Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய செய்தி தாயகத்திலிருந்து
#23
'ஏனைய இன மக்களை பழிவாங்கும் நோக்கம் எமக்கு இல்லை அவர்களிடம் இருந்து ஒரு அங்குல நிலம் கூட எமக்கு வேண்டாம்"

விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்

தமிழீழத்தில் நடந்த கொடுமைகளையும் அவலங்களையும் எமது சக போராளிகள் ஊடாகவும் இங்கு வாழ்ந்த, இடம் பெயர்ந்த மக்கள் மூலமாகவும் நிறையக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், நேரடியாக வந்த இந்த நிலைமைகளை, மக்களுடைய உண்மையான நிலைப்பாடுகளை பார்க்கும் போது மனம் வெதும்புகின்றது.

உண்மையிலேயே தென் தமிழீழப் பிரதேசத்திற்குச் சென்று தற்போதைய சூழ்நிலையில் சில பணிகளை மேற்கொண்டு வரும்படி எமது தலைவர் பணித்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஏனெனில், தென் தமிழீழப் பிரதேசத்தில் எமது போராளிகளையும் எமது மக்களையும் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும் என்ற பெரிய அவா எமக்கு இருந்தது.யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு பல கட்டங்களின் பின் ஒரு எதிர்பார்ப்பும் எண்ணமும் எனது மனதிலே இருந்தது. வேலைப்பளுக்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் காரணமாக இதற்கான வாய்ப்பு கிடைக்காமற் போய்விட்டது, இம்முறையும் கிடைக்காமற் போய்விடுமோ என்ற ஏக்கமும் இருந்தது. ஆனால், அந்த வாய்ப்புக் கிடைத்ததும் மிக மகிழ்ச்சியோடு இன்று வந்துள்ளேன்.

எமது தலைவருடைய எண்ணங்கள், அவரது வழிகாட்டல்கள், தென் தமிழீழத்திலே உருப்பெற்று தெளிவாக வளர்ச்சிபெற்று நிற்கின்றதைப் பார்க்கின்ற போது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக எமது தேசிய தலைவர் தமிழீழ நிலப்பரப்புகளுக்கு, குறிப்பாக தென் தமிழீழ தேசத்திற்கு வருகை தருகின்ற காலம் எம்முடைய இறைமையை, எம்முடைய வாழ்வை உறுதிசெய்கின்ற ஒரு காலப்பகுதியாக அமைந்து, நேரடியாக தரிசிக்கின்ற காலம் விரைவில் வரும். தென் தமிழீழத்திலே கடந்த இடங்கள், பறிபோன பிரதேசங்கள், அவர்களுடைய ஆதங்கங்கள் கவலைகள் ஆகியவற்றினை எமது மக்களுடன் பகிர்ந்து கொண்ட போது எமக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.

சிறு வயது காலத்தில் தமிழர் தாயகம் பற்றிக் கேள்விப்பட்டிருகின்றோம். படித்திருக்கிறோம். தமிழர் பிரதேசம் எமது கைகளில் இருந்தது. இன்று தமிழர்களுடைய பெருமளவு நிலப்பரப்பு தமிழர் கைகளிலே இல்லை. அந்தப் பெரிய சோகம் எம்மை வாட்டி வதைக்கின்றது. இருந்தாலும் எங்களுக்கு ஒரு நிறைவு. ஏனெனில், சிங்களப் பேரினவாதத்தால் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நிலப்பறிப்புகளும் இனப்படுகொலைகளும் இடப்பெயர்வுகளும் பெருமளவு எங்கள் மீது திணிக்கப்பட்டு நாங்கள் அழிந்து கொண்டிருக்கும் போது எங்களுடைய தலைவர் இப்போராட்டத்தை ஆரம்பித்து உணர்வை ஊட்டி எங்களுடைய தேசத்தை, மக்களை காத்து நிற்கக் கூடிய தகுதியை ஏற்படுத்தியதால்தான் இன்று ஏதோ அழிவிலிருந்து மீண்டுள்ளோம். அதனையிட்டு பெருமைப்படுகின்றோம்.

எமது தலைவர் இப்போராட்டத்தை ஆரம்பித்து வழிநடத்தி தமிழர்களை வழிநடத்தியிருக்காவிட்டால் நாங்கள் இந்த இடத்துக்கு வந்து தமிழில் பேசியிருக்க முடியாது. நிச்சயமாக தமிழர்களைப் பார்த்திருக்க முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய தேசம் பறிபோய்க் கொண்டும் மக்கள் அழிந்து கொண்டும் இருந்தனர்.

