01-04-2005, 04:26 PM
<b>வட கிழக்கை தொடர்ந்து புறக்கணிக்கும் இலங்கை</b>
வட கிழக்கு இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கு விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியுதவி கோர முடியாது என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால், அரசாங்கத்தின் உதவி தங்களுக்குக் கிடைக்காத நிலையில் அன்னிய நிதியுதவியை நேரில் பெறுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என புலிகள் கூறியுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சிக்கு சந்திரிகா அளித்துள்ள பேட்டியில், நிவாரணப் பணிகளில் தமிழர் பகுதி, சிங்களர் பகுதி என்றெல்லாம் பாகுபாடு பார்க்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
என்ன வகையான உதவி தேவை என்பதை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசியில் கேட்டு, வேண்டியதை செய்து வருகிறார் எனது உதவியாளர் என்றார் சந்திரிகா.
ஆனால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட வட கிழக்குப் பகுதியில் அரசின் உதவி போதிய அளவில் வந்து சேரவில்லை. இப் பகுதிகளில் புலிகள் தான் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரூ. 30 கோடியை புலிகள் ஒதுக்கியுள்ளனர்.
மேலும் இப் பகுதியின் மறு நிர்மாணத்துக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என்றும் புலிகள் கோரியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் இலங்கையில் குவிந்த வண்ணம் இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களுக்கு இதுவரை எந்த உதவியும் வந்து சேரவில்லை என்கிறார் புலிகளின் கமாண்டரான பானு.
மேலும் வட கிழக்குப் பகுதிக்குள் வரும் தன்னார்வ அமைப்புக்களின் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை ராணுவ செக்போஸ்ட்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.
வட கிழக்கில் அழுகிய உடல்களாலும், தொடர் மழையாலும் சுகாதார நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக திரிகோணமலையில் நிலைமை படு மோசமாக உள்ளது.
படாலிபுரம் என்ற இடத்தில் பள்ளியொன்றில் 209 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது. இந்தப் பகுதிக்கு இலங்கை அரசின் உதவி கிடைக்கவில்லை.
புலிகளுக்கு யூனிசெப் பாராட்டு:
கிளிநொச்சியில் சுனாமி அலைக்கு 113 பிஞ்சுக் குழந்தைகள் பலியான செந்தளிர் இல்லத்தை ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியத்தின் (யூனிசெப்) செயல் தலைவர் கரோல் பெல்லாமி நேரில் பார்வையிட்டார்.
சுனாமி அலையில் இருந்து உயிர் தப்பிய 38 குழந்தைகளைச் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
தமிழ் மறுவாழ்வு மையத்தின் பெண்கள் மறுவாழ்வுப் பிரிவின் சார்பில் இந்த ஆதரவற்றோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து முல்லைத் தீவுக்குச் சென்ற கரோல் அங்கு சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழர் குடியிருப்புப் பகுதிகளைப் பார்வையிட்டார். இங்கு மிக மோசமான சேதம் விளைந்துள்ளதாகக் கூறிய கரோல் இப் பகுதியின் மறு நிர்மாணப் பணிக்கு யூனிசெப் உதவும் என்றார்.
வட கிழக்கில் நிவாரணப் பணிகள் மிகச் சிறப்பாக நடப்பதாகவும் புலிகளை அவர் பாராட்டினார். பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனையும் கரோல் சந்தித்துப் பேசினார்.
தமிழ்ச்செல்வன் பேட்டி:
இதற்கிடையே சுனாமியால் சீரழிந்து போன வட கிழக்குப் பகுதிகளை சீரமைக்கவும், புணரமைக்கவும், மக்களுக்கு மறுவாழ்வளிக்கவும் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுக்கும் பணிகளை புலிகள் இயக்கத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான செயலகம் தொடங்கிவிட்டதாக தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
தமிழ்நெட் இணையத் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தப் பணி மாவட்டவாரியாக நடக்கிறது.
மக்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களில் இலங்கை அரசும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டு வருகின்றன என்றார்.
கை கொடுக்கும் தமிழர்கள்:
இதற்கிடையே வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான இலங்கைத் தமிழர்கள் வட கிழக்குப் பகுதிகளில் வந்திறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
சுனாமியால் உயிரிழந்தோர் விவரம்:
அம்பாறை 11,225 பேர்
மட்டக்களப்பு 2,040
யாழ்பாணம், கிழக்கு வடமராச்சி 780
முல்லைத்தீவு 1,666
திரிகோணமலை 946
மொத்தத்தில் இப் பகுதியில் 16,650க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சில ஆயிரம் பேரைக் காணவில்லை.
இதே போன்ற நிலை தான் இலங்கையின் தென் பகுதிகளிலும் நிலவுகிறது. அங்கும் சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சில ஆயிரம் பேரைக் காணவில்லை.
மொத்தத்தில் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000த் தாண்டியுள்ளது.
தமிழகத்தை காத்த இலங்கை:
சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர கடல் அலைகளின் பெரும் தாக்கத்தை இலங்கை சந்தித்துவிட்டதால் தான் ராமேஸ்வரம் தொடங்கி தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படவில்லை.
திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் மீதான கடல் அலைகளை இலங்கையின் கிழக்குப் பகுதி சந்தித்துவிட்டது.
அதே நேரத்தில் இலங்கைக்கு மேலே மூக்கு மாதிரி நீட்டிக் கொண்டிருக்கும் நாகப்பட்டிணமும், அதன் முனையில் இருந்த வேளாங்கண்ணியும் பெரும் சேதத்தைத் சந்தித்துள்ளன. மேலும் இலங்கையின் தென் பகுதியைத் தாக்கிய சுனாமி அலைகள் கொஞ்சமாய் திரும்பி வந்ததன் விளைவைத் தான் கன்னியாகுமரி மாவட்டமும் குளச்சலும் சந்தித்துள்ளன.
இப் பகுதியிலும் சுனாமி பேய்த் தாக்குதலை இலங்கை தான் பெருமளவில் சந்தித்துள்ளது.
இலங்கையால் தான் தென் தமிழகம் இந்த அளவோடு சுனாமியிடம் இருந்து தப்பியுள்ளது.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>