Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வரலாறு
#1
ஈழம் என்று ஆதியில் அழைக்கபட்ட இலங்கையானது ( 65.610 ச.கி.மீ ) பரப்பளவில் அமைந்துள்ள தீவாகும். தமிழர் அந்நாளில் முழுத் தீவுக்கும் ஊரிமையாளராக இருந்தனா;. இன்று வடக்கு கிழக்கு பகுதிகளை மாத்திரம் தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இன்று நாம் வாழும் பிரதேசத்தைத் தமிழீழம் என அழைக்கின்றனர்.

கி.மு.6 நூற்றாண்டு தொடக்கம் ஆண்டாண்டு காலமாக ஏற்பட்ட பல குடியேற்ற அரசியல் நிலைமை களினால்; இன்று நாங்கள் போரட வேண்டிய நிலைமை வந்தது. தமிழீழம் என்பது ஐரோப்பிய கடலோடிகள் வரும் போது தமிழர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரதேசமாகும். தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த தமிழீழத்தின் சில பகுதிகளைப் போர்த்துக்கேயர் முதன் முதல் வெற்றி கொண்டு அடிமைப்டுத்தினர்.

தமிழீழத்தின் எல்லைகளை, எம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஐரோப்பியர் எல்லோரும் அறுதியிட்டுக் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானிய ஆளுநர் நோர்த் அவர்களின் செயலாளர் கிளெக்கோண் இவர் 01.06.1799 திகதி எழுதிய குறிப்பு.

இலங்கைத் தீவானது இரு வேறு நாட்டினர்களால் வெவ்வேறு பகுதிகளாக உரிமை கொண்டாடி ஆட்சி செய்யப்பட்டது. இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையும் உள்ளமேற்குப்பகுதியும் சிங்களவரால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். தீவின் வடக்குக் கிழக்கு நிலப்பகுதிகள் தமிழர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இவ்விரு நாட்டினர்களும் மதத்தாலும் மொழியாலும் வாழ்கைப் பண்பாலும் முற்றிலும் வேறு பட்டிருந்தனர்."

<b>ஆதிகாலம் </b>
ஆதிகாலத்தில் இலங்கைத் தீவானது இந்தியாவுடன் இணைந்தே இருந்தது. அது மாத்திரமன்று அது தென்அமெரிக்க, ஆபிக்கா, அவுஸ்திரேலியா போன்ற கண்டங்களை உள்ளடக்கிய லெமூரியாக்கண்டம் தென் துருவம் வரை நீண்டிருந்தது எனவும், புவியில் ஏற்பட்ட பிரளயங்களினால் அவை பிரிந்துபோயின என்றும் இந்தியாவும் இலங்கையும் ஒன்றாக இருந்தபகுதி வடகிழக்கு நோக்கித் தள்ளப்பட்டதனால் இமயமலை தோன்றியது என்றும் புவியியலாளர் கருதுகின்றனர். இதன் பின்னர் ஏற்பட்ட கடற்பெருக்கு ஒன்றினால் ஈழம் இந்தியாவிலிருந்து(40கி.மி) நீர்ப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளது. இது நிகழ்ந்தது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எனக் கருதப்படுகின்றது.

இராமாயணத்தை எழுதிய வால்மீகியின் காலத்திற்கு முன்னரேயே ஈழம் முழவதிலும் சிவ வழிபாட்டை உடைய நாகரிகம் மிக்க திராவிடத் தமிழ் இன மக்கள் வாழ்ந்தனர் என்ற முடிவுக்கு வரலாம். இராமாயணகாலம் கி;.மு 3500 ஆண்டுகளேனவும், முனிஸ்வர ஆலயம் கட்டுப்பட்டது அக் காலத்தில் எனவும் திரு.காமினி புஞ்சிகாவா என்னும் சிறீலங்கா சரித்திர ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.

