01-07-2005, 03:03 AM
தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்க வேண்டும் என்பதில் குருவிகள் நாம் உடன்பட்டாலும் பலதார மணம் அது இதென்று சமூக ஒழுக்கங்கள் சிதைக்கப்படுவதை வரவேற்க முடியாது...! அப்படி ஒரு சமூகம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை...அதைவிட தமிழன் பூண்டோடு அழியினும் பறவாயில்லை....!
நீங்கள் சொன்னது போல நபிகள் வழியைப் பின்பற்றிய முஸ்லீம்கள் இன்று சமூக ரீதியில் வறுமைக் கோட்டில் தான் அதிகம் சீவியம் நடத்துகின்றனர்...! இலங்கையில் முஸ்லீம்களின் நிலையை எடுத்து நோக்கின் தெளிவாக இதைக் காணலாம்...! வளர்ந்த நாடுகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்று இருப்பதால்தான் உயர்ந்த குழந்தைப் பாரமரிப்பையும் பாதுகாப்பையும் தரமான கல்வியையும் அளிக்க முடிகிறது...!
6 கோடி தமிழர்களைக் கொண்ட தமிழகத்தில் கூட வறுமைக் கோட்டில் வாழ்வோரின் நிலைதான் அதிகம்...தரமான குழந்தைப் பராமரிப்பு,கல்வி அறிவு பெறுவோரின் அளவு ஒப்பீட்டளவில் குறைவு...நீங்கள் சொல்வது போல எமது தமிழ் சமூகமும் நடக்க முனைந்தால்...இப்படியான சிக்கல் நிறைந்த வளமற்ற சமூகம் உருவாவதுடன் சமூக ஒழுக்கம் நீதி என்பனவும் பாதிக்கப்படும்...!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு இன்று சர்வதேசமெங்கும் ஒலிக்கிறது...! குறிப்பாக எயிட்ஸ் பரவலின் பின்பு இது உரத்து உச்சரிக்கப்படுகிறது...! அதுபோக ஒரு பெண் ஆரோக்கியமான மன வளர்ச்சி பெற்று வளமான கருத்தரிக்கும் வயதாக 21 வயது கணிப்பிடப்பட்டுள்ளது...! இதற்கு கீழோ அல்லது மேலோ ஒரு பெண்ணைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்துவது அவளுக்கு இயற்கை அளித்த சுதந்திரத்தைப் பறிப்பது போன்றது...! தனது துணையைத் தானே தேர்ந்தெடுக்கவும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதும் முழுக்க முழுக்க அழுத்தங்களுக்கு அப்பால் ஒரு பெண்ணின் சுயவிருப்பின் அடிப்படையில் அமைய வேண்டியது...!
சமூக நிலை, குடும்ப நிலை, தனியாள் செல்வாக்கு இவற்றைக் காட்டி ஒரு பெண்ணை கட்டாய சனத்தொகைப் பெருக்குக்கு அழைப்பது அவளை இயந்திரமாகக் கருதும் கீழ்நிலை சிந்தனையே அன்றி வேறில்லை...! இது பெண்ணின் உணர்வுகளுக்கு இடமளிக்காது அவளின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலும் கூட...கண்டிக்கத்தக்கதும் கூட....!
பெண்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக வளமான சமூகத்தைத் தாமே கட்டி எழுப்பக் கூடியவர்களாக இருக்கும் போது மட்டுமே ஆணின் பக்கதுணை கொண்டு அவளால் ஒரு வளமான சமூகத்தை உருவாக்க முடியும்...சும்மா சனத்தைப் பெருக்கிப் பிரயோசனம் இல்லை...ஆபிரிக்கக் கண்டத்தில் நிகழ்வது போல...அந்த நிலை எமக்கு வேண்டாம்....! எமது சமூகம் யூதர்கள் போன்று சிறிதாயிருப்பினும் வளமானதாக இருந்தால் அதுவே போதும்...உலகைக் கூட ஆள முடியும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>