08-10-2003, 08:48 AM
மேஜர் ரெட்ணாதரன்
குமாரசிங்கம் ஆனந்தா மு.ரெட்ணாதரன்
கோடைமேடு எருவில் 08.08.1999
களுவாஞ்சிக்குடி. தமிழீழம்.
அன்பின் சில்வஸ்ரன் அண்ணனுக்கு உங்கள் உதவி தமிழீழத்திற்கு பெரிய உதவி இப்ப வந்து தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்து போராட்டத்திற்கு உதவி செய்வார்களாக இருந்தால் தமிழர்கள் சுதந்திரமாக எமக்கென்று ஒரு நாடு கிடைத்திருக்கும். இப்படித்துணிந்து இந்த உதவியை எல்லோராலும். செய்ய முடியாது இதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
எனது உடல் மறைந்தாலும் உயிர் நீங்கள் செய்த உதவியை மறக்கமாட்டாது. இந்தச் சம்பவத்தைக் கேட்டவுடன் அக்கா கவலைப்படுவார். அக்காவுக்கு ஆறுதல் கூறுங்கள் நான் எனது இனத்தின் விடிவிற்காக ஈழமண்ணில் வித்தாகப்போகின்றேன். எம் தமிழ் மக்களையும் மண்ணையும் ஆழமாக நேசித்து விட்டேன் அத்தோடு தேசியத்தலைவர் அவர்களையும் அம்மானோடு, தளபதிகள், போராளிகள், மாவீரர்களையும் என்னுள் இருத்தி விட்டேன்.
-நன்றி-
இப்படிக்கு, ரெட்ணாதரன்.
தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ் மாணவர் பேரவை, தமிழ் இளைஞர் பேரவையோடு தமிழீழ விடுதலைக்கான உணர்வுள்ள தமிழ் இளைஞர்கள் தமிழீழ விடுதலைக்கு வழங்கிய மண் இந்த வாகரை. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னிலையின் அரசியல் கட்சியின் (1990ல்) மாநாடொன்று நடாத்திப் பேரெடுத்த மண் பல தாணைத்தளபதிகளும், துணைத்தளபதிகளும, வீர, வீராங்கணைகளும், மாவீரர்களும் இந்த மண் பெற்றுத்தந்த பெருமை பெறுகிறது.
தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் இந்த வாகரை மண் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததொன்று என்று சொல்லலாம். தனியழகுதான் அதலால்தான் எதிரியான சிங்களவனுக்கும் இம்மண்ணில் தனியொரு விருப்பம்.
1998 ஆனிமாதம் 22ம் திகதி சிங்கள இராணுவப் படைகள் வந்து வாகரைச் சந்தியை மையமாக வைத்துத் தனது முகாமை அமைத்துக்கொண்டனர். இம்முகாமின் உயர் அதிகாரிகளில் ஒருவரான சங்கிலி என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் கருணநாயக எனும் சிங்களப் பகைவன் வந்து குடிகொண்டிருந்தான்.
கல்முனை, ஓந்தாச்சிமடம், மாவடிஓடை, வந்தாறுமூலை, வாகரை, கதிரவெளி குறிப்பாகச் சொல்வதெனில் மட்டக்களப்பு அம்பாறை வாழ் மக்களின் உயிர்களுக்கு உலை வைத்தவன் அப்பகுதி வாழ் மக்களின் பணத்தோடு நகைகளையும் தனது அதிகார மிரட்டலினால் பறித்தெடுத்து அவைகளை ஒன்றாக்கித் தான் அணிந்து கொண்டவன் தமிழர்களின் வியர்வைத்துளிகள் அவனுக்கு அணிகலன் அதனால் மக்கள் வைத்த பெயர்தான் சங்கிலி.
இந்தச் சங்கிலி வருகின்றானாம் என்றால் பொது மக்கள முதல் கைக்குழந்தைகள் வரை அச்சம்-பயம் கொள்ளும் காரணம் கண்ணில்பட்ட அழகான பெண்களைக்கண்டால் உடனே தன் படுக்கை அறைக்குப் பலவந்தமாக அழைத்துச் சென்று கதவைத் தாளிட்;டுக் கொண்டு இரவு முழுவதும் தன் இஸ்டப்படி பயன்படுத்திவிட்டு மறுநாள் காலையில் வீடு போக அனுமதிப்பானாம். அது யாராக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி பலாச்சுளையைச் சுவைப்பதுபோல் சுவைத்துவிடுவானாம். கேட்டாலே மனத்தோடு மானமும் நடுங்கிவிடும் மக்களுக்கு.
சங்கிலிக்கு 50,52 வயதிருக்கும் ஆனால் 25 வயது இளைஞனுக்கொப்பானவன். உயரம் ஐந்தேமுக்காலடியிருக்கும். அவனைக்கண்டால் தமிழ் மக்களுக்குப் பயம் காரணம் அவனது கையிலிருக்கும் ஆயுதத்தினால்தான் ஆயதமோ, படைவீரர்களோ இன்றித் தனிய வருவானாகில் மக்கள் அடித்துக்கொன்று விடுவார்கள். அப்படிப்பட்டவன். பார்த்திருக்கச் சங்கிலியின் உயிர் பறக்கும் ஆனால் முடியாது. என மக்களோடு சிறுவர்களும் பெருமூச்சு விடுவார்கள்.
