Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு தகவல்...
#1
மாரடைப்புக்குப் பிறகு உண்டாகும் மன அழுத்தம் ஆபத்தானது. இப்படிப்பட்ட அழுத்தம் ஏற்படும் நோயாளிகளுக்கு பலவிதமான இதய நோய்கள் வருவதற்கும் அல்லது உயிரிழப்பதற்கான வாய்ப்பு 2 மடங்கு கூடுதலாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. மாரடைப்பால் பாதிக்கப்படும் நோயாளிகளில் பலரும் எளிதாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். மன அழுத்தமான இதய நோய்களை தூண்டி விடும் தன்மை உடையவை. இன்னொரு வகையில் சொன்னால் இதய நோய்களும் மன அழுத்தத்தை உற்சாகப்படுத்தும். இப்படிப்பட்ட நிலையில் மன ஆரோக்கியத்தை இயன்ற அளவுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்லது. மன அழுத்தம் இதய ரத்த நாளங்களின் செயல்பாடுகளை பெரிதும் பாதிப்பதன் மூலம், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட வேண்டி உள்ளது.
மன அழுத்தமே இல்லாத இதய நோயாளிகளுடன் ஒப்பிடும் போது, மாரடைப்புக்குப் பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதாவது ஒரு காரணத்தால் உயிரிழக்க 2 மடங்கு கூடுதல் வாய்ப்பும், இதய நோய்களால் உயிரிழப்பதற்கு 2.5 மடங்கு கூடுதலான வாய்ப்பும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.




<b>அழகை குலைக்கும் கருவளையம்.................................</b>

கண்ணுக்கு கீழே கருவளையம் ஏற்படுவது பரவலாக காணப்படும் பிரச்சினை. இவை மனிதர்களின் தோற்றத்தை பாதிக்கும். குறிப்பாக பெண்கள் அதிகமாக வருத்தப்படுகிறhர்கள்.

கண்களுக்கு மேலும் கீழும் உள்ள இமைகளில் காணப்படும் தோல் உடலின் மற்றப் பகுதி தோலைக் காட்டிலும் மிக மிக மென்மையானது. அப்படிப்பட்ட தோலில் கரு வளையங்கள் உண்டாவது, அதன் அடியில் செல்லும் ரத்த ஓட்டத்தை வைத்தே அமையும். சிலர் மெலானின் எனப்படும் நிறமிகளால் கருவளையம் ஏற்படுவதாக கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாள்பட்ட எரிச்சல், நோய்கள், உடல் பருமன், உள்ளிட்ட பல பிரச்சினைகள் கருவளையத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. அதே சமயம் போதுமான ஓய்வு, நல்ல சத்துள்ள ஆகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலம் ஆகியவை கருவளைய அளவை குறைக்கும்.

கண்ணுக்கு கீழே கருவளையம் உள்ள சிலருக்கு அபாயரகமான மருத்துவ சிக்கல்கள் காணப்படும். அதற்கான வாய்ப்புகள் பற்றி மருத்துவர் நன்கு அறிவார். ஆகையால் நாள்பட்ட கருவளையம் உள்ளவர்கள் காலதாமதமின்றி மருத்துவரை அணுகுவது நல்லது. சிலர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கருவளையத்தை மறைப்பு செய்யப் பார்க்கிறார்கள். இது விஷயத்தில் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அழகு சாதனம் அவருக்கு ஏற்புடையது தானா? என்று மருத்துவரை கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.



<b>இதய நோய் உயிரிழப்புகளை தடுக்க புதிய யுக்தி</b>

பொதுவாக இதய நோய்களை தடுக்க எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி, உணவு முறை, மருந்து- மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது வழக்கமானது. ஆனால் இதய இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சிகளை அளவிடுவதன் மூலம் இதய நோய்களால் உண்டாகும் உயிரிழப்புகளில் பாதியை முன்கூட்டியே தடுத்து விடலாம் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.
ஒருவருடைய இரத்த நாளங்களில் எந்தளவுக்கு அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை சி.ஆர்.பி. எனறு சுருக்கமாக சொல்லப்படும் C-reactive protein மூலம் கண்டுபிடித்து விடலாம். சி.ஆர்.பி. அளவை வைத்து இதய நோய்கள் வருமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே அறிய முடியும் என ஏற்கனவே படித்து உள்ளோம். இந்நிலையில் கொலஸ்ட்றோலை குறைப்பது போல, சி.ஆர்.பி. அளவை மருந்து -மாத்திரைகள் மூலம் குறைத்தால், இரத்த நாளங்களில் அடைப்புகள், சுவர்கள் கடினமாகுதல் போன்ற விளைவுகளை தடுக்க முடியும்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சி.ஆர்.பி. என்பது ஆபத்தை தெரிவிக்கும் காரணியே தவிர, ஆபத்தை உண்டு பண்ணும் வில்லன் அல்ல. அது நோய் உண்டாகும் செயலில் ஒரு பகுதி தான். அதுபோல கொலஸ்ட்றோலை குறைப்பதன் மூலம் ரத்த நாளங்களில் மேற்படி சுவர்கள் கடினமாகுதல், அடைப்புகள் உருவாகுவதை தடுக்க முடியும் என்பது உண்மை தான். ஆனால் இது ஒன்றால் மட்டுமே இவற்றை தடுக்க முடியாது. சி.ஆர்.பி. அளவை குறைப்பதும் முக்கியமான விஷயம் தான். இரத்தப் பரிசோதனை மூலம் சி.ஆர்.பி. அளவை கண்டுபிடிக்கலாம்.

இரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியை கண்காணிப்பதன் மூலம், இதய நோய்களால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தொடர்பான சிகிச்சையில் மனித குலத்துக்கு பெரிய அளவுக்கு நன்மை தரும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Reply


Messages In This Thread
ஒரு தகவல்... - by ஊமை - 01-09-2005, 06:56 AM
[No subject] - by sinnappu - 01-09-2005, 11:26 AM
[No subject] - by வெண்ணிலா - 01-09-2005, 12:26 PM
[No subject] - by thamizh.nila - 01-09-2005, 04:01 PM
[No subject] - by வெண்ணிலா - 01-09-2005, 05:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)