01-11-2005, 01:40 AM
குத்தூசி Wrote:சுவிற்சலாந்து கிளாறுஸ் மாநிலத்தில் ஒருவர் நடாத்திய நாடகம் ஒன்றை உங்கள் முன் கொணடுவருகிறேன்.
நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்துக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பணம் சேகரித்தனர். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களிடம் பணம் சேகரித்தார். வெளிநாட்டவர்கள் பெருந்தொகைப்பணம் அன்பளிப்பு செய்தனர். 4.000 ஸ்Fற் க்கு மேற்பட்ட தொகைப்பணம் சேர்ந்தது. அவ்வளவு பணம் சேர்ந்ததும் அந்த நபருக்கு பணத்தை கொடுக்க விருப்பம் வரவில்லை.
நீண்ட நேரம் யோசனைசெய்து ஒரு வழி கண்டுபிடித்தார். நண்பர்களிடம் சொன்னாராம் புனர்வாழ்வுக் கழகத்திடம் கொடுத்தால் அவர்கள் இந்தப் பணத்தை கொடுக்கமாட்டார்கள். அதனால் இந்த பணத்தை நான் எனது உறவினர்களுக்கு அனுப்பபபோகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அவருடைய பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை இவருடைய பெயரில் இருக்கும் அன்பு இவர் நடத்தையில் இல்லையே என்று நண்பர்கள் வேதனைப்பட்டார்களாம். தன்ப்ப்பட்டவர்களை செல்வந்தர்களாக்கும் சுனாமி வாழ்க
_________________
என் இமைகள் இமைக்கத் தயங்குகின்றன
உன் உருவம் சிதைந்துவிடுமென்பதால்
அப்பு குத்தூசி!
இச்செய்தி உண்மையாயின் குறிப்பிட்ட நபரின் பெயரை, அவருடைய முழு விபரங்களையும் இங்கு பிரசுரிக்கலாம். இவர்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் இனி இப்படியாக செய்ய முற்படுபவர்களுக்கு படிப்பியையாக அமைய வேண்டும்.
அதை விடுத்து காதுகளில் விழும் வதந்திகளை ( பலர் இப்போ இம்மாதிரி வதந்திகலை லண்டனிலும் பரப்புவதில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது) உண்மை பொய்மை அறியாது இப்படியாக பரவ விடுவது தவறு. இச்செயலானது எம்மக்களுக்கு எம்மக்களிடம் திரட்டப்படும் நிவாரணங்களைப் பாதிப்பதற்காக திட்டமிட்ட முறையில் கூலிகள் பரப்பி வரும் வதந்திகளுக்கு நாமும் எடுபடக் கூடிய சந்தர்ப்பங்கள் தான் அதிகரிக்கின்றது.
" "

