01-11-2005, 08:19 PM
Quote:வியட்நாமில் மீண்டும் வேகமாக பரவும் பறவைக்காய்ச்சல்,
10 நாளில் 3 பேர் பலி
வியட்நாம் நாட்டில் ஏராளமான உயிர்களை பலி வாங்கிய பறவைக் காய்ச்சல் நோய் மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கி உள்ளது. அங்கு கடந்த ஆண்டு டிசம்பர் வரை பறவைக்காய்ச்சல் நோய்க்கு 22 பேர் பலியாகி இருந்தனர் இந்நிலையில் கோசி-மின் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 16 வயது இளம்பெண் ஒருவள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். கடந்த 10 நாட்களில் உயிரிழக்கும் 3-வது நபர் இந்தப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அங்கு பறவைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது.
மேகாங்-டெல்டா மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணுக்கு H5N1 என்ற பறவைக்காய்ச்சல் கிருமி தொற்றி இருப்பது அண்மையில் தெரிய வந்தது. இதையடுத்து தலைநகர் கோசி-மின்-சிட்டியில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் தீவிர சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தாள். இதனிடையே அதே மாகாணத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் H5N1 வைரஸ் கிருமிகள் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் நோய் வியட்நாமில் மேலும் தீவிரமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
சென்ற ஆண்டில் ஆசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் பரவிய போது வெகுவாக பாதிக்கப்பட்ட தாய்லாந்தில் புதிதாக வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. இதேப் போல மலேசியாவில் பறவைக்காய்ச்சல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு கூறி உள்ளது. சென்ற ஆண்டில் பறவைக்காய்ச்சல் காரணமாக தாய்லாந்தில் 12 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையள் நிலமை மோசம் உவர் குருவியை உள்ள விடாதேங்கோடா
பிறகு யாழ் களத்திலயும் பரவீடும் நோய் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: <img src='http://kuruvikal.yarl.net/archives/rooster3.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img115.exs.cx/img115/820/baby5.gif' border='0' alt='user posted image'>
[b]

