Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீணடிக்கப்பட்ட முயற்சி!
#1
இன்று லண்டனில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியும் உல்லாசப்பயணிகள் கூடும் பகுதியுமான TRAFALGAR SQUARE என்னுமிடத்தில் சுனாமி பேரலையால் பாதிப்புள்ளாகியிருக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளின் அவலங்களை வெளியுலகுக்கு உணர்த்தவும், உதவி வழங்கும் உலக நாடுகளின் உதவிகள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தியும் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மிகக் குறுகிய அவகாசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்று கூடலானது, என்ன காரணத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்டதோ, அக்காரணம் நிறைவேற்றப்படாமல் வீணடிக்கப்பட்டிருந்தது.அங்கு பேசிய ஒரிருவரைத் தவிர ஏனையோர் தமிழ் மொழியிலேயே பேசி செல்ல வேண்டிய இடங்களுக்கு சொல்ல வேண்டிய செய்திகளை எடுத்துச் செல்லத் தவறிவிட்டார்கள். ஏறக்குறைய இந்நிகழ்ச்சியானது லண்டனில் வாழும் தமிழர்களுக்காவே தமிழில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் நடாந்த நிகழ்ச்சியாகி விட்டது.

அங்கு வந்திருந்த பலர் தங்களது ஏமாற்றங்களையும், விரக்தியையும் அமைப்பாளர்களுக்கு நேரடியாகவும், தமக்குள் கதைத்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தமிழில் பாடினார்கள், தமிழில் பேசினார்கள், தமிழில் பேசினார்கள் - யாருக்கு புரிவதற்கு? யாருக்கு கேட்பதற்கு?

இவ்வொன்றுகூடலானது..

1) அனர்த்தம் நடந்து இரு கிழமைகளாகிவிட்ட பின்பு நடந்த போதிலும் ஏன் ஒருநாள் முன்னறிவிப்பில் நடாத்தினார்கள்?
2) இவ்வொன்று கூடலின் முக்கிய செய்தியென்ன?

மொத்தத்தில் "IBC" இலும், "TTN" இலும் பேசிய அதே குரல்கள், அதே பாசையில், அதே மக்களுக்காக, வேறொரு இடத்தில் பேசிவிட்டுச் சென்றுள்ளார்கள்.
"
"
Reply


Messages In This Thread
வீணடிக்கப்பட்ட முயற்சி! - by Nellaiyan - 01-08-2005, 09:41 PM
[No subject] - by Nanthaa - 01-08-2005, 10:02 PM
[No subject] - by cannon - 01-08-2005, 10:24 PM
[No subject] - by kavithan - 01-08-2005, 11:15 PM
[No subject] - by Nellaiyan - 01-09-2005, 12:25 AM
கனடாவில் - by Nitharsan - 01-09-2005, 01:20 AM
[No subject] - by Sriramanan - 01-09-2005, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)