Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அனானின் தமிழர் தாயக வியத்தை தடுக்க முயல்வதை முறியடிப்போம்..!
#15
<b>தமிழ்த் தாயகத்தை கொபி அனான் பார்வையிடாவிடின் வரலாற்றுத் தவறு'</b>

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனான், கடற்கோள் அனர்த்தத்தால் மிக மோச மாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர் தாயக பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிடத் தயங்கினால், பெரும் வரலாற்றுத் தவறொன்றுக்கு துணை போனவராகவே கருதப்படுவார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கொபி அனான், மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழர் தாயக பிரதேசங்களுக்குச் சென்று பார்வை யிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக உயரதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஜோசப் பரராஜசிங்கம் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:

ஐக்கிய நாடுகள் சபை உலகிலுள்ள அனைவருக்கும் நியாயம் வழங்கும் சபையாகும். எனவே, அதன் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது மிகமோசமான அழிவுகளை எதிர்கொண்டுள்ள வட,கிழக்கின் தாயகப் பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிடாவிட்டால், பெரும் வரலாற்றுத் தவறொன்றுக்கு வழியிட்டவராகவே கருதப்படுவார்.

இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், கொபி அனான் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் இனப்பிரச்சினையில் இருசாராரையும் இணைக்கக் கூடிய ஒரு நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது என்றும் சுட்டிக் காட்டியிருந்தமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

இப்படியான ஒரு நிலைமையில் இலங்கையின் கடற்கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவு, யாழ்.குடா நாட்டின் வடமராட்சி, மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிக ளும் மிகமோசமான அழிவுகளை எதிர்கொண்டுள்ளன.

கடற்கோள் அனர்த்தம் ஏற்பட்டு பல நாட்கள் கழிந்து விட்ட நிலையிலும் கூட, இப்பகுதிகளுக்கான அரசின் நிவாரண உதவிகளோ, மீட்புப் பணி களோ மிக மோசமான நிலையிலுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி, தலைநகர் கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு பொது அமைப் புகளாலும், தனியாராலும் எடுத்துச் செல்லப்பட்ட பல நிவாரண உதவிப் பொருட்களும் இடைவழியில் அபகரிக்கப்பட்டும் திருப்பியன ப்பப்பட்டு முள்ளன.

எனவே, உலகின் ஜனநாயக செயற்பாடுகளுக்கும் மனித உரிமைகளுக்கும் மதிப்பளித்து செயற்படும் உலகின் மிக உயர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனான், மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்ட தமிழர் தாயகப் பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டு அங்குள்ள அவலங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

தினகுரல்
Reply


Messages In This Thread
[No subject] - by yarlmohan - 01-07-2005, 05:33 PM
URGENT PLEA - by cannon - 01-07-2005, 05:34 PM
[No subject] - by ஊமை - 01-07-2005, 06:38 PM
[No subject] - by hari - 01-07-2005, 06:48 PM
[No subject] - by hari - 01-07-2005, 06:54 PM
[No subject] - by cannon - 01-07-2005, 06:58 PM
[No subject] - by hari - 01-07-2005, 07:04 PM
[No subject] - by hari - 01-07-2005, 07:53 PM
[No subject] - by yarlmohan - 01-07-2005, 08:40 PM
[No subject] - by Mathuran - 01-08-2005, 03:19 AM
[No subject] - by thamizh.nila - 01-08-2005, 03:28 AM
[No subject] - by Mathuran - 01-08-2005, 05:37 AM
[No subject] - by hari - 01-08-2005, 07:39 AM
[No subject] - by lakpora - 01-09-2005, 12:20 AM
[No subject] - by Nanthaa - 01-09-2005, 12:46 AM
[No subject] - by வியாசன் - 01-09-2005, 01:17 AM
[No subject] - by kuruvikal - 01-09-2005, 02:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)