Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை
#1
[b]தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை

(புதன்கிழமை 5 சனவரி 2005 தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகத்துறையின் பொறுப்பாளர்.)

வடக்கு கிழக்கில் சுனாமி பேரலையினால் ஏற்பட்ட அழிவால் இடம் பெயர்ந்தவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடர்பாக உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கான அவசர வேண்டுகோள் இது. முற்றுமுழுதாக மனிதாபிமானம் சார்ந்த விடயங்களின் மக்களைப் பிழையாக வழி நடத்தும் விதமான தவறான ஊடக அறிக்கைகளை நாம் காணக் கூடியதாக உள்ளது. ஊடகச் செய்திகளில் தவறுகளும் பக்கச்சார்புத் தன்மையும் இருப்பது தற்பொழுது முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான கூட்டு முயற்சிகளைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் அவல நிலையைக் கருத்தில் கொண்டு செய்தி வெளியிடுவதில் அவதானமும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்று இதனூடாக வேண்டிக் கொள்கின்றோம்.

ஆரம்ப கட்டத்தில் அநேகமான ஊடகவியலாளர்கள் கொழும்பை மையமாகக் கொண்டிருக்கும் வகையில் ஊடகக் கவனம் கொழும்புக்கு அண்மித்த பிரதேசங்களிலேயே இருந்தது. இது எங்களால் விளங்கிக் கொள்ளக் கூடியது. தற்பொழுது ஊடகக் கவனம் வடக்கு கிழக்கின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திரும்பியிருக்கும் வகையில் இன்னும் கூட செய்திகளில் சில உண்மைத் தன்மையற்ற நிலை காணப்படுவது அதிர்ச்சி தருவதாக உள்ளது. வடக்கில் புலிப் புரட்சியாளர் நலன்புரி நிலையத்துக்கு தீ வைத்தார்கள் தெற்கில் இருந்து வரும் உதவி விடுதலைப் புலிகளால் தடுக்கப்படுகின்றது ரஷ்ய வைத்தியர்களுக்கு புலிகளின் பிரதேசத்துக்குச் செல்ல அனுமதி மறுப்பு போன்ற செய்திகள் துரதிஸ்டவசமானவை.

இத்தகைய செய்திகள் தொடர்பாக பொருத்தமான தரப்புக்களிடம் இருந்துää உதாரணத்துக்கு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு அல்லது சம்மந்தப்பட்ட தரப்புடன் உண்மைத் தன்மை பற்றி சரி பார்த்துக் கொள்வது உள்நோக்கத்துடன் செய்திகளை வழங்கும் மூலங்களில் தங்கியிருப்பதை விடச் சிறந்தது.
இந்த வகையில் மனிதாபிமானப் பணி தொடர்பான செய்திகளில் திரிபு ஏற்படாமல் இருப்பதை ஊடகங்களுக்கு வசதி செய்து கொடுக்கும் முகமாகää சில விடயங்களைத் தெளிவுபடுத்துவது பொருத்தமானது எனக் கருதுகின்றோம்;.

தனிநபரோ நிறுவனங்களோ மற்றும் எவராக இருப்பினும் அழிவுப் பிரதேசங்களுக்கு வந்து பார்வையிடுவதையும் நலன்புரி நிலையங்களில தங்கியிருப்பவர்களைச் சந்திப்பதையும் மாவட்ட மட்டத்தில் உள்வரும் எல்லா உதவிகளையும் பொறுப்பாக பதிவுக்குட்படுத்தி வெளிப்படைத் தன்மையுடன் வைத்திருப்பதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களின் காத்திரத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் நாம் திறந்த மனதுடன் வரவேற்கின்றோம். மாவட்ட மட்டத்தில் அரச அதிபர் சர்வதேச உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இக்கட்டமைப்பு மிகச் செயற்றிறன் மிக்க ஒன்றென நிரூபிக்கப்பட்டுள்ளது.

இங்கு விஜயம் செய்யும் சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள்ää ஐ.நா அமைப்பின் அதிகாரிகள் போன்றோர் இக்கட்டமைப்பின் செயற்றிறனை வெகுவாகப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எங்கள் நிர்வாகப் பிரதேசத்துக்குள் மனிதாபிமானப் பணி தொடர்பாக எல்லோருக்கும் தங்குதடையற்ற அனுமதி உண்டு என்பதுடன்ää உதவிப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்கள் விடுதலைப் புலிகளால் திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற குற்றச்சாட்டில் எவ்வித உண்மையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். மனிதாபிமான உதவிக்கெனக் கொண்டு வரும் பொருட்கள் மீது வரியேதும் அறவிடப்படுவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மனிதாபிமானப் பணி தொடர்பான விடயங்களில் விளக்கங்கள் தேவைப்படின் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதன செயலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நன்றி: நிதர்சனம்
Reply


Messages In This Thread
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை - by anpagam - 01-05-2005, 02:01 AM
[No subject] - by Nada - 01-05-2005, 02:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)