மட்டக்களப்பு தோணிதாண்டமடு 1987.05.22ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணி பத்து நிமிடத்தை கடிகாரம் காட்டிக் கொண்டிருக்கின்றது வயல்வேலை செய்வதற்கான மக்கள் தங்கள் வாடிகளில் வேலை செய்த களைப்பினால் படுத்துறங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தச் சங்கிலியின் தலைமையிலான 50,60 பேர் வரையிலான சிங்கள இராணுவச்சிப்பாய்கள் இரவோடிரவாக வந்து வரம்புகளிலும் வயல்வாடிகளிலும் படுத்துக்கிடந்த ஆண்,பெண் குழந்தைகளையும் ஒரு வெளியடத்திற்கு அழைத்துச் சென்று எதிரிகள் அனைவரும் வளைத்து நின்று அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த கொடுமைக்காரன்.....!
அதேபோன்றுதான் இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின் மட்டக்;களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த ஒன்றுமறியாத 158 தமிழ் இளைஞர்களை ஆடு, மாடுகளைப் போல் லொறிகளில் ஏற்றிச்சென்று சுட்டுக்கொன்றொழித்த பாவி. மேலும் மாவடிஓடையில் 36 பொதுமக்களைக் கொன்று குவித்தவன். கல்முனை, ஓந்தாச்சிமடம், காயாங்கேணியிலும் இந்தக் கருணாநாயக புரிந்த அட்டாகாசங்களுக்கு அளவேயில்லை.
இக்கொடிய செயல்களினால் தமிழ் மக்கள் பயந்தனர். அடியுதைபட்டவர்கள், சித்திரவதைக்குட்பட்டவர்கள், சிறைச்சாலைகளில் கொல்லப்பட்டவர்கள், சிறைசெய்யப்ட்டவர்கள், எழுந்து கருமமாற்ற முடியாது படுக்கையில் கிடப்பவர்கள் ஏராளம்.
வாகரையில் முகாமிட்டிருந்த சிங்களப்பகைவன் பல ஊர்மக்களை அழைத்து நிவாரணப் பொருட்கள் கொடுப்பது வழக்கம் அம்மக்களிடம் ஆசைவார்த்தைகளைப்பேசி, அன்புகாட்டித் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கூட்டுறவுச்சங்கங்களிலிருந்து பெற்ற உணவுப் பொருட்களைத் தானே முன்நின்ற மக்களுக்குக் கொடுப்பது கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பெறும் சீனி, தேயிலையைக் கொண்டு தேனீர் வைத்து நிவாரணப் பொருட்கள் பெறவந்திருக்கும் மக்களுக்குக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களோடு இரண்டறக்கலந்து அவர்களிடமிருந்து புலிகள் பற்றிய தகவல்களை மேலும் பெற்று அதற்குரிய நபரை அல்லது இடத்தைக் கண்டுபிடித்து அதற்கான தண்டணையை வழங்குவது போன்ற செயல்களில் மிக வேகமாக இந்தச் சங்கிலியெனும் கருணாநாயக்க செயற்பட்டான்.
சில நேரங்களில் சில இடங்களில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணத்தால் எதிரிக்குச் சில சம்பவங்கள் சாதகமாக அமைவதுண்டு ஆட்பலம் கூடுதலாலும், காட்டிக் கொடுப்புக்கள் அதிகரிப்பதாலும் இந்த வாகரை கதிரவெளியில் உள்ள விடுதலைப்புலி போராளிகளின் நடமாட்டம் அரிதாகவே இருந்தாலும் எதிரிமீதான தாக்குதல்கள் மிகக் குறைவாகவே இருந்தது. இருந்த போதிலும் எதிரியும் அவதானமாகவே இருந்து செயற்பட்டான்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதிகளில் ஒருவரான ஜீவன் அவர்களுக்குப் பகைவன் சங்கிலியெனும் கருணாநாயக்க மீது கரும்புலித் தாக்குதல் ஒன்;;றை மேற்கொள்ளலாம் எனும் செய்தியொன்று கிடைக்கப் பெற்றது அதற்கான ஆலோசனையை மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி நாகேஸ் அவர்களுடன் கலந்தாலோசனை நடாத்தி அதற்காகச் செயற்படுத்தப்போகும் வழிமுறைகளை இத்திட்டத்திற்கு பொறுப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ரமணன் அவர்களின் ஆலோசனைப்படி செயற்பட முடிவெடுத்தனர்.
கருணாநாயக்க மீது புலிவீரர்களின் பார்வை மிக அதிகமாக இருந்தது. பலிகளினால் தன்னுயிருக்கு ஆபத்து உண்டென்பதையும் புரிந்து மிக விழிப்பாக இருந்தான். யார், எங்கு, எப்படி வந்தாலும் அவர்கள் மீது சந்தேகம் கொள்ளத் தவறுவதில்லை. வேவுப்புலிவீரர்கள் 28 நாட்கள் தொடர்ந்து செயற்படலாகினர்.
இறுதியில் எதிரிமீது கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வாகரை மண்ணில் பிறந்த இலட்சிய உணர்வு கொண்டதொரு மகன் அனைத்து உதவிகளையும் செய்து உரிய முறையில் கரும்புலி வேட்கையை அழைத்துச் சென்று இலக்கையும் காண்பிக்கத் தயாரானான்.
