08-10-2003, 08:40 AM
அரசாங்கம் மேற்கொண்டு வரும் போலியான சமாதான முயற்சிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி திருமதி. சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் பிரிவின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் இன்னமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மிலிந்த மொறகொட பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஸ் மிஸ்ரா உட்பட பலரையும் சந்தித்து சமாதான முயற்சிகளின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக விளக்கங்களை அளித்து வருகின்றனர்.