Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பு மட்டக்ககுளியிலும் களுத்துறை அளுத்கமவிலும் நேற்றிரவு
#1
கொழும்பு மட்டக்ககுளியிலும் களுத்துறை அளுத்கமவிலும் நேற்றிரவு இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது உகண்டா நாட்டு குடிமகன் உட்பட ஜவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கொழும்பு மட்டக்குளியிலுள்ள பாதாள உலகக் குழுவினரின் வசிப்பிடமொன்றை பொலிசார் முற்றுகையிட்ட சமயம் இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த மூவர் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

களுத்துறை அளுத்கமவில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் உகண்டா நாட்டு குடிமகன் உட்பட இருவர் தனிப்பட்ட விரோதம் காரணமாக இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட உகண்டா நாட்டு குடிமகன் காலஞ்சென்ற உகண்டா நாட்டு ஜனாதிபதி இடி அமீனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் அந் நாட்டிலிருந்து வெளியேறி இலங்கையில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý...
Reply


Messages In This Thread
கொழும்பு மட்டக்ககுளியிலும் களுத்துறை அளுத்கமவிலும் நேற்றிரவு - by ammuu - 01-14-2005, 12:53 PM
[No subject] - by sinnappu - 01-14-2005, 03:13 PM
[No subject] - by sinnappu - 01-14-2005, 03:17 PM
[No subject] - by Kishaan - 01-14-2005, 03:23 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:29 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)