Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழகான கடற்கரைகள் மாயமாய் மறைந்தன
#1
அந்தமானில் `சுனாமி' ஏற்படுத்திய சேதம்:
அழகான கடற்கரைகள் மாயமாய் மறைந்தன
தீவுகள் இரண்டாக பிளவு


போர்ட்பிளேர், ஜன.3-

`சுனாமி' பேரலைகள் தாக்கியதை தொடர்ந்து, அந்தமானில் இருந்த அழ கிய கடற்கரைகள் மாயமாய் மறைந்து விட்டன. சில தீவு கள் 2 ஆக பிளந்து விட்டன.

சுனாமி பயங்கரம்

சுமத்ரா தீவில் உருவான சுனாமி எனப்பட்ட பயங்கர கடல் அலைகள், அந்தமான் - நிக்கோபார் தீவுகளையும் தாக் கின. இதனால் அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். கோடிக்கணக்கில் பொருள் சேத மும் ஏற்பட்டுள்ளது.

சுனாமி அலைகள், அந்தமானின் கடல் அழகை நாசப்படுத்தி விட்டது. காம்பல் கடற்கரை உள்பட பல கடற்கரைகள் இருந்த இடம் தெரியாமல் மூழ்கி விட்டன.அந்தமானிலும், அதனை யொட்டி உள்ள தீவுகளிலும், கடல் மட்டம் உயர்ந்துள்ளது. டிரிங்கெட் தீவு உள்பட சில தீவு கள் 2 ஆகி விட்டன. இந்த தகவலை அந்தமான் கவர்னர் ராம் காப்சே உறுதி செய்தார்.

நீர்மட்டம் உயர்ந்தது

சுனாமி தாக்கியபின், போர்ட் பிளேர், பேம்பூ பிளாட் தீவு போன்ற இடங்களில் கடலின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சுனாமி தாக்கியதால் `தப்பித் தால் போதும்' என்ற நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அந்தமான் தீவை விட்டு வெளியேறி விட்ட னர். மேலும் பலர் ஓட்டல் முன் பதிவை ரத்து செய்து வருகிறார் கள். இதனால் அங்கு சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளது.

போர்ட்பிளேரில் மட்டும் 150 ஓட்டல்கள் உள்ளன. அங்கு எந்த சுற்றுலா பயணியும் இல்லை. எனவே ஓட்டல், விடுதிகள் மூடப் பட்டன. இது பற்றி ஓட்டல் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சுனாமி அலைகள் தாக்கியதால் ஓட்டலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. சுற்றுலா வருமானத் திலும் 95 சதவீத பாதிப்பு ஏற் பட்டு விட்டது" என்றார்.

ஓட்டல்கள் மூடப்பட்டதால், ஓட்டலில் பணி செய்வோர், சென்னை, கொல்கத்தா போன்ற தங்கள் சொந்த ஊருக்கு புறப் பட்டு சென்று விட்டனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போர்ட்பிளேரில் பள்ளிக்கூடம் மற்றும் கலை அரங்குகளில் தங்க வைக்கப் பட்டு இருக்கிறார்கள். ஏராள மான பேர், பிளாட்பாரங்களில் தூங்குகிறார்கள்.

இது பற்றி பஞ்சாயத்து தலைவர் ராபர்ட் ஹென்றி கூறிய தாவது:-

பாலைவன வாழ்க்கை

நானும், என் கிராம மக்கள் 40 பேரும், எங்கள் கிராமத்தில் இருந்து போர்ட்பிளேர் வந்து சேர்ந்தோம். எங்கள் வாழ்க்கை பாலைவனம் ஆகி விட்டது. எந்த உதவியும் இன்றி தவிக்கிறோம்.

எங்களுக்கு உண்ண உணவு இல்லை. பெண்களும், குழந்தை களும் பட்டினி கிடக்கிறார்கள். எங்களுக்கு இந்த அரசு உணவு கொடுக்கவில்லை என்றால், சாக வேண்டியதுதான். சில வாழைப் பழங்களை மட்டும் கொடுத்தார் கள்.சுமில்லா, கிங்கரா தீவுகளில் இருந்த 15 கிராமங்களில் இப் போது 2 கிராமங்கள்தான் எஞ்சி உள்ளன. மற்றவற்றை கடல் தின்று விட்டது.

மருத்துவ வசதி

எனது குடும்பத்தினர் யாரும் இப்போது உயிரோடு இல்லை. என்னுடைய கின்மார் கிரா மத்தை கடல் அடித்துச் சென்று விட்டது.

காயம் அடைந்த ஏராளமான பேர், முகாம்களில் இருக்கிறார் கள். அவர்களுக்கு எந்தவித மருத் துவ உதவியும் கிடைக்கவில்லை. மருத்துவ வசதி கொடுக்கப்பட வில்லை என்றால், பலர் நோயால் தாக்கப்படுவார்கள்".

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் கூறினார்.

Source: Dailythanthi
Reply


Messages In This Thread
அழகான கடற்கரைகள் மாயமாய் மறைந்தன - by Vaanampaadi - 01-03-2005, 06:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)