02.08.1999ம் திகதியன்று கதிரவெளி மண்ணில் தனது காலடியைப் பதித்தான் கரும்புலி வேங்கை ரெட்ணாதரன் வேளைவரும்வரையும் அந்தக் கரிய வேங்கை கதிரவெளி மண்ணிலிருந்து மக்களோடு மக்களாக உறவாடியது, விளையாட்டு வீரர்களுடன் கைப்பந்து விளையாடியது தான் தங்கியிருக்கும் வீட்டாருக்கு நடத்தபபோகும் அதிவேகப் புயலின் ஓசையும், ஒலியும் காதில் கேட்காத வண்ணமிருந்தது. அந்த வீட்டாரும் இயக்கப்பிள்ளை என்று தெரிந்தும் மெடிஸ் படிக்க வந்திருக்கின்றார் என்று மனம் மகிழக் காத்து உணவு கொடுத்து மகிழ்ந்திருக்க வைத்தனர்.
புரட்சிப்புயலின் புயல்வேகத் தாக்குதல் அதனால் மக்கள் புரிந்து கொள்ளப்போகும் விடயம் எதிரியான சிங்களப் பகைவனுக்கு மேலும் மனத்தை உலுக்கியிருந்த இடத்தை விட்டுத் தானே ஓடி வேறு இடம் தேடவேண்டிய நிலை இவனுக்கெல்லாம் மொத்தம்hகச் செயற்படுவதுதான் ரெட்ணாதரன் எனும் கரியவேங்கையின் இலட்சியக்கனவு.
பகைவனை அழிக்கப பல வழிகள் விடுதலைப்புலிகளில் உண்டு அதில் ஒன்று தான் இது. இப்படியான தாக்குதல்களுக்கு நான்முந்தி, நீமுந்தியென்று பலநு}று கரியவேங்கைகள் போட்டிபோட்டுக் கொண்டு வருவார்கள். இந்த ரெட்ணாதரனும் இப்படிச்சென்று தாக்குதல் ஒன்றை நடாத்த வேண்டுமென்று முடிவெடுத்தான் இலக்கு ஒன்று கிடையாது ஆறு ஆண்டுகள் எப்படி உருண்டோடியிருக்கும் அதனை எப்படியிவன் தாங்கிக்கொண்டிருப்பான். வேதனையின் மழையில் நனைந்து கொண்டிருந்தாலும் இவனை சோதனையெனும் பனித்துளிகள் வந்து மூடிக்கொள்ளும் சாதனையாளனுக்கு என்று காலன் தடுத்திருப்பான்.
கதிரவெளி மண்ணில் பந்து விளையாட்டு, பாசத்தோடு பழகிய நண்பர்கள், பாசக்குழந்தைகள் இவைகள் மறக்கமுடியாதவைகள் தான. இவனா........!, இந்தப்பொடியனா...... அவன் பாதம் பட்ட மண் எங்கே? கரம்பட்ட பந்தில் கைவிரல் தடம் எங்கே? பிஞ்சுக்குழந்தைகள் கன்னத்த்pல் முத்தமிட்ட தடம் எங்கே? முல்லைச் சிரிப்பெங்கே? முத்துப்பல் வரிசை எங்கே? பொறிகக்கும் விழிகள், போர்ப்பயிற்சி பெறும்போது கண்ட கம்பீரமான வீர நடை எங்கே? நிமிர்ந்த நோக்கு, நேர்கொண்ட பார்வை, அத்தனையும் இன்று எங்கே.....?, எங்கே.....?, எங்கே.....?.
மூத்த தளபதி கருணா அம்மானின் திட்டப்படி நன்கு அலசி,ஆராய்ந்து திட்டமிட்டுச் சென்று வென்றுவர வழிசமைத்துக் கொடுத்தனர். 08.08.1999ம் திகதி விடியற்காலை 4.30 மணியிருக்கும் தமிழீழ இலட்சிய உணர்வுகொண்ட தமிழ் மகன் விடிந்துவரும் ஒளியின் உதவியில் கதிரவெளியிருந்து நடந்து சென்று வாகரையில் எதிரியின் முகாமின் சந்தியில் இருந்து 50 மீற்றர் து}ரத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளறையில் வெடியுடையணிந்தவன் அமர்ந்து கொள்கிறான்.
பொறுமைக்கும் எல்லையுண்டு இதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்களும் புலிவீரர்கள்தான் காற்றோட்டம் மிகக் குறைவான அறை நான்கு சுவர்களுக்கும் மத்தியில் பொதுமக்களும் குவிந்தபடி இருக்கின்றார்கள். இந்தக் கரியவேங்கை காலை உணவின்றிப் பசியோடு இருக்கின்றான். மக்கள் கூடியிருக்கின்றார்கள். நிவாரணம் பெற அவர்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. மக்களுக்கு உணவுப்பசி-பதுங்கிக்கிடக்கும் வேங்கைக்கு பகையழிக்கும் பசி ஆனால் அது அந்த மக்களுக்குத் தெரியாது. கரியவேங்கைகள் சாவுக்குச் சவால் விட்டவர்கள். அதனால் வெடியாகிப் பொடியாகும் நேரத்தைக் கணக்கிட்குக் கொண்டவாகள். நேரம் நெருங்குகின்றது இலக்கிற்குரிய பகைவன் எப்படிப்பட்டவன், எந்த உடையில் வருவான் என்பதம் தெரியாது.
என்ன நோக்கத்திற்காக மக்கள் அங்கு கூடியிருக்கிறார்கள் இதற்குப் பொறுப்பாக இருப்பவர் யார், அவனுக்கு மட்டும் தெரியும். என்ன நடக்கப் போகின்றது. வேங்கையின் விருப்பு தண்ணீர் கொஞ்சம் அருந்த வேண்டும். அதற்கான பாத்திரம் எடுத்துக்கொண்டு அந்த வேங்கைக்குக் கொடுக்க அருந்துகின்றார். அதுவும் அந்த மக்களுக்குத் தெரியாது.
