08-10-2003, 09:08 AM
சமாதான முயற்சியின் பலன் வட கிழக்கிற்கு கிட்டாததற்கு அரசின் இயலாமை காரணம்
<span style='font-size:25pt;line-height:100%'>பிரபாகரன் சமஷ்டித் தீர்வுக்கு இணங்கினால் தனது தலையை வெட்டி அவருக்கு அனுப்புவாராம் ஜனாதிபதி</span>
யுத்தம் 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் முடிவுக்கு வந்த போதிலும் சமாதான முயற்சிகளின் பலாபலன்களை வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்குவதில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தோல்வி கண்டுவிட்டதாகக் கடுமையான குற்றச்சா ட்டைத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இந்தப் பின்னடைவுக்கு வடக்கு, கிழக்கிலுள்ள தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பு போதாமலிருக்கின்றது என்பது காரணம் அல்லவென்றும் அரசாங்கத்தின் செயற்றிறன் இன்மையே காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் உள்ள தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது, தெரிவித்திருக்கும் திருமதி குமாரதுங்க, அரசியல் தீர்வில் புலிகளுக்கு நாட்டமில்லை எனவும் அரசாங்கத்தை மிக இலகுவாக புலிகள் தவறான வழிக்கு இட்டுச் செல்வதாகவும் சாடினார்.இச்சந்திப்பு புதன்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இராப்போசன விருந்துக்கு முன்னர் இடம்பெற்ற உரையாடலின் போது சமர்;டி முறைமைக்கு பிரபாகரன் இணங்குவாரானால், நான் எனது தலையை வெட்டி, துண்டாடப்பட்ட தலையை பிரபாகரனுக்கு அனுப்புவேன் எனவும் தெரிவித்தார்.
பிரயோசனமற்ற 6 சுற்றுப் பேச்சுக்கள்
6 சுற்று சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சர்ச்சைக்குரிய அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி விடுதலைப்புலிகளுடன் இணக்கப்பாடொன்றைக் காண்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தவறிவிட்டது. இந்த ஆறு சுற்றுப் பேச்சுக்களும் பிரயோசனமற்ற நடவடிக்கைகளாகி விட்டன.
சமர்;டி முறையில் புலிகள் மனப்பூர்வமாக ஆர்வம் கொண்டிருந்தால் அரசாங்க, புலிகள் தரப்புப் பேச்சாளர்கள் ஒரு மாத காலத்திற்குள் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்வொன்றை எட்டியிருக்க முடியும். ஒரு மாதத்தில் வாரத்தில் ஐந்து நாட்களில் தினமும் மூன்று, நான்கு மணித்தியாலங்கள் கலந்து ஆராய்ந்து தீர்மானமொன்றை எட்டியிருக்க முடியும்.
கூட்டு அரசியல் விவகாரக்குழு குறைந்தது ஒரு தடவையாவது சந்திக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை தடுக்கும் அரசியல் தீர்வொன்றில் புலிகள் அக்கறை காட்டவில்லையென்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
இடைக்கால நிர்வாகம்
விடுதலைப்புலிகள் கோரும் இடைக்கால நிர்வாக சபையில் எந்தவொரு நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. இறுதித் தீர்வு தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமலிருக்கும் தற்போதைய கட்டத்தில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க இடைக்கால நிர்வாக சபைக் கோரிக்கையை முன் வைப்பது நியாயமாகத் தோன்றவில்லை என்று கூறிய ஜனாதிபதி, 'எதற்கு இடைக்காலம்?" எனவும் கேள்வியெழுப்பினார். 'பிராந்தியங்களின் ஒன்றியம" என்ற வரையறைக்குள் அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சட்டமூல நகலை 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தயாரித்து சமர்ப்பித்திருந்தது. அந்த அரசியல் தீர்வுப் பொதியை தயாரித்த பின்பே அரசியல் அமைப்பு வரைபில் இடைக்கால சபையை வழங்குவது தொடர்பாக குறிப்பிட்டிருந்தது. அச்சமயம் முன்வைக்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கல் யோசனையை விடுதலைப்புலிகள் நிராகரித்தனர். அந்தத் தீர்வுப் பொதியானது இந்தியாவின் சமர்;டி அதிகாரப் பரவலாக்கத்திலும் பார்க்க மேம்பட்டதொன்றாகும். முழுமையான சமர்;டித் தன்மை கொண்ட அந்த யோசனைகள் இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான சிறந்த அத்திவாரமாக இப்போதும் உள்ளன என்றும் திருமதி குமாரதுங்க கூறினார்.
