06-19-2003, 07:00 PM
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான நடவடிக் -கைகள் தொடர்பாக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. -புலித்தேவன்-
விடுதலைப்புலிகள் இயக்கம் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அந்தச் சங்கத்தின் சமாதான செயலக அலுவலக முக்கியஸ்தர் எஸ்.புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
இன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்த செய்தியொன்றை முற்றாக மறுத்த புலித்தேவன் பொதுஜன ஐக்கிய முன்னணியின் எந்த உறுப்பினர்களுடனும் தாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்று தாம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் மாத்திரமே சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தமது அமைப்பு உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் பத்திரிகையில் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்த மூன்று பொதுஜன ஐக்கிய முன்னணி சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்ததாக கூறிய அவர், ஆனால் தமது அமைப்பு பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளார்