01-13-2005, 09:35 PM
<b>நேற்று:
என் அம்மா என்னிடம்
"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா"
"எடுத்துக்கிட்டேன் மா"
"பேக்ல சிலேட் இருக்கா பாரு"
"இருக்குமா"
"டப்பால பல்பம் இருக்கா பாரு"
"இருக்குமா"
"டிபன் பாக்ஸ் வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?"
"எடுத்துகிட்டேன்மா"
"சமத்துல நீ ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. ஸ்கூல் பஸ் வந்திருக்கும் பாரு"
[b]இன்று:</b>
என் மனைவி என்னிடம்
"ஏங்க வாட்ச் கட்டி கிட்டீங்களா?"
"கட்டிகிட்டேன்மா"
"மொபைல் போன் எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன்"
"ஆபிஸ் ஆக்ஸஸ் கார்டு எடுத்துக்கிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேன்மா"
"சமத்தா ஆபிஸ் போயிட்டு வாங்க. கம்பெனி பஸ் வந்திருக்கும் பாருங்க"
<b>நாளை:</b>
என் மகள் என்னிடம்
"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேம்மா"
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
"குறிச்சிகிட்டேன்மா"
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா. அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா. முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா"
வாழ்க்கை ஒன்று தான். காட்சிகள் பல.