அதேசமயம், 1997 இல் தான் முன்வைத்த தீர்வுப் பொதியை வழங்க தாம் இப்போதும் ஆயத்தமாகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2000 ஆம் ஆண்டு நகல் வரைபு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு இரு நாட்கள் விவாதம் நடைபெற்றது. அதற்கு ஆதரவளிப்பதாக ரணில் விக்கிரமசிங்க உறுதி அளித்திருந்த போதிலும் அதனை நிறைவேற்றவில்லை. அதனால் 11 மணித்தியா லங்களில் அந்த நகல் வரைபை நிறைவேற்ற முடியாமல்போனதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த நகல் வரைபில் அடங்கியிருந்த விடயங்களில் 99 சதவீதமானவற்றில் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் இணக்கம் கண்டிருந்தன. ஆனால், அந்த அரசியலமைப்பு நகலை எரித்ததன் மூலம் அதற்கு ஐ.தே.க. முடிவு கட்டியதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
புலிகள் குறித்து.....
ஹிட்லரின் பார்pசப் போக்குடைய பயங்கரவாத அமைப்பினர் விடுதலைப்புலிகள் என்று வர்ணித்த ஜனாதிபதி, மனித உரிமைகள், ஜனநாயகப் பிரதிநிதித்துவம், சகிப்புத்தன்மை என்பவற்றை புலிகள் கௌரவிப்பதில்லை என்றும் சாடினார்.
சமாதான காலத்தில் புலிகளுக்கு எதிரான தமிழ் அரசியல்வாதிகள், உளவுத்துi றயினரின் கொலைகளுக்கும் திருமதி குமாரதுங்க கண்டனம் தெரிவித்தார்.
தாராளவாதப் போக்கு, ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றில் புலிகள் காட்டும் ஈடுபாட்டைப் பொறுத்தே அந்த அமைப்புடன் எதிர்காலத்தில் ஏதாவது பேச்சுவார்த்தையென்றும் குறிப்பிட்ட திருமதி குமாரதுங்க, நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் மோசமாக சீர்குலைந்திருப்பதாகவும் இது தொடர்பாக பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சருக்கு கட்டுக் கட்டாக கடிதங்களை அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் வாதிகளையும், புலனாய்வுப் பிரிவினரையும் பாதுகாக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தவறிவிட்டதாகக் கண்டனம் தெரிவித்த அவர், இத்தகைய நிலைமையொன்று ஏற்பட தனது அரசாங்கம் இடமளித்திருக்காது என்றும் அவர் கூறினார்.
யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதிலிருந்து அரசாங்கத்துடன் சகவாழ்வை மேற்கொள்வதற்கு மிகக் கடுமையாக முயற்சி செய்த போதும் பிரதமரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைத் தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லையெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
களைப்பும் சலிப்பும்
ஐ.தே.மு. அரசுடன் பணியாற்றுவதில் தான் மிகவும் களைப்படைந்து விட்டதாகக் குறிப்பிட்ட திருமதி குமாரதுங்க, 'மேலும் அரசியல் சகவாழ்வைத் தொடர்வதற்கான திட்டம் இல்லை" என்றும் தெரிவித்தார்.
தேசிய அபிவிருத்தி லொத்தர் சபை விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், தனது தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பாக ஐ.தே.மு. போன்று தனது கட்சியும் அடாவடித்தனத்தில் இறங்கியிருக்க முடியும் என்றும், ஆனால், தான் மனதில் கொண்டிருக்கும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விடயம் ஒரு சிறியதொன்று என்றும் கூறிய ஜனாதிபதி, இந்தத் திட்டங்களை விரைவில் அமுல்படுத்தப் போவதாகவும் கூறினார்.
இராப்போசன விருந்தின் பின்னர் உத்தியோகபூர்வமற்ற முறையில் இடம்பெற்ற உரையாடலில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியலில் ஈடுபடுமாறு தனது பிள்ளைகளுக்கு கூறப்போவதில்லையெனவும், இப்போது அரசியல் சாக்கடை விவகாரமாகி விட்டிருப்பதால் இதில் பிரவேசிக்குமாறு தான் யோசனை கூறும் சாத்தியம் இல்லையெனவும் திருமதி குமாரதுங்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடனான பத்திரிகை ஆசிரியர்களின் இந்தச் சந்திப்பின் போது, பொதுஜன ஐக்கிய முன்னணி எம்.பி. லடீ;மன் கதிர்காமர், சரத் அமுனுகம, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தனது சகோதரன் அநுரா பண்டாரநாயக்கவினால் தெரிவிக்கப்படும் பல்வேறு கருத்துக்களை தன்னுடையவையென்றோ அல்லது கட்சியினதென்றோ எடுத்துக் கொள்ளக் கூடாதெனவும் அவை அநுராவின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.