காலை 5.15 மணியிலிருந்து மதியம் 12.04 மணிவரையம் எதிரியின் குகைக்குள் மறைந்து கிடந்தான். அது எதிரியின் பிரதான முகாமின் பிரதான பாதையோரமாக மண்மூடை போடப்பட்டிருந்தது. முகாமின் நான்கு பக்கமும் மிகத் தீவிரமான பாதுகாப்பு, மிகப்பலமான கம்பி வேலிகள் முகாமிற்குள் செல்லும் பிரதானபாதை ஓரமாகவுள்ள வட்டக்கொட்டில் இதனுள்தான் எதிரிகளின் முக்கியஸ்தர்கள் சிலவேளைகளிலிருந்து உரையாடுவது.
ரெட்ணாதரனின் வீரசாதனைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நான்கு பேரூந்துகளிலும், மூன்று இராணுவ றக் வண்டிகளிலும் சிங்கள இராணுவத்தினர் இராணு பாதுகாப்பு கவச வாகனங்களுடன் வருகின்றார்கள். அது பொதுமக்களுக்கு நிவாரணம் கொடுக்கவரும் லொறிகளுக்கு பாதுகாப்பிற்காக வருகின்றதாம்.
இச்சம்பவத்தினால் மேலும் பல எதிரிகள் கொல்லப்படக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு என்பதும் தெரிகின்றது ரெட்ணாதரன் பதுங்கிக் கிடக்கும் அந்த வீட்டுச்சுவரின் ஒளிவரும் ஓட்டையை அதற்குரியவர் கொஞ்சம் பெரிதாக்கினார். முகாமிற்குள் இருந்த சிங்களப்பகைவனின் காலம் கரியபுலியினால் நெருப்பு மை கொண்டு எழுதப்படும் நேரம் நெருங்கிவிட்டதனால் சங்கிலியெனும் கருணாநாயக்க துவிச்சக்கர வண்டியில் முகாமிலிருந்து தன் சந்தேகப் பார்வையோடு வந்து வட்டக் கொட்டிலில் அமர்ந்து விடுகின்றான்.
துவிச்சக்கர வண்டியில் வந்த பகைவனைத் தன்னால் அழிக்கப்பட வேண்டிய இலக்கை அந்த வீட்டின் அறையில் இருந்த இலட்சிய வாதியின் கடைக்கண்களால் ரெட்ணாதரன் கண்டு விடுகின்றான்.
நெருப்புப் பொறிகக்கிக் காற்றின் உதவியின்மையினால் வியர்த்துக் கொட்டிக் கிடந்த மேனி புன்னகை பொழிந்த முகம். ஆ.....கா..... எதிர்பார்த்திருந்து இலக்கை அழிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்;கின்றது.
அறையினுள் இருப்பவர்கள் அந்த வீட்டில் இருந்து கடமையாற்றும் முக்கியஸ்தரின் சரளத்தினூடான பார்வை சங்கிலிக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் பக்கத்த்pல் உள்ள ப.நோ.கூ.சங்க உரிமையாளரிடம் சோப், தேயிலை, சீனிகளைக் கப்பம் கேட்டுப் பெற்றுச் செல்வதம் வழக்கம். அந்தப் புலனாய்வுக்காரன் வந்தால் இந்த முகாமையாளர் கேட்காமலே மேற்படி பொருட்களைக் கொடுத்து விடுவார். அன்றும் அப்படியேதான்.
'அடோவ் பெரிய லொக் மாத்தயா சந்தேகப்படுகுது அடிக்கடி நீ பாக்குறது! அதால மேசையை தள்ளிப் போடுறது நல்லது.|| என்று அறைகுறைத் தமிழில் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
நடக்கப்போகும் சம்பவம் இந்த மக்களுக்குத் தெரியாது தான் வந்தான், பார்த்தான், போனான் என்று மனம் தான் வியர்த்துக் கொட்டியது. எப்போதும் தர்மத்தின் வாழ்வைச் சூது கௌவிக் கொண்டதுதானே! பகைவன் அழிவுக்கான நேரம் மேலும் நெருங்கிக் கொண்டே வந்தது.
சிங்கள இராணுவச் சிப்பாய்களின் நடமாட்டம், பொதுமக்கள் போவது, வருவது நிவாரணப் பொருட்கள் பெறுவது எதிரியான இராணுவச் சிப்பாய்கள் அவர்களின் கைகளிலிருக்கும் பொதிகளைப்பார்ப்பது இவைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
இந்தக் கரிய வேங்கையான ரெட்ணாதரன் மறைந்து இருந்தவன் எழுந்தான். உரைப்பையில் 51ஃ2 கிலோ அரிசி, கூப்பன் அட்டை, மறுகையில் ஒன்றுமில்லாதவாறு முகத்தில் மகிழ்ச்சியுடன் நடந்தான். வரிசை வெள்ளைப் பற்களால் மென்மையான வணக்கம். குழுமியிருந்த மக்களும் அவனைப் பார்த்தனர் ஆனால் விளையப்போவது என்ன என்பது எவருக்குமே தெரியாது.
