Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகை சிந்து மரணம்
#10
சென்னையில் சுனாமி நிதி வசூல் செய்த போது டி.வி.நடிகை சிந்து நடுரோட்டில் திடீர் என்று சுருண்டு விழுந்த இறந்தார்.

இதுபற்றிய விபரம் பின் வருமாறு-

பிரபல நடிகை மஞ்சுளாவின் அக்கா சியாமளாவின் மகள் சிந்து. வயது 32. இவரது சகோதரர் சஞ்சீவ் சினிமா படங்களிலும், டி.வி தொடர் களிலும் நடித்து வருகிறார்.

ஊர் குருவி, இணைந்த கைகள் உள்பட பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்த சிந்து, பிறகு தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்தார். தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், ஏ.வி.எம் தயாரித்த அன்பே அன்பே உள்பட 60 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். சினிமாவில் நடித்துக் கொண்டே சின்னத்திரை தொடர்களில் பிஸியாக நடிக்க தொடங்கினார். அப்போது டி.வி நடிகர் ரிஷி என்பவருடன் காதல் ஏற்பட்டு, அவரை திருமணம் செய்துகொண்டார். சிந்துவுக்கு 7 வயதில் ஸ்ரேயா என்ற மகள் இருக் கிறாள்.

சமீபத்தில் சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக, கடந்த 2-ந்தேதி சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சிந்து ஆர்வமாக கலந்து கொண்டு 10 கி.மீ தூரம் நடந்து சென்று நிதி திரட்டினார்.

அப்போது மதியம் 2 மணி இருக்கும். திடீர் என்று மயங்கி நடுரோட்டில் விழுந்த சிந்து, பேச முடியாமல் தவித்தார். உடனே அவரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

என்றாலும், நேற்று சிந்து உடல் நிலை மோசம் அடைந்து கவலைக்கிடமாக இருந்தார். இரவு 8 மணியளவில் அவரது சகோதரர் சஞ்சீவிடம் பேசிய போது, பதட்டத்துடன் காணப் பட்டார். இந்த நிலையில் 8.30 மணியளவில் சிந்துவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உயிரை காப்பாற்ற முடிய வில்லை. நினைவு திரும்பாமல் சிந்து மரணம் அடைந்தார்.

அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள தெரு ஒன்றில், பாலாஜி அபார்ட் மெண்ட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 5 மணியளவில் பெசன்ட் நகர் சுடுகாட்டில் சிந்து உடல் தகனம் செய்யப்படுகிறது.

மெட்டி ஒலி, அண்ணா மலை, அகல்யா உள்பட புகழ் பெற்ற சின்னத்திரை தொடர் களில் நடித்து வெற்றிகரமாக வலம் கொண்டிருந்த சிந்து திடீர் என்று மரணம் அடைந்த தகவல் சினிமா வட்டாரத் திலும், டி.வி நடிகர்கள் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 01-07-2005, 12:57 PM
[No subject] - by AJeevan - 01-07-2005, 02:18 PM
[No subject] - by tamilini - 01-07-2005, 02:36 PM
[No subject] - by thamizh.nila - 01-07-2005, 03:26 PM
[No subject] - by வெண்ணிலா - 01-07-2005, 03:35 PM
[No subject] - by KULAKADDAN - 01-07-2005, 03:36 PM
[No subject] - by shanmuhi - 01-07-2005, 06:10 PM
[No subject] - by ஊமை - 01-07-2005, 06:36 PM
[No subject] - by ஊமை - 01-07-2005, 07:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)