இராமாயணத்தை இதிகாசக்கதை என்று கூறுவோரும் உளர். அதேவேளை சீதையைச் சிறை வைத்த இடம் சீதாஎலியா. திருகோணமலையில் உள்ள இராவணன் வெட்டு.மாரீசன் வாழ்ந்த இடம் மாரீசன் கூடல். இராமணை போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.


<b>ஆதிக்குடிகள் </b>
ஆதிகாலம் தொட்டு ஈழத்தில் இயக்கர். நாகர் எனப்படும் இரு திராவிட இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஈழத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட பல தொல்லியற் சான்றுகள் இதனை உறுதிப் படுத்துகின்றன. பழைய கற்காலம் தொட்டு (ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர்) திராவிட இனமக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கி.மு 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஈழம் எங்கும் நாகாpகம் மிக்க மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விவசாயத்திலும் நீர்பாசனத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் குடியிப்புகள் காணப்படுகின்றன. பயிர்செய்நிலம், சிறுகுளம், இடுகாடு கொண்ட குடியிருப்புகள், இம் மக்களின் இரும்பு உபயோகம், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை, ஆழ்கடல் மீன்பிடி முறை, நீர்ப்பாசன முறை, கறுப்பு மட்பாண்ட உபயோகம் என்பன. ஆனைக்கோட்டை. கந்தரோடை ஆகிய இடங்களில் எலும்புக் கூடுடன் கிடைத்துள்ள 'கோவேந்தன்" 'கோவேதன்" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வெண்கல முத்திரையும், வடமேற்கே பூநகாp தொடக்கம் களனி ஆற்றங்கரைவரையும், தென்கிழக்கே மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரையும் காணப்படும் கறுப்பு--சிவப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கி.மு 10ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் நாகரிகம் மிக்க தமிழ் (திராவிட) இனம் வாழ்ந்ததைத் தெரிவிக்கின்றன.

<b>மொழி </b>
இத் திராவிட(தமிழ்) மக்களது மொழி தமிழாக இருந்தது. ஈழத்தின் தென்பகுதியில் வாழ்ந்த இயக்கர் எனப்படும் திராவிட மக்களது மொழி 'எலு" என வழங்கியது. இதுவே ஆதிச் சிங்கள மொழி ஆகும். பின்னாளில் திரிபு பெற்றது அதாவது எலு---கெல என சிங்கவம்சத்தவர் எனத் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் (சிங்க-கெல) சிங்களம் எனும் மொழி உண்டாயிற்று.

கி.மு 5ஆம் நூற்றாண்டளவில் வட இந்தியாவில் இருந்து இந்தோ--ஆரிய இனத்தைச் சேர்ந்த பாளி மொழி பேசும் விஜயன் எனப்படும் அரச குமாரனும் அவனது தோழர்களும் ஈழத்தை வந்தடைந்தன். விஜயன் என்பவன் இயக்கர் அரசி குவேனியை மணம் முடித்து அரசனான்.

அதனைத் தொடர்ந்து ஆரியர் பலர் கூட்டம் கூடடமாக வந்த குடியேறினர்கள். 'எலு" மொழி பேசிய சிங்கள மக்களின் மூதாதையர் பௌத்த மதத்தைத் தழுவிக் கொண்டதனால் அவர்களின் மொழியில் பாளி மொழியின் தாக்கம் அதிகமாயிற்று. இதனால் எலுமொழி மேலும் திரிபடைந்து தமிழ் மொழியில் இருந்து பெருமளவில் வேறுபட்டுவிட்டது. கி.மு முதலாம் நூற்றாண்டவில் இருந்துதான் சிங்கள மொழி மக்களிடையே வழக்கத்திற்கு வந்தது.

<b>சமயம் </b>
ஆதியில் இருந்து தமிழர் சமயம் இயற்கை வழிபாட்டை ஒட்டியதோடு பெண் தெய்வத்தையும்(கொற்றவை), மற்றும் லிங்க வழிபாட்டையும் கைக்கொண்டு இருந்தனர். தமிழ் இலக்கியங்களில் முருகன் போர்க் கடவுளாகச் சித்திரிக்கப்படுகின்றார். தமிழ்ர் வீரத்தை கடவுள் நிலையில் வைத்து வீர வழிபாட்டை மேற் கொண்டு வந்துள்னர். நாகர் (தமிழ்) இன மக்கள் நாகபாம்பு வழிபாட்டையும் மேற்கொண்டனர்.

நாகபாம்பினைக் குறிக்கும் தமிழ்ப் பெயர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது உதாரணமாக நாகராசா, நாகமணி, நாகேந்திரன், நாகம்மா, தமிழன் மேலோர்ங்கிச் சிறப்புடன் வாழவும், பண்பாடும், வலிமையும் மிக்க ஒரு இனமாக வாழவும் வழிகாட்டும் ஒரு முறையாக இருந்தது. அவற்றிடையே ஆரியரால் புகுத்தப்பட்ட பல சமய. சமுதாய பழக்க வழக்கங்கள் தமிழரை; கூறு கூறாகப் பிரித்து தமிழருடைய எழுச்சியைத் தடுத்துத் திசைமாற்றியது.

ஆரியர் வரவின் பின் புகுந்த புத்த மதம் ஈழத்தில் வாழ்ந்து வந்த ஒரு பகுதியினரை முற்றாக பிரித்தெடுத்துச் சென்றது. தொடர்ந்து வந்த இசுலாம் மதம் இன்னோர் பகுதித் தமிழர்களையும் பிரித்தெடுத்துவிட்டது. தொடர்ந்து வந்த கிறித்தவ மதம் மேலும் ஒரு பகுதி மக்களை பிரித்தெடுத்துவிட்டது.

<b>தமிழீழமும் அரசுகளும்</b>
விஜயன் வரவு எனக் குறிப்பிட்ட காலத்திற்கோ அன்றி புத்த மதம் (மகிந்தன்) வரவிற்கு முன்னரேயே ஈழத்தில உள்ள அரசுகள் இந்திய நாட்டுடனும் மற்றும அரேபிய இந்து சமுத்திர நாடுகளுடனும வாணிபத்தில் ஈடுபட்டு இருந்தன. தீவின் மிகப் பெரிய துறைமுகமாக மாதோட்டம்(மன்னார்)விளங்கியது.

இலங்கைத்தீவில் ஆதிகாலத்தில் இருந்த அரசர்களைப் பற்றிய எந்த விபரத்தையும் அறிய முடியாது உள்ளது. மகிந்தன் புத்தமதத்தைப் பரப்ப தேவநம்பியதீசன் காலத்தில் அநுராதபுரத்திற்கு வந்ததினால் அநுராதபுர அரசு தீவில் புத்த மதத்தின் ஆரம்ப இடமாயிற்று. அங்கே வந்த நிலை கொண்ட புத்தபிக்குகள் அரசர்களது வரலாற்றைக் குறித்துவைத்துக் கொண்டனர். இதனால் அநுராதபுர அரசர்களது காலமும் அவ்வப்போது அநுராதபுர அரசைக் கைப்பற்ற நடைபெற்ற யுத்தங்களும் மாத்திரம் இக் குறிப்புக்களில் மூலம் அறியக் கிடக்கின்றது.

