Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளி
#12
தொடர்ச்சி..

தன்னை ஆட்கொண்டுள்ள " அல்சர்" நோய் சம்மந்தமாக எவரிடமும் எதுவும் சொல்லாதிருந்தவன் இவர் படிக்கும் போது தன்னுள் இருக்கும் நோயையும் இனிதான் எந்த வடிவில் விடிவிற்காக செயற்பட வேண்டும் அது அழியாத புகழைத்தர வேண்டும் என நினைத்தாரா? என்று இன்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா?

தன் மருத்துவப் பொறுப்பாளர் லெப் கேணல் சண்டோ விடம் மனம் விட்டுகதைக்கும் பொழுதில் இயக்கத்தில் சாதனை ஒன்று படைத்துக் காட்ட வேண்டும் அது இப்படியான சாதனையாகத்தான் இருக்கும் என்று லெப் கேணல் சாண்டோ கூட நினைக்கவில்லையாம்.

தொடர்ந்தது இவரது மருத்துவச் சேவை 1998 ஆடி மாதம் திலகருடன் அம்பாறை மண்ணை நோக்கி சென்றடைந்தனர். சிங்களவர்களாலும், முஸ்லிம்களாலும், கடலாலும், பாய்ந்துவரும் ஆற்றாலும் பாதிக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஊருக்குள் சென்று உணவு எடுத்துவந்து போராளிகளுக்கு கொடுத்து உண்டு களமாடி வரும் அந்த போராளிகளுக்கும் தன்னாலான மருத்துவச் சேவை செய்தாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் சென்றவன்.

வெடிகுண்டு தனைக்; கொண்டு
பகை மோதினாய்
விடிவெள்ளிப் பொழுதான
முகம் கொண்டவா

என்றென்று நான் பாட
எமதுள்ளமே
எவரும் நினையாத
கனல் வேங்கையே

தலைவனின் வளர்ப்பினை
தனியின்பமே
தளபதி அம்மானின்
உணர்வுள்ளமே.

பகையாண்ட வாகரை
மண் மீட்டவா
பார் கூட அறியாத
புதிரானவா !

யார் இனி எம்மண்ணைத்
தொட்டாள்வது
கரும்புலியிது விடுவது
நடவாதது.
எழுதிடும் கவிதையோ
ரெட்ணாகரன்
எமதீழ மண்கார்த்த
ரெட்ண்தரன்

தமிழீழ மண்ணின் காலடி படாத, கடமை புரியாத இடம் இருக்கக் கூடாது என்றும் ரெட்ணாதரனா யார் அவர் எங்கிருந்தார், எப்படியானவர், இப்படி கரும்புலியாகிப் போனாரே என எந்தப் போராளியும் சொல்லக் கூடாது எனும் எண்ணம் கொண்டுதான் தமிழீழ மண்ணெங்கும் உனது மருத்துவப் பணியை மேற்கொண்டாயா அதனால் உன்;னை, அறியாத, தெரியாத, புரியாத போராளிகள் நீ தனலாகிப் பொடியாகிப் போனபின் அறியப், புரியத், தெரிய வைத்தாய்.

தமிழீழ மக்களுக்கு சிங்;கள அரிசுகள் செய்த கொடுமைகள் ஒன்றன் பின் ஒன்றாக உன் மனக்கண்முன் வந்து போயிருக்கும் அதனோடு இணைந்தாற் போல் அம்பாறைக் காணகத்தில் எமதீழப் போராளிகள் படும் துன்ப துயரத்தை நீ நேரில் கண்டிருப்பாய் அவர்களின் சோக மழையில் நீயும் நனைந்திருப்பாய் அதனால் உன்மனம் தாங்கோணாத வேதனைத்தீயில் மூழ்கியிருக்கும் இதற்கான காரண கருத்தாக்களை தாக்கித் தகருத்த அவர்களைக் கனலில் பொசிந்து பொடியாக்கிட நினைத்திருப்பாய்.

அம்பாறைக் கானகத்தில் இருந்த போராளிகளுடன் இன்முகத்துடன் பழகி அவர்கள் களம் கண்டு வந்த பின்னர் மருத்துவ உதவிகளைச் செய்து அங்கு கடமையாற்றிய மருத்துவப் போராளிகளுக்கு மேலும் பல ஆலோசனைகளை வழங்கி அதற்கான அணுகு முறைகளையும் எடுத்துக்காட்டி விட்டு 1999 மாசி மாதம் முடிந்து சிவ மூர்தி மேட்டுப் பிரதேசம் வந்து மத்திய மருத்துவ மனையில் சேவை புரிந்த தெய்வம் நீ.

ஒத்துளைப்பு, ஒத்துப்போதல், ஒற்றுமை இவைகளை உன்னிட்த்தில் இருந்து கற்றுக் கொண்ட போராளி நீ படிக்கும் போராளிகளை கௌரவித்தல் எந்தத் துறையில் எந்தப் போராளி திறமையாக செயற்படுகின்றானோ அதனை இனங்கண்டு அவனை அதற்கான பொறுப்பில் வைத்துவிட வேண்டும் என்பதில் மிக அவதானமாக இருந்து காட்டியவன்.

உன் படிப்பும் அரவணைப்பும் கவர்ந்து விடும் அதனால் அனைவருடனும் நன்றாகம் பழகும் பக்குவம் கொண்டவன் குறிப்பாகச் சொல்வதெனில் மட்டுப்படுத்தப்பட்டு நடப்பவர் என்பதுதான் முக்கியம் உண்மை ஒருவர் எதை எப்படிச் சொன்னாலும், செய்தாலும் பணிந்து போகும் தன்மை, அன்புக்கு அடிபணிதல் இவையெல்லாம் இப்படியெல்லாம் நடந்ததற்று காரணம் நீ எரிமலையாக வெடித்ததற்குப் பின்பு தான் இத் தமிழ் கனல் மலையைப்பற்றி தெரிந்து கொள்ளட்டும் அதன்படி நடந்து களம் வெல்லட்டும் என்று சொல்லாமல் சொன்னாயோ.
Reply


Messages In This Thread
போராளி - by sethu - 08-07-2003, 12:48 PM
[No subject] - by sethu - 08-07-2003, 12:48 PM
[No subject] - by P.S.Seelan - 08-07-2003, 01:08 PM
[No subject] - by GMathivathanan - 08-07-2003, 08:45 PM
[No subject] - by P.S.Seelan - 08-08-2003, 09:48 AM
[No subject] - by P.S.Seelan - 08-08-2003, 12:25 PM
[No subject] - by sethu - 08-10-2003, 08:45 AM
[No subject] - by sethu - 08-10-2003, 08:46 AM
[No subject] - by sethu - 08-10-2003, 08:46 AM
[No subject] - by sethu - 08-10-2003, 08:47 AM
[No subject] - by sethu - 08-10-2003, 08:48 AM
[No subject] - by sethu - 08-10-2003, 08:48 AM
[No subject] - by Mathivathanan - 08-10-2003, 01:41 PM
[No subject] - by sethu - 08-11-2003, 11:24 AM
[No subject] - by sethu - 08-11-2003, 11:25 AM
[No subject] - by P.S.Seelan - 08-11-2003, 12:44 PM
[No subject] - by Mathivathanan - 08-11-2003, 01:53 PM
[No subject] - by sethu - 08-12-2003, 07:13 AM
[No subject] - by sethu - 09-03-2003, 06:44 PM
[No subject] - by Mathivathanan - 09-03-2003, 11:00 PM
[No subject] - by தணிக்கை - 09-21-2003, 08:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)