மறைத்த வைத்து வழியனுப்பிய அந்த ஜீவனின் இதயம் படபடக்கின்றது. கம்பீரமான நடை என்றும் காணக்கிடைக்காத பகையழிக்கும் நடை பசியினால் களைத்த மாதிரியான ஒரு பார்வை முகத் தோற்றம் எல்லாம் இந்த நிவாரணத்துக்காகத் தான் என்பதைப் போலிருந்தது அந்தக் காட்சி.
எதிரியான சிங்களச் சங்கிலி என்னும் கருணாநாயக்க தன் சகாக்களோடு சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்கின்றான். அரிசியையும் கூப்பன்துண்டையும் எடுத்துக்கொண்டு போன ரெட்ணாதரனை எவரும் தடுத்து நிறுத்தவில்லை. காரணம் பகையழிக்கட்டும் என்று இறைவனும் விட்டுவிட்டானோ..!
உயரதிகாரிகளுக்கு பாதுகாப்பாக பல இராணுவ வீரர்கள் அருகில் நின்று கொண்டிருக்கின்றார்கள். அத்தனை தடையையும் தாண்டிப் போகும் போது தான் சந்தேகம் கொண்ட மேலும் ஒரு பாதுகாவலன் ரெட்ணாதரனை இடைமறித்து ||நீ எங்கே|| எனக் கேட்டான்.
அரிசி அளவை குறைகிறது நான் கருணாநாயக்க ஐயாவிடம் சொல்லிக் காட்டப் போகின்றேன் எனக் கூறியபோதும் மேலும் சந்தேகம் கொண்ட பாதுகாவலன் ரெட்ணாதரனைக் கட்டிப்பிடிக்கும் பொழுது ||புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்|| என உரத்துக் கத்தினான்.
வெடியோசை மண்ணோடு, விண்ணையும் ஒருகணம் அதிரவைத்தது. சங்கிலி என்னும் கருணாநாயக்க இருந்தவிடம் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. பல நு}று ஆயிரம் மக்களின் உயிருக்கும், உடமைக்கும், உடலுக்கும் உலைவைத்து இளம் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடிய பகைவன் கருணாநாயக்க எங்கே? தெரியாது? இரண்டாவது கொமாண்டர் கால், கையிழந்தான் இவர் பதினோராவது நாள் கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்தான். ரெட்ணாதரனைக் கட்டிப்பிடிக்கப்போன மெய்ப்பாதுகாவலன் முன் பாதுகாப்பரணில் இருந்த ஐந்து இராணுவத்தினர் காயமடைந்தனர். மேலும் ஒருவர் காயப்பட்டு மரணமானார்.
ஆனால் கரியவேங்கை ரெட்ணாதரன் வாகரை மண்ணில் கொடிய பகைவனை அழித்த வெற்றிக்கழிப்பில் தமிழீழ மக்கள் மனங்களில் அவர்களின் விழிகளில் வற்றாத நதியாக ஓடிக்கொண்டே இருக்கின்றான்.
ரெட்ணாதரன் என்னும் கரிய வேங்கையினால் வாகரை மண் மகத்துவம் பெற்றது. சூழ்ந்திருந்த கொடியபகை எனும் இருள் தீப்பிளம்பினால் விடிவு பெறுகின்றது.
குடும்ப நிகழ்வு:-
களுவாஞ்சிக்குடி கோடைமேடுதான் இந்த ரெட்ணாதரன் பிறந்து, தவழ்ந்து விளையாடிய கிராமம். கோடைமேட்டின் தென்புறத்தின் பக்கம் அழகானதொரு குளம் குளத்தில் புூத்துத் தண்ணீரின் மேல் தலைநீட்டி நிற்கும் ஒல்லிப்புூக்களின் வாசம் கமகமவென்றிருக்கும். கொக்குக் குருவிகளும் கோட்டன்களும், மீன் கொத்திகளும் அந்தக்குளத்தை தமதாக்கிக் கொண்டுதானிருக்கும் குளக்கட்டில் நின்று தினமும் பார்த்து ரசித்துக்கொணடே இருக்கலாம்.
செங்கல் கொண்டு கட்டப்பட்ட வீடு ஐந்து அறைகளும், அதற்கான மண்டபமும் இருக்கு குமாரசிங்கம் புூரணிப்பிள்ளை தம்பதிகளுக்கு ஆனந்தா என்னும் அழகான மகன் பிறந்து விட்டான். சிவலலிதா, அருள்ராஜ், சரோஜதேவி (போராளியாகி ஓய்வு) நித்தியரூபன், டேவிட்டர், சிவமலர் ஆகியோர்களோடு இந்த ஆனந்தாவும் ஒருவர்.
மட்ஃஎருவில் கண்ணகி வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணதரம் வரைப்படித்தான். நல்ல கெட்டிக்காரன் தந்தை கமத்தொழிலை தனது தொழிலாகக் கொண்டிருந்தாலும் பாடசாலைவிட்டு வந்தாலும் சரி பாடசாலைக்குப் போகும் முன்பும் சரி தன் தந்தை தொழில் செய்யும் இடம் சென்று அவருக்கு உதவியாக நின்று செயற்பட்டு பாடசாலைக்கான நேரம் வந்ததும் அதிலும் கூடிய கவனம் செலுத்தியவன்.
உயரத்தோடு நீளம் பாய்தலிலும், உதைபந்து, கிரிக்கெட் விளையாடுவதிலும் கெட்டிக்காரன். என்னதான் இருந்தாலும் அமைதியான பார்வை, தன்னடக்கம், அளவான பேச்சு, நடந்தாலும் புல்கூடச்சாவாது என்பார்கள்.அப்படியான நடையழகன். சொல்லால் வடித்துக் காட்ட முடியாத சோதனைகளை இவனது கிராமம் சந்தித்திருக்கிறது. அது இவனுக்கு நன்கு தெரிந்திருக்கின்றது.