தேவநம்பியதீசன் கி.மு 147 முதல் கி.மு 101 வரை ஆட்சி செய்தான். இவன் தனது தந்தை மூத்தசிவன் இறந்த பின் ஆட்சிக்கு வந்தான். தீசனின் பின் அவனது சகோதரன் சூரதீசன் ஆட்சிக் காலத்தில் சேனன் குத்திகன் என்னும் இரு தென்னிந்திய தமிழர்கள் அநுராதபுர அரசைக் கைப்பற்றி ஆண்டனர். இவர்களை தேவநம்பியதீசன் பரம்பரையில் வந்த அசேலன் என்பான் வெற்றி கொண்டான். அசேலனை எல்லாளன் வெற்றி கொண்டு 40 ஆண்டுகள் ஆட்சி செய்தான். சரித்திரம் தெரிந்த காலம் முதற் கொண்டு தென்னிந்திய அரசுகள் இங்கு அரசு வாரிசு உரிமையினால் ஏற்பட்ட யுத்தங்களை அடக்குவதற்கே துணை செய்ய வந்தனர்.- காலத்துக்குக் காலம் ஆட்சியும் புரிந்தனர். இத் தீவைக் கைப்ர்ற்றி ஆளும் நோக்கோடு தென்னிந்தியரின் பெரும்பாலான படை எடுப்புகள் நடைபெறவில்லை.

<b>எல்லாளன் ஆட்சி</b>
எல்லாளன என்னும் தமிழ் அரசன் காலத்தில் தீவு முழவதும் அவன் ஆட்சி உட்பட்டு இருந்தது. எல்லாளனை(கி.மு 145--101) துட்டகைமுனு என்பவன் வெற்றிகொண்டதை சிங்களவர் இன்றும் முக்கிய நிகழ்வாக கருதுகின்றனர். படைகள் மோதாது நேருக்கு நேரான சண்டையின் போது எல்லாளன் யானையின் நின்றும் கீழே வீழ்ந்து இறந்தான். எல்லானின் பெருந்தன்மையும். வீரத்தையும் மதித்து அவன் ஞாபகமாகத் துட்டகைமுனு ஆயிரங்கால்மண்டபம் ஓன்றைக் கட்டினான்.

அவ்வழியாற் செல்வோர் தரித்து வணங்கிச்செல்ல வேண்டும் எனவும் ஆணையிட்டான். இப்பழக்கம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் இருந்தமை, நடைபெற்ற போர் .இனவாதப்போர் அல்ல என்பதையும், மக்கள் எல்லான் மேல் பொண்டிருந்த மரியாதையும் எடுத்துக்காட்டுகின்றன.

இவ் யுத்தம் சிங்கள-தமிழ் யுத்தமாக இருக்கமுடியாது. அத்துடன்; ஆங்கிலேயர் காலம் வரை கல்யாணி அரசு முதற் கொண்டு அநுராதபுர அரசு தீகவாவி அரசு மகாகமை அரசு வரையுள்ள கரையோiப் பகுதிகள் தமிழர் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தமை வரலாற்று உண்மையாகும்.

சமயப் போட்டியும்-இனவாதமும் 3 ஆம் நூற்றாண்டு முதல் ஆரம்பித்து இச் சமயப் போட்டிகளும் ஈழத்தில் குழப்பமான அரசியல் நிலைதோன்ற ஒரு காரணியாக இருந்தன. இச்சமயப் போட்டிகளின் விளைவாக சைவசமயத்தைத் தழுவியோருக்;கும்.புத்மசமயத்தைத் தழுவியோகுக்கும் இடையில் வேற்றுமனப் பான்மை வளர்ந்தது ஆதலால் சமய வெறுப்புணர்வு இன வெறுப்புணர்வாக மாறியது. தமிழ்மக்கள் மீது வெறுப்புணர்வாக கொண்டவர்களாக வாழ புத்தமத அமைப்புகள் வழிவகுத்தன. இதனால் 3ஆம் நூற்றாண்டு முதல் துளிர் விடத் தொடங்கிய இனவாதம் புத்தமத அமைப்புககளால் இன்றுவரை வளர்க்கப்பட்டு வருகின்றன. இனவாதம் நிரந்தரமான ஒரு தன்மான உணர்வாகச் சிங்களமக்;களிடையே உருப்பெற்று விட்டது

கி.பி 140அளவில்; கிரேக்க புவியியல் அறிஞர் புகழ்பெற்ற உலகப் படத்தை வரைந்தர் இதில் இலங்கைத் தீவை ..சாலிக்கே..என்று குறிப்பிட்டதுடன் அவரது படத்தில்; குறிப்பிட்டுள்ள இடங்களின் பெயர்கள் யாவும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன.


