01-11-2005, 01:02 AM
குத்தூசி Wrote:சுவிற்சலாந்து கிளாறுஸ் மாநிலத்தில் ஒருவர் நடாத்திய நாடகம் ஒன்றை உங்கள் முன் கொணடுவருகிறேன்.
நடந்து முடிந்த சுனாமி அனர்த்தத்துக்கு இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் பணம் சேகரித்தனர். ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் தன்னுடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களிடம் பணம் சேகரித்தார். வெளிநாட்டவர்கள் பெருந்தொகைப்பணம் அன்பளிப்பு செய்தனர். 4.000 SFR க்கு மேற்பட்ட தொகைப்பணம் சேர்ந்தது. அவ்வளவு பணம் சேர்ந்ததும் அந்த நபருக்கு பணத்தை கொடுக்க விருப்பம் வரவில்லை.
நீண்ட நேரம் யோசனைசெய்து ஒரு வழி கண்டுபிடித்தார். நண்பர்களிடம் சொன்னாராம் புனர்வாழ்வுக் கழகத்திடம் கொடுத்தால் அவர்கள் இந்தப் பணத்தை கொடுக்கமாட்டார்கள். அதனால் இந்த பணத்தை நான் எனது உறவினர்களுக்கு அனுப்பபபோகிறேன் என்று சொல்லிவிட்டாராம். அவருடைய பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை இவருடைய பெயரில் இருக்கும் அன்பு இவர் நடத்தையில் இல்லையே என்று நண்பர்கள் வேதனைப்பட்டார்களாம். தன்pப்பட்டவர்களை செல்வந்தர்களாக்கும் சுனாமி வாழ்க
என்ன இது அநியாயமா இருக்குதே. :evil:

