Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடற்படைத் தளம் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை...........
#1
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/10/20041019132832soosai.jpg' border='0' alt='user posted image'>
கடற்படைத் தளம் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை சூசை மறுத்துள்ளார்- தளத்தை பார்க்க பிபிசி நிருபருக்கு அனுமதி


விடுதலைப்புலிகள் அமைப்பின் 5000 போராளிகளும்இ முக்கிய கடற்படைத்தளமும் சுனாமி பேரலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாக கூறும் இலங்கை அரசின் செய்தி ஊடகங்களின் செய்திகளை கடற்புலிகளின் தலைவர் சூசை மறுத்துள்ளார்.

புலிகள் அமைப்பின் தலைவரும்இ உளவுப்பிரிவு தலைவரும் சுனாமி பேரலைகளில் கொல்லப்பட்டதாக அரச ஊடகங்களில் கூறப்படுவது ஒரு பொய்ப்பிரசாரம் என்றும் சூசை கூறியுள்ளார்.

அலைகளால் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் தளத்தை சென்று பார்வையிட எமது செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசனை அவர் அனுமதித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக தளத்தின் முழுமையான பகுதி காண்பிக்கப்பாடாத போதிலும்இ அங்கு தான் இரண்டு மிகப்பெரிய பீரங்கிப்படகுகளையும் மற்றும் வேறு மூன்று பீரங்கிப் படகுகளையும் பார்த்ததாகவும் அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

கடற்புலிகளின் தளம் கரையில் இருந்து ஒரு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் காடுகளின் மறைவில் இருந்ததாகவும் பிரான்சிஸ் ஹரிசன் கூறியுள்ளார்.

முகாமுக்குள் கடல் நீர் வந்ததாக கடற்புலிகள் கூறியுள்ளனர்.

அதற்கு சான்றாக அங்கு சகதியும் காணப்பட்டுள்ளது.

தமது அரசியல் பிரிவை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாக கடற்புலிகள் கூறியுள்ளனர்.

Source: BBC
Reply


Messages In This Thread
கடற்படைத் தளம் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை........... - by Vaanampaadi - 01-09-2005, 09:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)