01-14-2005, 02:15 AM
<span style='font-size:22pt;line-height:100%'>கனடிய பிரதமர் இலங்கை செல்வது குறித்த இந்திய தமிழர் ஒருவரின் பதிவு ............... படித்து பாருங்கள்.</span>
கனேடியப் பிரதமர் இலங்கை செல்கிறார்
நேற்று வெளியான அறிவிப்பில் கனேடியப் பிரதமர் பால் மார்ட்டின் தன்னுடைய ஆசியப் பயணத்தை நீட்டித்து இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் செல்லவிருக்கிறார். இந்த ஆசியப் பேரழிவுக்குப் பிறகு முதல்முறையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லவிருக்கும் அரசுத்தலைவர் கனேடியப் பிரதமர்தான்.
ஏற்கனவே இருந்த அமைப்பின்படி அவர் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் செல்லவிருந்தார். இப்பொழுது பாதிக்கப்பட்ட நாடுகளை நேரடிப்பார்வையிட இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் செல்லவிருப்பதாக கனேடிய அரசு அறிவித்திருக்கிறது. நீண்ட கால உதவிகள், புனரமைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுதலுக்கு இந்த நேரடிப் பயணம் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
இனி - இதிலிருக்கும் சிக்கலைப் பார்ப்போம்; இலங்கை செல்லும் மார்ட்டின் கட்டாயம் தமிழர் பகுதிகளாக வடக்கு கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லத் தலைப்படுவார் (ஏற்கனவே நான் எழுதியிருந்தபடி, கனடாவைப் பொருத்தவரை இலங்கை என்றால் தமிழர்கள்தான்). அப்படிச் செல்லவில்லை என்றால் உள்ளூர் அரசியலில் அவருக்குப் பலத்த அடிவிழும் (ஏற்கனவே இவரது அரசுக்குப் பெரும்பான்மை கிடையாது). செல்ல முயன்றால் இலங்கை அரசு தடுக்கும். இவ்வளவு பெரிய அரசு முறைத் தலைவரை இலங்கை தமிழர் பகுதிகளை நேரடியாகப் பார்க்கவிடுவதற்கும், அங்கிருக்கும் தமிழர்களுடன் ஊடாட விடுவதற்கும் பெரிய தயக்கம் காட்டும். இயன்ற வழிகளில் எல்லாம் இதைத் தடுத்து நிறுத்தப் பார்க்கும். (இது கனடாவிற்குத் தெரிந்ததுதான்). இருந்தும் இலங்கை செல்வதாக பால் மார்ட்டின் அறிவிக்க முக்கிய காரணம் கனடா போதுமான அளவிற்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யவில்லை என்று மக்களும் ஊடகங்களும் கூச்சலிடுவதுதான்.
கவனிக்க: கனடாவின் உதவி இதுவரை $80 கனேடிய டாலர்கள், விரைவில் இன்னொரு $20 மில்லியன் அரசு உதவி அறிவிக்கப்படும் என்று சொல்கிறார்கள். (நாளை கனடா முழுவதும் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது. தொலைக்காட்சி, வானொலி போன்றவை நாள் முழுவது ஆசியாவைப் பற்றிய நிகழ்ச்சிகளை ஒலி/ஒளிபரப்பி நிதி திரட்டலை மும்முரமாக்கப் போகிறார்கள். அரசாங்கத்தின் கொடிகள் நாளை அரைக்கம்பத்தில் பறக்கும். பல்வேறு பிரார்த்தனைகள், மௌன விரதங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன). அதைத் தவிர தனியார் நிதி உதவிகளை டாலருக்கு டாலர் என்ற விகிதத்தில் அரசு உதவப்போகிறது, இதுவரை கிட்டத்தட்ட $60 மில்லியன் கனேடிய டாலர்கள் தனியார் உதவியாகக் குவிந்துள்ளன. இதில் கனடா அரசு இன்னொரு $60 மில்லியன் தரவிருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டுப்பார்த்தால் நார்டிக் நாடுகள், ஜப்பான், நீங்கலாக தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் உதவுவதில் கனடா முதல் மூன்று இடத்திற்குள் இருக்கிறது. இருந்தும் தாராள மனப்பான்மை கொண்ட கனேடியர்கள் இது போதாது என்று சொல்கிறார்கள். சிலர் அவசர கால வரி என்று புதிய வரியை விதித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை உதவிகளுக்குச் செலவிட வேண்டும் என்றுகூடச் சொல்கிறார்கள்.
உதவிகளை அறிவிப்பதில் மூன்று நாட்கள் கனடா தாமத்தித்துவிட்டது. அதைச் சரிகட்ட இயன்ற அளவுக்கு இப்பொழுது பிரதமர் செய்கிறார். என்றாலும் இந்த இலங்கை விஜயம் அறிவிப்பு கொஞ்சம் துணிச்சலானதாகத்தான் தோன்றுகிறது. சந்திரிகாவுக்குத் தலைவலிதான்.
நன்றி - வெங்கட்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>