Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் பகுதிக்கு இராணுவம் ரத்ததானம் ???
#4
அடுத்த நகர்வையும் பாருங்கள்!

<b>சிறிலங்கா இராணுவத்தின் கீழ் நிவாரணப் பணிகள்: தமிழர் புனர்வாழ்வுக் கழக நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை!!</b>

தமிழர் தாயகம் உட்பட இலங்கைத் தீவகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண நடவடிக்கைகள் இராணுவ அதிகாரிகளின் கீழ் கொண்டு வரப்பட்டதையடுத்து தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரால் நேரடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததையடுத்து சிறிலங்கா படையினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.தேவராஜன் இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நேற்றிரவு இந்துக் கல்லூரி அகதி முகாமில் நிவாரணப் பணிகளிலில் ஈடுபட்டிருந்த தொண்டர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.திருக்கோவில் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நிவாரணப் பணிகளை பறிமுதல் செய்து தம் விருப்பப்படி விநியோகம் செய்தனர்.

மட்டக்களப்பு மன்ரசா அகதி முகாமிற்குச்; சென்று மருத்துவ சிகிச்;சை வழங்கி விட்டு திரும்பிய சமயம் கடமையிலிருந்த பொலிசார் மிகுதி மருந்து வகைகளை எடுத்துச்; செல்ல முடியாதவாறு தடுக்க முற்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள முகாம்களில் மக்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச்; செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் செங்கலடி கறுத்த பாலம் சோதனைச்; சாவடியில் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டது.

பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான விபரப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து தமிழர் புனர்வாழ்வு கழகம் தனது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பின் பணிப்பாளர் எஸ்.நரேந்திரன் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

பாதுகாப்பு படையினர் முகாம்களைப் பொறுப்பேற்றுள்ளதாக இராணுவத்தின் இணைய தளம் ஊடாக அறிய கூடியதாக உள்ளது.

புலம் பெயர்ந்து நாடுகளில் வாழும் தமிழர்கள் எம் தாயக மக்களுக்கு அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களை நேரடியாக எம் மக்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்;சம் எழுந்துள்ளது என்றார் அவர்.

இதற்கிடையில் நிவாரண நடவடிக்கைகள் அந்தந்த மாவட்டங்களுக்கு பொறுப்பான இராணுவத்தின் நேரடிப் பொறுப்பின் கீழ் கொண்ட வரப்பட்டதையடுத்து இன்று வழமைக்கு மாறாக சகல அகதி முகாம்களிலும் இராணுவத்தினர்ää விசேட அதிரடிப்படையினர்ää கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணக் கூடியதாக உள்ளது என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தலா 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் முகாம்களில் கடமையிலிருந்தார்கள். தற்போது அவர்களுக்கு மேலதிகமாக இந்த படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-05-2005, 02:43 PM
[No subject] - by KULAKADDAN - 01-05-2005, 02:48 PM
[No subject] - by hari - 01-05-2005, 03:19 PM
[No subject] - by Mathan - 01-05-2005, 03:28 PM
[No subject] - by hari - 01-05-2005, 04:43 PM
[No subject] - by aathipan - 01-05-2005, 07:51 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 04:50 PM
[No subject] - by Mathan - 01-06-2005, 06:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)