1990 நடுப்பகுதியில் யுத்தம் தொடங்கிவிட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் படை கொண்டு வந்து. கண்டவர், நின்றவர், போனவர்களையெல்லாம் குத்திக்கொலை செய்தும் வீதியோரங்களில் வீசி எறிந்தவண்ணம் சென்று கொண்டிருக் கின்றார்கள்.
1990.ஆனிமாதம் 12ல் கஞவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாமைச்சுற்றி விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சண்டை மிக மும்முரமாக இருக்கின்றது.
எதிரியின் வருகை கண்ட களுவாஞ்சிக்குடி, எருவில், கோடைமேடு, குறுமன்வெளி மக்கள் அயல் கிராமமான மகிளுர், மகிளுர்முனை சென்று உயிர் தப்பி விட்டனர். சமைத்தசோறு, கறிகளும் வீட்டில் இருந்தது. உண்ண உணவுமில்லை பசியோடு கிடந்தவர்கள் மறுநாள் காலை எதிரிகளின் நடமாட்டம் இல்லையென உணர்ந்து தங்களின் வீடுவரத் தொடங்கினார்கள்.
இந்த ஆனந்தா எனும் ரெட்ணாதரனால் பசி தாங்க முடியவில்லை. ஓடிவந்து சோறு கறிகளை எடுத்துச் சாப்பிட்டான். அப்படியே சகோதரர்களும், பெற்றோரும் உணவருந்திக் கொண்டிருக்கையில் தன் வீட்டைச்சுற்றி பதுங்கிக்கிடந்த சிங்கள இராணுவத்தினர் தப்பாக்கியை நீட்டியபடி ஓடிவந்து வீட்டாரைச் சுற்றி வளைக்கின்றனர் அனைவரையும் களுவாஞ்சிக்குடி முகாமிற்கு பக்கத்து வீட்டாரும் சேர்ந்து மொத்தம் 17 பேரை அழைத்துச் செல்கின்றனர். அந்த வேளைதனில் செல்பெட்டிகளைச் சுமந்துவரும்படி கட்டளையிட்டான். அதன்படியே அவர்களும் பயத்தினால் செயற்பட்டனர் அதில் இந்த ரெட்ணாதரனும் சுமைதாங்கிச் சென்றான்.
அரைமணி நேரத்தின் பின் வெடியோசைகள் காதைப்பிளந்தன யாரோ, எவரோ என்று ஒவ்வொருவரின் மனமும் கேட்டுக் கொண்டே இருந்தன. முகாமிற்கு கொண்டு சென்ற செல்பெட்டிகளை வைத்ததும் அந்த 17 பேரையும் வீடு போகச் சொன்னான் அந்தச் சிங்கள உயரதிகாரி.
எருவில் பிரதான பதை வழியாகத் தங்கள் வ|ட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் வரும் பாதையின் ஓரங்களில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டும் தமிழன் பிணமாகக் கிடக்கக் கண்டனர். ஒருவரோருவர் பேசாது கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த தமிழனை மனதிற்குள் கணகக்கிடடுக்கொண்டே வீடு வந்த போதுதான் மொத்தம் 43 உயிரற்ற தமிழனின் உடல்கள் தெருவில் கிடந்தது கணக்கில் தெரிந்தது.
உன்ன மகன் யோசிக்கிறாய் எனத் தந்தை தனயனான ரெட்ணாதரனைக் கேட்டதும் ஒன்றுமில்லையப்பா என்று மட்டும் மௌனத்தால் பதில் சொன்னான். எந்தெந்த ஊரில், எத்தனையெத்தனை உயிர்கள் இப்படிப் பகைவனால் பறிக்கப்பட்டதோ யார் அறிவார். கேள்விகளும் அவனுள் அதிகரித்திருக்கும் உன்ன விடை இவன் மனம் கொடுத்திருக்கும். அதுவும் யார் அறிவார்?.
குடும்பத்தில் குளப்பமில்லை இருந்தும் தங்கை சரோஜாதேவியுடன் சின்னப்பிரச்சனை அப்பா வரட்டுமண்ணா சொல்றன் என்றால் தங்கை. யோசித்துக் கொண்டே இருந்தவன் சொல்லாமல், எந்தவொரு புலிவீரனின் உதவியும் இல்லாமல் இயக்கமுகாமிற்குச் சென்றுவிட்டான்.
1999.08.09ம் திகதி ரெட்ணாதரன் வெடித்த செய்தி காட்டுத்தீ போல் உலகெங்கும் பரவியது. அது மட்டக்களப்பு குறுமன்வெளியில் முகாமிட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் காதுகளில் பட்டது. அதுவும் ரெட்ணாதரன் குமாரசிங்கத்தின் மகன் இதுதான் வீடு என்றும் இனத்துரோகிகள் மூலம் தெரியவந்ததனால் அடிக்கடி தொடர்ந்து மூன்று மாதம் இரவு பகலாக எதிரியானவன் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தான்.
