Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப்புலிகளுடன் இணைந்து சுனாமி மீட்பு பணி........
#1
யாழ்ப்பாணம்-முல்லைத்தீவு மாவட்டங்களில்
விடுதலைப்புலிகளுடன் இணைந்து சுனாமி மீட்பு பணி
சிறப்பு குழுவை சந்திரிகா நியமித்தார்


கொழும்பு, ஜன. 3-

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் இணைந்து சுனாமி மீட்பு பணிகளுக்கு உதவ சிறப்பு குழுவை அதிபர் சந்திரிகா நியமித்தார்.

இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு

சுனாமி அலைகளின் சீற்றத்தால் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது. அதை தேசிய பேரழிவாக இலங்கை அதிபர் சந்திரிகா அறிவித்தார். முழுவீச்சில் அங்கு நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் உள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை செய்யாமல் சிங்கள அரசு ஒதுக்கி விட்டது என்று விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தினர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் வசமுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்று இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறி இருப்பதாவது:-

சிறப்பு குழு

இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பேரழிவை சரி செய்ய சிறப்பு குழு ஒன்றை அதிபர் சந்திரிகா நியமித்துள்ளார். இந்த சிறப்பு குழுவின் தலைவர் வடகிழக்கு பகுதி கவர்னர் டைரோன்னே பெர்னாண்டோ.விடுதலைப்புலிகளுடன் இணைந்து நிவாரண பணிகளை அரசின் சிறப்பு குழுவும் கவனிக்கும். பிரான்சு நாட்டில் இருந்து வந்துள்ள மீட்புக்குழு தற்போது வவுனியாவை தலைமை இடமாக வைத்து தங்களின் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

ரஷிய மருத்துவ குழு

இலங்கை வந்துள்ள ரஷிய மருத்துவ குழு இலங்கை அரசின் அமைதி செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் குழுவை தற்போது விடுதலைப்புலிகள் வசமுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இலங்கை மற்றும் இந்திய-ரஷிய ஹெலிகாப்டர்கள் இலங்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பகுதியில் நிவாரண பணிகளுக்காக மனித நேய அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுனாமி அலை சீற்றத்தின் பேரழிவுக்கு பிறகு ஒரு வாரம் கழித்து சிறப்பு நிவாரண குழுவை இலங்கை அதிபர் நியமித்துள்ளார்.

இவ்வாறு இலங்கை அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினதந்தி
Reply


Messages In This Thread
விடுதலைப்புலிகளுடன் இணைந்து சுனாமி மீட்பு பணி........ - by Vaanampaadi - 01-03-2005, 06:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)