Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
UNCEASING TSUNAMI
#1
ஓயாத சுனாமி



கடல் அலை அலைக்கழித்த எங்களது அலைச்சல் இன்னும் ஓயவில்லை.

அலை வருவது பற்றி எப்படித் தகவல்கள் எதுவும் இல்லாதிருந்ததோ அதே போல இன்று எங்களுக்கான எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் தகவல்களில்லை.

அலைகளில் எறிபட்டு மூச்சடக்கித் தபபி வந்து சுவாதீனமாக மூச்சு விடமுதல் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு எறியப்படுகிறோம்.

கடலிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கப்பால் தான் குடியிருக்கலாமாம். ஒரு நாள் வானொலி சொல்கிறது. இன்னொரு நாள் 300 மீட்டர் என்கிறது அதே வானாலி.

யாரைப் பற்றிக் கதைக்கிறார்கள்? எங்களைப்பற்றியா? ஏன் எங்களை விட்டு விட்டுக் கதைக்கிறார்கள். இரண்டு கிழமையாயிற்று. இன்றுவரை எங்களது விருப்பங்களை யாரும் கேட்கவில்லை.

கடற்கரையைப் பிரிந்து போய் செய்யத் தொழிலுமில்லை. எங்கள் கிராமத்தை விட்டுத் தூரப் போக எங்களுக்கு விருப்பமில்லை

நாங்கள் விட்டு விட்டு வந்தது
உயிர்களையும் பொருட்களையும் மட்டுமில்லையே
ஒரு வாழ்க்கை முறையையும் தானே உரிமைகள் பற்றிப் பேசும் யாருக்கும் ஏன் எங்கள உரிமைகள் பற்றிப் புரியவில்லை?

எங்கள் வீடு எங்கள் கிராமம் என்பது
நீள அகலக் கட்டுமானம் கொண்ட ஒரு வெற்று வெளியல்லவே.
அது ஒரு கலாசாரத்தைக் கொண்ட வரலாற்றுப் பின்னணியுடனான இடமில்லையா?

எங்களுக்கென்றொரு கோயில். அது சார்ந்த வாழ்க்கை. போகுமிடத்திலிருக்கும் கோயில் சடங்குகளில் எங்களைச் சேர்ப்பார்களா? இல்லை அங்கு ஒரு இரண்டாம் தர சாதியாய்ப் போவோமா?
காட்டுக்குள் ஒரு இடமாம். கடல் மட்டத்திலிருந்து உயரமாம். கடலுக்குக் காப்பாற்றிய பிள்ளைகளை யானைக்குக் கொடுப்போமா? இல்லாவிடில் எல்லைகளில் அகப்பட்டு போரில் அழிவோமா?

எங்கள் அச்சங்களுக்குப் பதில் தருவார் யாருமில்லை?

காகிதத்தில் திட்டமிட்டுக் கணனியில் படம் வரைந்து கண நேர அறிவிப்பில் அலைபோல எறிகின்றார்.

பத்தாம் திகதி பாடசாலை என்ற ஒரு அறிவிப்பு?

இருபத்தாறாம் திகதி உறங்கி நாம் விழித்த எம்-வீடு
எமக்கில்லையென்று உரைத்தது கடலலை.
இன்று நாம் உறங்காது உறங்கும் இவ்விடமும்
எமக்கிலலையென்று உரைத்தது இவ்வறிவிப்பு.
எந்த பள்ளிக்கூடத்துக்கு எந்தப் புத்தகத்துடன் என்ன உடையணிந்துää
எப்பொழுது நான் போவேன் எனக் கேடகிறாள் என் பிள்ளை

எங்களைப் பற்றிய தகவல்களை
அறியும் உரிமை எங்களுக்கு வேண்டும்?

Jeya
_____

மூன்றாவது கண் உள்@ர் அறிவுதிறன் செயற்பாட்டுக்குழு 8 தை 2005
Reply


Messages In This Thread
UNCEASING TSUNAMI - by Kamalinik - 01-11-2005, 12:18 AM
[No subject] - by tsunami - 01-11-2005, 07:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)