அதுமட்டுமா இவன் தங்கை சறோஜாதேவியும் போராளிதான் ஆனால் ஓய்வு பெற்றுவிட்டாள் இதுவும் அந்த அதிரடிப்படையினருக்கு துரோகிகள் மூலம் தெரிய வந்தது. அனைவரையும் முகாமிற்கு அளைத்துச் சென்றான் எதிரி உனது மகன் தான் கரும்புலி ரெட்ணாதரன் என்று கேட்டதற்கு இல்லை என்னும் பதில்தான் தந்தையின் வாயில் இருந்து எதிரிக்கு கிடைத்தது. அப்படியானால் உன்ட மகளும் புலிதானே இப்ப வீட்டதானே இருக்கிறாள் மறுப்புத்தெரிவிக்காத தந்தை " சொற்கேளாமல் இயக்கத்திற்கு போனதிற்கு நான் என்னையா செய்கிறது" என்று தந்தை கேள்வியை அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியை பார்த்துக் கேட்டார். எதுக்கும் உன்டமகளை மட்டக்களப்பு கேம்புக்கு பெரிய ஐயாவிடம் கொண்டு போகப்போறம் என்றதற்கு ஐயா! நீங்க கடிதம் ஒன்று தாருங்க நானே கொண்டு போய்பெரிய ஐயாவிடம் கொடுக்கிறேன். என்றதற்கு அப்படியே கடிதமும் எழுதிக் கொடுக்கப்பட்டது.
கடிதத்தை பெற்றுக்கொண்ட தந்தை தன் மகள் சறோஜாதேவியை அளைத்துக் கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் பேசியபடி வீட்டை நோக்கினார்கள். திட்டம் தயாரானது பட்டிருப்பு பாலம் தாண்டி தந்தையும் மகளும் போனார்கள் தாயும் மற்ரைய பிள்ளைகளும் வந்துவிட வேண்டும். அப்படியே அனைத்தும் நடந்தது. இந்த விடையம் எதிரிக்கு தெரிய அவனும் பாலம் வரைக்கும் ஓடிவந்தான் அவனால் இவர்களைப் பிடிக்கமுடியவில்லை.
மட்டக்களப்பு பழுகாமம் இவர்களது உறவினர்களின் வீட்டில் சென்று குடிஅமர்ந்தனர் சொந்த வீடு எதிரிகளால் உடைக்கப்பட்டது விளைபயிர்கள் நாசமாக்கப்பட்டன ரெட்ணாதரன் வெடித்தபின் என்நிலமையை அறியமுடியாத பகைவன் தங்கள் மகன்தான் ரெட்ணாதரன் என்பதுபற்றிக் கதைக்கிறார்களா என்பதை அறிவதற்காக இரவு வேளைகளில் வீட்டோரமாகவந்து பதுங்கிக்கிடந்தும் போயிருக்கிறார்கள் என்பதும் பின்தெரிய வந்தது.
பழுகாமத்த்pல் இருந்தவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் இல்லை பசி, பட்டினியை எட்டிப்பாக்கலாயினர் வீட்டு நிலை தொழிலிலாயிருந்த போதிலும் ரெட்ணாதரனின் தங்கை சறோஜாதேவி திருமணமாகி கற்பிணிவேதனையோடு பசியும் வாட்டியது. ஆராய்ந்து பார்த்த தந்தைக்கு புதியதென்பு பிறந்தது.
வைக்கியலை பகுதியில் தமிழர்களும், சிங்களவர்களும் மிக அன்னியோன்னியமாக பழகி வாழ்ந்து வந்தனர் அக்கால வேளைகளில் லீமாத்தையா என்பவரோடு இரண்டரக்கலந்திருந்தவர் இந்நக் குமாரசிங்pகம். குறுமண்வெளிக்க்pராமத்தில் முகாம் விட்டிருந்த எஸ்.ரி.எவ்.இன் முகாம் பொறுப்பதிகாரிதான் லீமாத்தையாவின் மகன் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட ரெட்ணாதரனின் தந்தை மீண்டும் அம்முகாம் சென்று உயர் அதிகாரியைக் கண்டு நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறி என்மகள் தான் இயக்கம் மகன் எனக்கு இல்லை நானு உன்னைத் து}க்கி வளர்த்தவன்தான் உமது அப்பாவிடம் கேட்டுப்பாரும் எனக்கூற சரி அடுத்த கிழமை வாங்க நான் அப்பாக்கிட்டக் கேட்டுவந்து சந்திக்கிறன் எனக்கூறியதும் அதன்படியே அனைத்தும் சரியனக்கண்டு இவர்களது குடும்பம் மீளக்கோடை மேட்டடில் குடியமர்ந்தது.
வெடிக்கும் முன் ................ !
அருள்ராஜ் ரெட்ணாதரனின் அண்ணன் திருமணமானவன் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கின்றார். எக்காரணம் கொண்டும் பிரிந்திரிக்காது இணைந்து வாழுமாறு கடிதமும் அனுப்பி வைத்தார். அதன் படியே தம்பி வெடித்த செய்தியைக் கேட்டதும் தம்பியின் ஆசையை அண்ணன் நிறைவேற்றினான்.
எந்தவொரு போராளியுடனும் பிரச்சினைப்படாது தனக்கு உணவுூட்டி வளர்த்ததைப் போல் வரும் போராளிகளை அன்போடு அரவணைத்து, ஆதரித்து வழியனுப்பி வைக்கவேண்டுமெனத் தந்தைக்கு எழுதியிருந்தார்.
குடும்ப நிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு அனைவரும் நடக்க வேண்டுமென்று தன்சகோதரிகளுக்கு மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இதுதான் விடுதலைப்புலிகளான கரிய புலிகளின் அரிய பெரிய சாதனை வெடிப்பதற்கு முன்னர் சொல்லவேண்டியதை சொல்லவேண்டியவர்களுக்குச் சொல்லி விட்டு நேரம் குறித்துச் சென்ற இவர்கள் வித்தியாசமானவர்கள்.
தமிழீழ மன்னிப்பு போராட்டத்தினை ஆரம்பித்த எந்தந்த வகையில், எப்படி எப்படி எல்லாமோ செயற்பட வேண்டும், எந்தந்த வழியினால் ஆயுதங்களைப் பெறவேண்டும் இதற்கு மேலும் கடலும், தரைவானும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும். இதற்குப் போராளிகளை எப்படி எப்படி எல்லாமோ சேர்க்க வேண்டும் என்றெல்லாம் நன்கு திட்டமிட்டு ஒரு புலி வீரன் வெடிகுண்டோடு சென்று எதிரியின் கோட்டைக்குள்பாய்ந்து மிகக் கூடிய இழப்பைக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் எமது தலைவர் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
ரெட்ணாதரன் பால்போன்ற வெள்ளை நிறமும் பஞ்சுபோன்ற மேனி அது பயிற்சிப் பாசரைக்கு வந்து இரும்பு போல் இருந்தாலும் பஞ்சுபோல் தான் கரும்புலிகளுக்கு ஒப்பான அளவான பேச்சு கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்தவன் கரிகாலன் படைத்தளபதி கருணாவின் வளர்ப்பினில் மலர்ந்தவன்.
இவன் மருத்துவப்பிரிவில் ஆற்றிய சேவைக்கு எல்லையில்லை, பகைத் தொல்லை வரும்போது தோல்வி இல்லை. பகைதாக்கும் போது இவன் விழி நெருப்புப் பொறிகளைக்கக்கும் உண்மையில் ரெட்ணாதரன்தான் சந்தேகம் இல்லை.
புூனகரி முக்கூட்டு படைத்தள முகாம் தாக்குதலின் போது மருத்துவ படிப்பிற்கென வைத்தியதிகாரி டாக்டர் சாந்தி அன்ரியிடம் படித்து புூனகரிக்களத்தில் ஜெயந்தன் படையணியின் செயல் முறை பயிற்சி பெற்றவர். கருணாஅம்மானின் அனுமதி பெற்று 1994ல் மீண்டும் மட்டக்களப்பு மண்ணை வந்தடைந்தவர். விடுதலைப்புலிகளின் களமுனைத் தாக்குதல்களில் மிக மும்முரமாக நின்று களத்தில் விழுப்புண்ணடைந்து வரும் போராளிகளைக் கவனித்து எப்படிப்பிள்ளைகளைக் கவனிக்கின்றதோ அதைவிட மேலாகப் போராளிகளைக் கவனித்து வந்தவன்.
மட்டக்களப்பு கட்டுமுறிப்பு எதிரியின் முகாம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த வேளை ஜெயந்தன் படையணியில் முதன்மை மருத்துவராகச் சென்று கடமையாற்றினார். அவரின் அன்றைய சேவையை இன்றும் களம் கண்டுவரும் போராளிகளும் நினைத்துப்பார்ப்பார்கள்.
ஒருபுலிவீரனின் வளர்ச்சி அவனை வழிநடத்தும் களமுனைத்தளபதி, பொறுப்பாளர்களின் வழிநடத்தலில் தான் தாங்கியுள்ளது. என்பார்கள். தன் வைத்திய அதிகாரி சாந்தி கரிகாலன் அன்ரியிடம் வைத்தியம் சம்பந்தமாகப் படித்திரிந்தாலும் களமுனைகளில் எப்படி நடக்க வேண்டும் எனும் தந்திரங்களை இவர் தனது பொறுப்பாளராக இருந்த லெப்- கேணல் சாண்டோவிடம் இருக்கும் பொழுது கேட்டும் செயற்பட்டும் தெரிந்து கொண்டவர்.
இவரது திறமையின் அடிப்படையில் சேவையின் நிமித்தம் புலிகளுக்கும், சந்திரிகா அரசுக்குமிடையிலான பேர்நிறுத்த வேளையின் போது (1994 - காலப்பகுதி) மாவடி முன்மாரி மருத்துவப் பொறுப்பாளராக செயற்பட்டார்.
ஒரு வைத்தியர் அல்லது வைத்திய அதிகாரி நோயாளியின் நோய் சம்மந்தமாக கேட்கும் கேள்வியில் இருந்தும் அவன் பழகும் விதத்தில் இருந்தும் அந்த நோயாளியைப் பிடித்திருக்கும் நோய் தீர்ந்து விடும் என்பார்கள் அதேபோல் தான் களத்தில் விழுப்புண் அடைந்து மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளாகி எந்த போராளி வந்தாலும் அவரது அருகில் சென்று அன்பு கனிந் கனிவான வார்த்தைகளைப் பேசி அதற்கேற்றவாறு நோய்க்கான மாத்திரைகளைக் கொடுத்து நோயை குணப்படுத்தும் விதத்தை நிறையக் கற்றுக் கொண்டவன்.
தன்னை அம்மான் இந்தப் பணியில் இறங்கித் திறன்படச் செயற்படுமாறு கட்டளை இட்டார். அதனால் இப்பணியில் தான் திறமையாகச் செயற்பட்டுக் காட்ட வேண்டும் எனும் எண்ணத்தை தன்னுள்ளே கொண்டிருந்தவன் மருத்துவத்தோட