<b>தென்னிந்திய ஆட்சி </b>
9ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் சோழப்பேராசு பாண்டிய நாட்டைக் கைப்பற்றப் போரிட்ட போது பாண்டியனுக்கு உதவியாக அநுராதபுரப் படைகள் சென்றன. இருப்பினம் தோல்வி கண்ட பாண்டிய அரசன் மானவர்மன் இராசசிங்கன் இலங்கைக்கு வந்து தனது முடியையும் சிங்காசனத்தையும்.

3ஆம் உதயன்(கி.பி 945-952) அடைக்கலமாகக் கொடுத்தார்;. சோழர் அதனை ஒப்படைக்கும்படி கேட்டனர். உதயன் கொடுக்க மறுத்தனால் கி.பி 949இல்; முதலாம்; பராந்தகச் சோழன் இலங்கையைத தாக்கி அநுராதபுர அரசைக்; கைப்பற்;றினான். இருப்பினும் பாண்டிய முடியும்;.சிங்காசனமும்; தெற்கு நோக்கி நகர்த்தப் பட்டன.கி.பி 993இல் இராசராசன் படையுடன் வந்து தீவின் மேலும் பல பகுதிகளை கைப்பற்;றிக் கொண்டான்.அப்போது இருந்த ஈழ அரசுகள் அனைத்தும் சோழரின் ஆட்சியின் கீழ் வந்தன

கி.பி 1070இல் சோழப் பேராசில் உள்நாட்டுக் கலகம் உண்டாக இலங்கையின் தென் முனையில் இருந்து படையுடன். கீர்த்தி என்பான(;விஜயபாகு)பொலநறுவை அரசை கைப்;பற்றிக்; கொண்டான். இதனைத் தொடர்ந்து கி.பி 1255இல் சந்திரபானு என்னும் பாண்டிய அரசன் பொலநறுவை ஆண்டான.; 14ஆம் நூற்றண்டின் முற்பகுதியில்(கி.பி 1330)பாண்டிய தலைநகர் மதுரையை முகமதியர் வெற்;றி பெற, பாண்டியர் மேலாட்சியில் இருந்து தமிழீழம்; விடுபட்டது.

<b>யாழ்ப்பாண அரசு </b>
இக்காலத்தில் இலங்கைத் தீவில் பின்வரும் அரசுகள் இருந்தன. அவை மாஒயா தொடக்கம் தெற்குக் கரையோரமாக வளவகங்கை வரையுள்ள தெற்கு, தென்மேற்கு. மத்திய பிரதேசங்களைக் கொண்ட சிங்கள அரசும், வளவகங்கை தொடக்கம மகாஒயா வரை வடக்குக்; கரையாக உள்ள தமிழ்ப் பிரதேசங்களை உள்ளடக்கிய தமிழீழ அரசும் ஆகும். இப் பிரதேசங்கள் பல சிற்றரசுகள்;(வன்னிமைகள்) கொண்;டிருந்தன. தமிழீழம் முழவதும் பல வன்னிமைகள் இருந்தன. இவை தமது சொந்தப்படை அமைப்புகள். அரசு சின்னங்கள் என்பனவற்றைக் கொண்டு விளங்கின. தமிழீழத்தில பின்வரும் வன்னிமைகள் இருந்தாக அறியப்படுகிறது.

