Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் பகுதிக்கு செல்லும் ஜநா செயலர்
#4
ஐ.நா.செயலாளர் நாயகம் கோஃபி அனான் முல்லைத்தீவுக்கும் செல்லவுள்ளார்

இவ்வார இறுதியில் ஸ்ரீலங்கா வருகைதரவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் கோஃபி அனான் இலங்கைத் தீவில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறிப்பாக முல்லைத்தீவுää அம்பாறைää காலி அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரில் செல்லவுள்ள கோஃபி அனான் அங்கு நிகழ்ந்துள்ள பாதிப்புக்களையும்ää நடைபெற்றுவரும் நிவாரண மற்றும் மீள்கட்டுமானப் பணிகளையும் நேரில் பார்வையிடுவார் என்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவுக்கோ அல்லது வடக்கிற்கோ கோஃபி அனான் புறப்படுவது இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை என்று கொழும்பிலுள்ள அரசாங்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் அவரது பயணத்தில் வடக்கும் கிழக்கும் கட்டாயம் உள்ளடக்கப்படவுள்ளதாக ஐ.நா. தரப்பு ஊர்ஜிதம் செய்துள்ளது.

இதற்கிடையில்ää இதுகுறித்துக் கருத்துக்கூறியுள்ள விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்ரர் அவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் கோஃபி அனான் அவர்கள் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும்ää விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விஜயம் மேற்கொள்ளும் அவரைää அரசியற் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரவேற்றுää சுனாமியின் பாதிப்புக்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு விரிவாக நிலைமைகளை ஆராய்ந்த ஐ.நா. கண்காணிப்பில் செயற்படும் யூனிசெஃப் அமைப்பின் தலைவர் கரோல் பெலமி அவர்கள்ää வடக்கு கிழக்கில் மிகவும் பாதிப்படைந்த சில பகுதிகளுக்கு நிவாரணமெதுவும் வழங்கப்படாதிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வார ஆரம்பத்தில் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிவாரணப் பணிகளுக்கான விசேட பிரதிநிதி மார்க்கறீற்றா வால்ஸ்ற்ரொம் அவர்களும் சுனாமி அனர்த்தத்தில் பாதிப்படைந்த அனைத்துப் பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் விரிவான அறிக்கையொன்றையும் ஐ.நா.விடம் சமர்ப்பித்திருந்தார்.

இதன் அடுத்த கட்டமாகவே கோஃபி அனானின் விஜயம் அமையுமென்று தெரியவருகிறது. கோஃபி அனானுடன் அவரது பாரியாரும் இவ்விஜயத்தில் பங்கெடுக்கவுள்ளார்.
நன்றி:புதினம்
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 01-05-2005, 03:15 PM
[No subject] - by Mathan - 01-05-2005, 03:19 PM
[No subject] - by anpagam - 01-05-2005, 05:28 PM
[No subject] - by sinnappu - 01-05-2005, 09:46 PM
[No subject] - by sethu - 01-05-2005, 09:58 PM
[No subject] - by தமிழரசன் - 01-06-2005, 07:12 AM
[No subject] - by sinnappu - 01-06-2005, 02:18 PM
[No subject] - by sinnappu - 01-06-2005, 03:33 PM
[No subject] - by Mathan - 01-07-2005, 03:36 AM
[No subject] - by Mathan - 01-17-2005, 04:25 PM
[No subject] - by Mathan - 01-18-2005, 04:15 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)