01-08-2005, 02:46 PM
அவலமான நேரத்தில் அநாகரிகமான செயல்: அரச ஊடகத்துறை மீது புலிகள் குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரும் கடற்புவி நடுக்க ஆழிப்பேரலையில் சிக்கி இறந்து அல்லது காணாமல் போயுள்ளார்கள் என சிறிலங்கா கடற்படைத் தளபதியை மேற்கொள் காட்டி அரச ஊடகத்துறையில் வெளியான விசமத்தனமான செய்தியை கண்டித்து விடுதலைப் புலிகள் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்தாவது:
இன்றுää 8 சனவரி 2005 காலை 6.00 மணிக்கு ஒலிபரப்பான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் ஆங்கில செய்திகள் தொடர்பான ஊடக அறிக்கை இது.
'வைஸ் அட்மிரல் தயா சந்தகிரியை மேற்கோள் காட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் புலனாய்வுப் பிரிவுத் தலைவரும் சுனாமி அனர்த்தத்தில் இறந்த அல்லது காணாமற் போனோர் பட்டியலில் அடங்கியிருக்கலாம் என செய்தி ஒலிபரப்பப்பட்டது.
'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகளின் உண்மைத் தன்மையை சரியான தரப்புகளில் இருந்து அறிந்து கொள்ளாதுää சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேடமுயலும் தரப்புகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விசமத்தனமாக செய்திகளை ஒலிபரப்பும் கீழ்நிலைக்கு இறங்கியுள்ளமை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தங்கள் கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவிக்க விரும்புகின்றனர்.
'இந்தளவு பாரிய அனர்த்தனம் நிகழ்திருக்கும் வேளையில் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான வதந்திகளைப் பரப்பும் பணியில் அரசின் பொறுப்பு வாய்ந்த ஊடகமொன்று ஈடுபடுவது வருந்தத்தக்கது. ஏற்பட்டிருக்கும் துன்பியல் நிகழ்வால் மக்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலையிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் பின்னணியிலும் செய்தி வெளியிடுவதில்ää உண்மைத் தன்மை மாத்திரமன்றி கவனம்ää கட்டுப்பாடு மற்றும் ஊடக தர்மம் என்பவற்றை பேணுவது அவசியமானது.
;'ஒரு தேசிய அனர்த்தத்தின் காரணமாக மக்கள் அவலநிலையில் இருக்கும் பொழுது அவர்கள் மத்தியில் பதட்டமும் குழப்பமும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யும் விதத்தில் தனது ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுவதை உறுதி செய்யும் தார்மீகக் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. வதந்திகளைப் பரப்புவதற்கும் விசமத்தனமாக பிரச்சாரங்களை மேற்கொள்வதற்குமான நேரம் இதுவல்ல."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:evil:
[புதினம.கொம்]

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>