கடந்த எங்களுடைய வரலாற்றிலே எங்களுடைய இனத்தின் உரிமைகளை, எமது தாயகத்தைப் பாதுகாப்பதற்கு எமது மூத்த தலைவர்கள் இயலுமான வரை முயற்சி செய்திருக்கின்றார்கள், போராடியிருக்கின்றார்கள். ஆனால், சிங்களப் பேரினவாதம் தனது பலத்தைப் பிரயோகித்து அனைவரையும் அடக்கி எங்களை அழிக்க முனைந்ததை மூத்த தலைவர்களால் எதிர்கொண்டு வெற்றி கொள்ள முடியாமற் போய்விட்டது.

தென் தமிழீழப் பிரதேசத்திலே ஒரு காலத்திலே தமிழர்கள் தான் எண்ணிக்கையில் முதலாவதாக இருந்தார்கள். ஆனால், இப்போது மூன்றாவது இடத்துக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம் என்று இங்கு கூறப்பட்டது. எங்களுடைய இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது; திட்டமிட்டு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முறியடித்து வெல்லக் கூடிய பலத்தை தமிழர் தேசத்திற்கு எம்முடைய தலைவர் உருவாக்கித் தந்திருக்கின்றார். அந்தப் பலத்தின் மூலமே காரணமாகத்தான் நாம் தலை நிமிர்ந்து நிற்கின்றோம். அந்தப் பலத்தின் வெளியேற்றப்பட்ட பகுதிக்குள்ளே எங்கள் மக்களை மீண்டும் குடியமர்த்துகின்றோம்.

தமிழர் வரலாற்றிலே ஒரு பாரிய எழுச்சி, ஒரு பாரிய மாற்றம் உருவாகியிருக்கின்றது என்றால் எங்களுடைய தலைவருடைய உறுதியும் அந்த உறுதியால் வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் ஊடாக சுமார் 16 ஆயிரம் போராளிகளின் உயிர்த்தியாகத்தினால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரை சிங்களப் பேரினவாதம் தங்களுக்கு ஏதாவது தேவையேற்பட்டால் மாத்திரமே பேசவருவார்கள். அந்தப் பேச்சுகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தங்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொண்டு தமிழர்களை படு குழிக்கும் தள்ளிவிடுவார்கள். இதுதான் எமது முழு வரலாறு. இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அனைத்துமே அடுத்த கணம் தூக்கி எறியப்பட்டன, கிழித்தெறியப்பட்டன. காரணம் தமிழர்களை ஏமாற்றலாம், தமிழர்களை ஏமாற்றுகின்ற வரலாற்று போக்குகள் தான் இதுவரை இருந்தது.

இன்றைய சூழ்நிலை உங்களுக்குத் தெரியும்.தமிழரின் வரலாற்றிலே புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. சர்வதேசத்தின் அழுத்தங்கள் சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு அது தொடர்பான உடன்படிக்கையை செய்து, தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கிறது என்றால், மக்களுடைய உரிமையை, அபிலாiர்களை ஏற்றுக்கொண்டு தான் வரவேண்டும் என்ற அடிப்படையில் தான் வந்திருக்கிறார்கள். இது ஒரு பெரிய மாற்றம்.

எங்களுடைய தந்தை செல்வா காலத்திலிருந்து எங்களுடைய மூத்த தலைவர்கள் பல தடவைகள் சிங்கள தேசத்திடம் இரந்து நின்றார்கள்.பல தடவைகள் பேசிப்பேசி ஜனநாயக வழியில் போராடிப்பார்த்தார்கள். அவர்கள் அதனை மதிக்கவில்லை. அனைத்துக்கும் அவர்கள் கொடுத்த பதிலடி, அடக்குமுறை, இன ஒழிப்பு, பிரதேச பறிப்பு இது தான் அவர்களுக்குத் தெரிந்த மொழி. எங்கள் மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதும் கோடிக்கணக்கான சொத்துகளை அழிப்பதும் தான் அவர்களின் செயலாக இருந்தது. எமது மூத்த தலைவர்களின் முயற்சிகள் எல்லாமே கானல்நீராகின.

இன்று யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு எங்களுடைய தலைவர் கிடைத்துள்ளார். தமிழர்களை வாழவைக்க வேண்டும் என்ற ஒரு வரலாற்றுப்பிறப்பாக எமது தலைவர் கிடைத்துள்ளார். அவரது காலத்திலே நாம் மீண்டும் அணிதிரண்டுள்ளோம், எழுச்சிபெற்றுள்ளோம். ஒரு காலத்தில் கூனிக்குறுகி ஏக்கத்துடன் வாழ்ந்த நாம், இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றோம். காலம் மாறி புதிய சகாப்தம் பிறந்துள்ளது.

