Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவல நிலை
#3
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவுூர் பற்று பிரதேசத்திலுள்ள மாவடிவேம்பு மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் மக்களுக்குரிய வைத்தியசேவை இங்கு நடைபெறுவதில்லை. வாரத்தில் இரண்டு நாட்களாக செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகளில் மாத்திரமே மேற்படி மருந்தகத்தில் வைத்தியசேவை நடைபெறுகின்றது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான சந்தனமடு, பெரியவட்டவான், மயிலவட்டவான், பாலாமடு, ஈரளக்குளம் அடங்களாக பெரும்பாலான பகுதிகளும், இவற்றுடன் வந்தாறுமூலை களுவண்கேணி, பலாச்சோலை, சித்தான்டி, மாவடிவேம்பு, மொறக்கொட்டாஞ்சேனை, உதயன்மூலை போன்ற பல பகுதி மக்கள் மேற்படி வைத்திய சீர்கேட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.

இது இவ்வாறிருக்க மேற்படி மருந்தகத்திற்கு நிரந்தர வைத்தியர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரி உட்பட சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடைய கவனத்திற்கும் கிராமத்தின் பல அமைப்புக்கள் அறிவித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மேற்படி மருந்தகத்தில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறும் விடுதி, வைத்திய விடுதி போன்றவைகள் அமைக் கப்பட்டும் இதுவரையில் சுற்று வேலி அமைக்கப்படவில்லை.

இதனால் புல்வெளிகளில் மேய வேண்டிய மாடுகள் மருந்தகத்தின் உட்பகுதியில் மேய்கின்றது. இவற்றை கண்டும் காணாதவர்கள் போல் செயற்படுவது உண்மையில் மனவேதனைக்குரிய விடயமாகும்.

இம்மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்திப் பாதைக்கு எடுத்துச் செல்லவேண்டிய வைத்திய அதிகாரிகள், அபிவிருத்திப் பாதையில் எடுத்துச் செல்லவேண்டிய கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு தமிழர் தாயகப் பகுதிகளில் அபிவிருத்திக்காக மௌனம் சாதிப்பது தமிழர்கள் மத்தியில் இனப் பாகுபாட்டை எடுத்துக் காட்டுகின்றது. இனிமேலாவது உரியவர்கள் கண் திறப்பார்களா என பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Reply


Messages In This Thread
அவல நிலை - by sethu - 06-18-2003, 05:48 PM
[No subject] - by sethu - 06-19-2003, 05:50 PM
[No subject] - by sethu - 06-19-2003, 07:02 PM
[No subject] - by sethu - 06-25-2003, 09:11 PM
[No subject] - by sethu - 07-09-2003, 12:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)