Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Sri Lanka tsunami refugee camps flooded in heavy rains
#2
மட்டு அம்பாறை பகுதிகளில் பலத்த மழை

மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடந்த 12 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மட்டு அம்பாறை பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 320 அங்குல நீர் மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடியிலிருந்து வாழைச்சேனை செல்லும் பாதையில் கொம்மாந்துறைää சித்தான்டிää முறக்கொட்டாஞ்சேனைää வந்தாறுமூலை ஆகிய பகுதிகளிலும்ää தாளங்குடாää புதுகுடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் பரவலாகவும் பலத்த மழை பெய்துள்ளது. காரை தீவிலிருந்து அம்பாறைக்கு செல்லும் பகுதியில் பலத்த பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக மக்கள் மீண்டும் மீண்டும் பேரவலங்களை எதிர்நோக்கி நிற்கிறார்கள். இதைச் சொல்ல தமிழில் வார்த்தைகள் இல்லை.

பிந்திய செய்தி

இப்போது சில இடங்களில் வெள்ளம் வடிந் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-01-2005, 12:24 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)