எங்களுடைய பழைய வரலாற்றுக் காலத்தைப் புரட்டிப் பார்த்தால் நாங்கள் அழிக்கப்பட்டோம். துரத்தப்பட்டோம், அவலப்படுத்தப்பட்டோம். ஆனால், தமிழர் தேசம் விழிப்படைந்து, உணர்வு பெற்று எமது தலைவர் பின்னால் திரண்டு எழுச்சி பெற்ற பின்னர் "எங்களுக்கு அழிவைத் தந்தால் உங்களுக்கு அழிவுதான்' என்ற நிலைப்பாடு வந்த பின்பு தான், அவலங்களைக் கொடுத்தவனுக்கு அவலங்களையே சென்றடைய வைத்த காரணத்தினால் தான் இன்று நிலைமையே மாறியிருக்கிறது.

அதற்காக ஏனைய இன மக்களை பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்களிடம் இனவாதம் இல்லை. நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் சொந்த மண்ணில் காலம் காலமாக, ஆயிரம் ஆயிரமாண்டுகளாக வாழ்ந்த மண்ணில் சொந்த வீட்டிலே வாழுகின்ற உரிமை, கௌரவமாக அச்சமின்றி, சுதந்திரமாக எந்த நெருக்குவாரங்களுமின்றி வாழ வேண்டும். ஏனைய இன மக்களிடமிருந்து ஒரு அங்குல நிலமும் எமக்கு வேண்டாம். பூர்வீகமாக அவர்கள் வாழ்ந்தால் அந்த மண் அவர்களுக்கே சொந்தம். அதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

தமிழர் தாயகப் பிரதேசத்திலே காலம் காலமாக நாங்கள் வாழ்ந்த பூமி இது. எங்களுடைய கூட்டைக் குலைக்கின்ற போது எங்களுடைய கூட்டை நாம் மீண்டும் கட்டிக்கொள்ள வேண்டியது எங்களை நாங்கள் வாழ வைப்பதற்கும், வாழ்வதற்குமான ஒரே வழி. அதைத்தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-23-2003, 01:09 PM
[No subject] - by P.S.Seelan - 06-25-2003, 12:46 PM
[No subject] - by sethu - 06-25-2003, 12:48 PM
[No subject] - by sethu - 06-25-2003, 12:50 PM
[No subject] - by sethu - 07-19-2003, 09:21 AM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 10:37 AM
[No subject] - by Manithaasan - 07-19-2003, 11:49 AM
[No subject] - by Paranee - 07-19-2003, 01:23 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 01:45 PM
[No subject] - by kuruvikal - 07-19-2003, 01:56 PM
[No subject] - by Paranee - 07-19-2003, 02:54 PM
[No subject] - by Kanani - 07-19-2003, 02:59 PM
[No subject] - by Paranee - 07-19-2003, 03:32 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 03:49 PM
[No subject] - by sethu - 07-19-2003, 06:39 PM
[No subject] - by GMathivathanan - 07-19-2003, 06:56 PM
[No subject] - by sethu - 07-20-2003, 08:47 PM
[No subject] - by sethu - 08-05-2003, 01:14 PM
[No subject] - by P.S.Seelan - 08-06-2003, 12:26 PM
[No subject] - by GMathivathanan - 08-06-2003, 01:30 PM
[No subject] - by P.S.Seelan - 08-07-2003, 12:42 PM
[No subject] - by sethu - 08-10-2003, 09:10 AM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 12:35 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:48 PM
[No subject] - by P.S.Seelan - 08-10-2003, 08:08 PM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 08:24 PM
[No subject] - by P.S.Seelan - 08-11-2003, 04:01 AM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 11:01 AM
[No subject] - by P.S.Seelan - 08-11-2003, 12:48 PM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 01:49 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:14 AM
[No subject] - by P.S.Seelan - 08-12-2003, 08:17 PM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 10:56 AM
[No subject] - by Guest - 08-13-2003, 10:19 PM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 10:28 PM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 10:34 PM
[No subject] - by Guest - 08-13-2003, 11:01 PM
[No subject] - by Mathivathanan - 08-13-2003, 11:21 PM
[No subject] - by kuruvikal - 08-13-2003, 11:22 PM
[No subject] - by Paranee - 08-14-2003, 05:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)