1)பெரும் காற்றுப்ப்பற்று
2)முசலிப்பற்று
3)மேற்குழூலை
4)சின்னச் செட்டிகுளம்
5)நடுச் செட்டிகுளம்
6)கிழக்குமுலை தெற்கு
7)கிழக்குமுலை வடக்கு
8)மேல்பற்று கிழக்கு
9)மேல்பற்று தெற்கு
10)மேல்பற்று வடக்கு
11)பனங்காகம்
12)உடையாவு+ர் 29)புத்தளம்
13)துணுக்காய்
14)கரைச்சி
15)புதுக்குடியிருப்பு
16)முள்ளியவளை
17)காpக்கட்டுமுலை வடக்கு
18)காpக்கட்டுமுலை தெற்கு
19)மகாவன்னி
20)கொட்டியாரம்
21) ??
22) கட்டுக்குளம்
23)மட்டக்களப்பு
24)பழுகாமம்
25)மண்முனை
26)போரதீவு
27)பாணமை
28)யாலா

<b>கி.பி. 1215 இலிருந்து யாழ்பாண இராச்சியத்தை ஆண்ட அரசர்கள்</b>
இவ் வன்னிமைச் சிற்றரசுகள் யாழ்பாண இராச்சியமாகிய தமிழீழத்தைப் போர்த்;துக்கேயர் கைப்பற்றிய பின்னரும் ஆங்கிலேயர் காலம் வரை தத்தமது பிரதேசத்தை நிர்வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண அரசு 13ஆம் நூற்றாண்டின் ஆரம்மகாலம் முதல் உலகில் இருந்த ஒரே ஒரு சுதந்திர தமிழ் அரசாகவும் வலிமை மிக்கதாகவும் இருந்தது. இந்து சமுத்தரத்தின் வாணிபம் இவர்கள் கையில் பெருமளவில் இருந்தாக அறியப்படுகிறது.இக்காலத்தில் கோட்டை, கண்டி அரசுகள் யாழ்ப்பாண அரசின் ஆணையை ஏற்றுக் கொண்டு திறை செலுத்தின. இக்காலத் தமிழீழ நாணயங்கள் சேதுநாணயங்கள் என அழைக்கப்பட்டன..

கி.பி. 1215 இலிருந்து யாழ்பாண இராச்சியத்தை ஆண்ட அரசர்கள்

கலிங்கமாகன்---------(1215-1240)

குலசேகர பராசசேகரம்----------- (1240-1256)

குலொத்துங்கன்---------------(1256-1279)

விக்கிரமன்------------------ (1279-1302)

வரோதயன்------------------; (1302-1325)

செகராசசேகரன்----------------(1325-1348)

குணபூசணன்------------------(1348-1371)

வீரோதயன்-------------------(1371-1380)

ஜயவீரன்--------------------(1380-1410)

குணவீரன்-------------------(1410-1446)

கனகசூரியன்------------------(1446-1478)

பராசசேகரன்;------------------(1446-1519)

சங்கிலி செகராசசேகரன்------------(1519-1564)

புவிராசபண்டாரம் ----------------(1564-1565)

குஞ்சிநயினார்------------------(1565-1570)

பொpயபிள்ளை செகராசசேகரன்;----------(1570-1582)

புவிராசபண்டாரம்----------------(1582-1591)

எதிர்மன்னவசிங்க பராசசேகரன்---------(1591-1615)

சங்கிலிகுமாரன்------------------(1615-1619)

போர்துக்கேயர் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றும் வரை 400 வருடங்கள் செழிப்பு மிக்க சுதந்திர நாடாக தமிழீழம் திகழ்ந்தது.


நன்றி : தாய்நிலம்.கொம்
Reply


Messages In This Thread
வரலாறு - by விதுரன் - 06-08-2003, 12:33 PM
[No subject] - by Guest - 06-09-2003, 01:31 PM
[No subject] - by sethu - 06-21-2003, 10:27 AM
[No subject] - by sethu - 06-25-2003, 07:10 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:27 PM
[No subject] - by sethu - 07-11-2003, 08:05 PM
[No subject] - by GMathivathanan - 07-11-2003, 09:06 PM
[No subject] - by sethu - 07-12-2003, 09:19 AM
[No subject] - by P.S.Seelan - 07-12-2003, 11:14 AM
[No subject] - by sethu - 07-13-2003, 09:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)