Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புயல் எச்சரிக்கை மையம் அறிவிப்பு................
#1
அந்தமானில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 6 அளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆந்திர கடற்கரையில் ராட்சத அலைகள் எழும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவை மையமாக கொண்டு கடந்த மாதம் 26-ந்தேதி ரிக்டர் அளவு கோலில் 8-9 அளவிலான பூமி அதிர்ச்சி ஏற்பட்டது அல்லவா? இந்த பூமி அதிர்ச்சி சென்னை, ஆந்திரா, கேரளா, அந்தமான் நிகோபார் தீவு, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய இடங்களில் உணரப்பட்டது. அப்போது பூமி குலுங்கியது.

இந்த பூமி அதிர்ச்சியின் காரணமாக மேற்கண்ட நாடுகளில் சுனாமி அலைகள் எழும்பி கடற்கரை பகுதியை தாக்கின. இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.

இந்த பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுமித்ரா தீவை மையமாக கொண்டு தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில் ஒரு அதிர்வு 6.3 அளவுக்கு இருந்தது. இந்த தொடர் அதிர்வு கள் எல்லாம் சுனாமி தாக்கிய பெரும்பாலான நாடுகளில் உணரப்பட்டன. அதில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவுக்கு இருந்தது. அந்தமானில் மட்டும் இதுவரை 99 முறை தொடர் நில அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் நேற்று அந்தமானில் மேற்கு கடற்கரையை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோலில் 6 அளவுக்கான பூமி அதிர்ச்சி நேற்று ஏற்பட்டது. அந்தமான் இதன் எதிரொலியாக ஆந்திர கடற்கரையில் வழக்கமான அலைகளை விட ஒரு மீட்டர் (3 அடி) உயரத் துக்கு அதிகமாக அலைகள் எழும்பி தாக்கும் என்று விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மையம் நேற்று இரவு அறிவித்து உள்ளது.

ஆந்திர கடற்கரையில் வழக்கத்தை விட பரிய அலைகள் எழும்புவதால் தமிழகம் மற்றும் இலங்கைக் கடற்கரைகளிலும் அதே போன்ற அலைகள் எழும் அபாயம் உள்ளது.
Reply


Messages In This Thread
புயல் எச்சரிக்கை மையம் அறிவிப்பு................ - by ஊமை - 01-05-2005, 06:32 AM
[No subject] - by தமிழரசன் - 01-05-2005, 10:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)