Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீணடிக்கப்பட்ட முயற்சி!
#4
<b>கனடாவில் இன்று தேசிய துக்க தினம் - தமிழ் மக்களின் 'ஈர நினைவுகளின் கூடல்" மாலை நடைபெறவுள்ளது </b>

<span style='font-size:21pt;line-height:100%'>கனடாவில் இன்று நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுனாமியினால் உயிரிழந்த மற்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கனடாவின் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று நாடளாவிய ரீதியில் அனைத்துக் கொடிகளும் நடுக்கம்பங்களில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் தலைநகர் ஒட்டாவாவில் ஆரம்பமாகும் தேசிய அரசாங்கத்தின் துக்க தின வைபவத்தில் பிரதமர் போல் மார்ட்டின் தலைமையேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கனடாவின் ஆளுனர் நாயகம் உட்பட முக்கிய அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனனர்

தமிழர்கள் பெருமளவில் வாழும் ஒன்ராரியோ மாகாண அரசும் தனது அஞ்சலி நிகழ்வுகளை இன்று நடத்தவுள்ளது. பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மாகாண முதல்வர் கலந்துகொள்ளவுள்ளார்.

மேற்குக் கரேயோர நகரான வாங்கூவரில் நடைபெறவுள்ள நிகழ்வில் மாலை 7 மணிக்கு மொழுகுவர்த்தி ஆராதனை இடம்பெறவுள்ளது.

கனடியத் தமிழர் பேரவை (சி.ரி.சி.), நடத்தும் 'ஈர நினைவுகளின் கூடல்\" என்ற நிகழ்வு ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. கனடாவின் பல்வேறு மட்ட அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பில் கிரஹாம், தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்ற்றன், ஓன்ராரியோ மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் ரோரி, ரொறன்ரே நகர முதல்வர் டேவிற் மில்லர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று மாலை 4:30 தொடக்கம் 7:00 வரை, ரொறன்ரோ டவுன்ரவுனில் அமைந்துள்ள நேத்தன் பிலிப் சதுக்கத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. </span>
நன்றி
புதினம் இணையம்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by Nanthaa - 01-08-2005, 10:02 PM
[No subject] - by cannon - 01-08-2005, 10:24 PM
[No subject] - by kavithan - 01-08-2005, 11:15 PM
[No subject] - by Nellaiyan - 01-09-2005, 12:25 AM
கனடாவில் - by Nitharsan - 01-09-2005, 01:20 AM
[No subject] - by Sriramanan - 01-09-2005, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)