01-07-2005, 06:34 AM
tamilini Wrote:என்ன யூட் அண்ணா..??? எங்க போறதுக்கு வழி சொல்லுறியள். உருப்பட்ட மாதிரி தான் நாடு......
சரி, சரி, ஏற்றுக்கொள்ள சிரமமான யோசனைகளை சொல்லிவிட்டேன்.
கொஞ்சம் வித்தியாசமாக முயற்சி செய்யட்டுமா?
<ul>
<li> முதலில் "சனத்தொகை பெருக்கம் வாழ்க்கைத்தரத்ததை அதிகரிக்கும்" என்பது போன்ற கருத்துக்கள் சரியானவையல்ல என்பதை தெளிவாகவும் வெளிப்படையாகவும் ஏற்றுக்கொள்வோம். உண்மையில் மக்கள் தொகையை குறைப்பதற்கும் வாழ்க்கைத்தரம் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது.
<li> ஆண் - பெண் விகிதாசாரம் 1 : 10 என்ற அளவில் இருக்கும் நிலையில், பலதார விவாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாம் தமிழர் அல்லாதவர்களை தமிழ்ப்பெண்கள் மணமுடிப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்வதையும் தமிழீழ மக்களையும் ஆதரித்தால் நல்லது தானே? உதாரணமாக அடேல் பாலசிங்கத்தை பாருங்கள். தமிழருடனேயே வாழவில்லையா? ஏன் தமிழரல்லாதோரை மணமுடிக்க கூடாது? எல்லா தமிழ் பெண்களுக்கும் திருமணம் செய்து வாழ ஆசையிருக்காதா?
<ul>

