனே குற்றங்கள், குறைகள் கண்டுபிடிப்பதையும் அதை நாகரீகமற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதும் இக்களம் மீது வெறுப்பையும் தரலாம். ஆதலால் களநிபந்தனைகளைக் கருத்தில்கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள்.

ஒவ்வொரு கருத்தினையும் என்னால் மாற்றிக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் நிபந்தனைகளை மீறுகின்ற கருத்துக்களை நீக்குவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

நான் நினைப்பதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். கருத்துக்களில் ஆட்சேபனைகள் இருந்தால் அதை எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி
மோகன்


Messages In This Thread
நிபந்தனைகள் - by Mohan - 06-07-2003, 05:07 PM
[No subject] - by yarlmohan - 06-19-2003, 09:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)